;
Athirady Tamil News

சுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. இறுதித் தீர்ப்பில்; ஐவர் விடுதலை, ஏனைய எண்மருக்கும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை ..! (வீடியோவுடன் முழுமையான விபரங்கள்)

0

சுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. இறுதித் தீர்ப்பில்; ஐவர் விடுதலை, ஏனைய எண்மருக்கும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை ..! (வீடியோவுடன் முழுமையான விபரங்கள்)

சுவிட்சலாந்து நீதித்துறையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரிய வழக்கு என எதிர்பார்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்காக சுவிட்சர்லாந்தில் செயற்பட்ட WTCC எனும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முடிவுற்று இன்று காலை 11.00 மணிக்கு Belinzona வில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து குற்றவியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் முன்னிலையில் குற்றஞ் சாட்டப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பான WTCC எனும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களின் அறிமுகத்துடன் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பமாகி இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

தீர்ப்பின் ஆரம்பத்தில் அரச சட்டத்தரணியின் கோரிக்கையான “அனைவரும் குற்றவாளிகள், அனைவருக்கும் 18 முதல், ஆறரை வருடத் தீர்ப்பு வழங்க வேண்டுமெனும் கோரிக்கை” நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக, சில சுவிஸ் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியினையே “அதிரடி” இணையமும் பிரசுரித்து இருந்தது.

ஆயினும் இறுதியாகக் கிடைத்த தகவலின்படி, வழக்கின் முக்கிய தீர்ப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பானது, “பயங்கரவாத குற்றவியல் அமைப்பு” இல்லை எனவும், இந்த அமைப்புக்காக சுவிஸ் வாழ் தமிழ் மக்களிடம் “பலாத்காரமாக நிதி சேகரித்தது” எனும் குற்றச்சாட்டு, ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட இல்லை எனவும், தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, மேற்படி குற்றங்கள் சாட்டப்பட்டு இருந்த, ஜேர்மன் பிரஜையான திரு.டானியல் ஷ்மித், புலிகளின் சீயோன் மாவட்ட முக்கியஸ்தரான திரு.கதிர்காமு சிவலோகநாதன், புலிகளின் லௌசான் மாவட்ட முக்கியஸ்தரான திரு.கபிதாஸ் கணபதிப்பிள்ளை, சுவிஸ் புலிகளின் முன்னாள் அலுவலகப் பொறுப்பாளர் யோகேஷ் எனும் யோகேஸ்வரன் வெள்ளையன், புலிகளின் முன்னாள் ஈவொர்டென் மாவட்டப் பொறுப்பாளரான குமார் எனும் திரு.வெங்கடாசலம் வேலும்மயிலும் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதுடன்

இதேவேளை சுவிஸ் விடுதலைப் புலிகளினருக்காக தவறான பத்திரங்கள் தயாரித்து தொழில் முறையில் ஏமாற்றுவேலை செய்த குற்றச்சாட்டில் “அன்சலி பைனான்ஸ்” திரு.சோமசுந்தரம் இராமலிங்கம் என்பவருக்கு 24 மாத ஒத்திவைக்கட்ட சிறைத் தணடனையும், அதே குற்றச்சாட்டில் “அனிஷ் கிரெடிற்” திரு.கனகசபை ஆனந்தராஜா என்பவருக்கு 11 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தணடனையும், அதேபோல் “மணி எக்ஸ்சஞ்சு” திரு.சின்னத்துரை, “தாய்வீடு கரண்” எனும் திரு.கருணாகரன் நடராஜா, “உண்டியல் சசி” எனும் புலிகளின் முன்னாள் பேர்ண் மாவட்டப் பொறுப்பாளரான சசிதரன் இரத்தினவேல் போன்றவர்களில் சிலருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.,

அதேபோல் விடுதலைப் புலிகளின் முன்னாள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளரும், தற்போதைய புலிகளின் சுவிஸ் கிளை முக்கியஸ்தர்களால் ஒதுக்கப்பட்டவர் அல்லது ஒதுங்கி வாழ்பவர் ஆகிய, குலம் அண்ணர் என்று அழைக்கப்படும் திரு.செல்லையா குலசேகரசிங்கம், விடுதலைப் புலிகளின் முன்னாள் சுவிஸ் கிளை நிதிப் பொறுப்பாளரான அப்துல்லா எனும் திரு. செல்லையா ஜெயபாலன், விடுதலைப் புலிகளின் முன்னாள் சுவிஸ் கிளை முக்கியஸ்தரான மாம்பழம் என்று அழைக்கப்படும் திரு. காசி இராமகிருஷ்ணன் ஆகியோருக்கு காசைக் (கறுப்புப் பணத்தைக்) கழுவுதல் புலிகளின் நிதிவளத்தை அதிகரிப்பதுக்காக சுவிஸ் வங்கியில் தொழில் ரீதியாக ஏமாற்று வேலை செய்தல் ஆகிய குற்றச் சாட்டுக்காக, இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரையிலான ஒத்திவைக்கப்படட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. ,

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 13 பேரில் ஐவர் ஆதாரங்கள் இல்லாத நிலையில், இழப்பீட்டு தொகையுடன் விடுவிக்கப்பட்ட அதேசமயம் ஏனைய எண்மருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தணடனையுடன் அபராதமும் வழங்கித்  தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

சுவிஸில் புலிகளின் முன்னாள் முக்கியதர்களுக்கெதிரான வழக்கும், அவர்களுக்கு ஆதரவான போராட்டமும்… (படங்கள்)

http://www.20min.ch/schweiz/news/story/WTCC-ist-laut-Gericht-nicht-kriminell-17961116

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + nineteen =

*