;
Athirady Tamil News

சுவிஸில் ஈபிஆர்எல்எப் (நாபா) தலைவர் சுகுவின், “நூல் வெளியீட்டு” நிகழ்வு.. (வீடியோ & படங்கள்)

சுவிஸில் ஈபிஆர்எல்எப் (நாபா) தலைவர் சுகுவின், “நூல் வெளியீட்டு” நிகழ்வு.. (வீடியோ & படங்கள்) ஈபிஆர்எல்எப் (நாபா) தலைவர் சுகு தோழர் எனும் திருநாவுக்கரசு ஸ்ரீதரன் அவர்களின், “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக”.., நூல் அறிமுக விழா 03.06.2018 அன்று சுவிஸ் சூரிச் நகரில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில், பல முன்னாள் போராளிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேற்படி “நூல் வெளியீட்டு” நிகழ்வை, திருமதி.பத்மபிரபா லோலன் அவர்கள் தலைமை தாங்க, திரு.பெர்னாண்டோ அவர்கள் வரவேற்புரை வழங்க, திரு.ரவி (மனிதம்) அவர்களும், திரு.சன் தவராசா (ஊடகவியளாளர்) அவர்களும் நூல் விமர்சனம் செய்திருந்தனர்.

மேலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில், திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்), சுவிஸ் சூரிச் தமிழ்ச்சங்கம் சார்பில் திரு.இரத்தினகுமார், பிரான்ஸ் திரு.சோலையூரான், திரு.ராஜன், திரு.பொலிகை ஜெயா, திரு.கல்லாறு சதீஸ், திரு.விந்தன் ஆகியோரின் வாழ்த்துரைகளும், சிற்றுரைகளும் இடம்பெற்ற பின்..,

நூலின் ஆசிரியர், ஈபிஆர்எல்எப் (நாபா) தலைவர் சுகு தோழர் எனும் திருநாவுக்கரசு ஸ்ரீதரன் அவர்களின் ஏற்புரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது…

தகவல் & படங்கள்… திருமதி பத்மபிரபா லோலன்.

You might also like

Comments are closed.