;
Athirady Tamil News

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ)

0

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் ஊரதீவுப் பிரதேசத்தில் உள்ள “மடத்துவெளிப் பொதுக்கிணறு” மீள்புனரமைக்கும் வேலை, கடந்த 13.07.2018 ஆரம்பமாகியது நீங்கள் அறிந்ததே. மேற்படி “மடத்துவெளி பொதுக்கிணற்றை” மீள்புனரமைக்கும் செலவில் பாதியை (அரைவாசியை) சுவிஸில் உள்ள ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த ஆறு பேர் பொறுப்பெடுத்து, மிகுதியை “சுவிஸ் ஒன்றியம்” ஏற்று இந்நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது.

ஒன்றிய தலைமையின் வேன்டுகோளை ஏற்று மடத்துவெளி பொதுக்கிணற்று திருத்தல் பணிக்காக எமது 7ம்; 8ம் வட்டாரம் உறவுகள் ஆறு பேரான.. 1.திரு.கந்தையா கணேசராசா -சூரிச், 2.இராசமாணிக்கம் இரவீந்திரன் -சூரிச், 3.சுப்பிரமணியம் சண்முகநாதன் -சூரிச், 4.விஸ்வலிங்கம் அரிசந்திரதேவன் -ஆராவு, 5.அருணாசலம் திகில்அழகன் -பேர்ன், 6.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) -பேர்ன், ஆகியோர் தலா முந்நூறு சுவிஸ் பிராங் வீதம் பங்களிப்பு செய்ய, மிகுதித் தொகையை “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” பொறுப்பெடுத்து, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” இந்த கிணற்று வேலை ஆரம்பமாகி உள்ளது.

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் சார்பில் பொருளாளர் திரு. கைலாசநாதன் (குழந்தை) விடுத்த வேன்டுகோள்களை ஏற்று, எவ்வித மறுப்பும் சொல்லாமல் உதவி செய்த சுவிஸ் வாழ் ஊரதீவு, மடத்துவெளியை சேர்ந்த ஆறு நண்பர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பில் எமது நன்றிகள் பல..

கடந்த 13.07.2018 அன்று ஆரம்பமாகிய, புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலைத்திட்டம் மிகவிரைவில் முடிவுறுவதுக்காக அயராது பாடுபடும் புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான “சமூக சேவகி” திருமதி.த.சுலோசனாம்பிகை ஆகியோருடன் திரு வனோஜன் தலைமையிலான அவர்களின் கட்டிட தொழிலாளர்கள் குழுவினருக்கும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில் நன்றிகள் பல.

அதேபோல் மேற்படி கிணற்றுவேலை ஆரம்பமாகிய நாள்முதல் தினமும் பலதடவைகள் அங்குள்ளவர்களுடன் “தனது சொந்த செலவில்” தொடர்பினை ஏற்படுத்தி, மேற்படி வேலைகள் துரிதகதியில் முடிவுற, அயராது செயல்பட்டுக் கொண்டிருக்கும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுக்கும் சுவிஸ் ஒன்றியத்தின் “நிர்வாக சபை” சார்பில் நன்றிகள் .

இதேவேளை மேற்படி கிணற்றுவேலை நான்கு வருடங்களுக்கு முன்னரே சுவிஸ் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட போது, தனிப்பட்ட அமைப்பு ஒன்றினால் தாம் செய்யவுள்ளதாக தெரிவித்ததை அடுத்து நாம் இத்திட்டத்தை கைவிட்டு இருந்தோம், ஆயினும் அவர்களினால் மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில், சுவிஸில் உள்ள ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த பலரும் குறிப்பாக ஒன்றிய பொருளாளரினால் எழுத்துமூலம் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து..,

இதுவோர் “பொதுத்தேவை” என்ற போதிலும், ஒன்றியத்தின் நிதியை தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பெருமளவில் செலவழிப்பது விமர்சனத்தை ஏற்படுத்தும் என்பதை “ஒன்றியத் தலைவரினால்” தெளிவுபடுத்தியவுடன், அதே இடத்தை சேர்ந்த, சுவிஸில் வதியும் ஆறு குடும்பத்தினர் பாதி செலவை தந்து, இந்த நடவடிக்கையை “சுவிஸ் ஒன்றியத்தினால்” முன்னெடுத்து உள்ளோம்.

மேலும் மேற்படிக் கிணறு “மண்திட்டு” அமைந்துள்ள பகுதியில் காணப்படுவதால் பெருமளவு செலவையும், சிரமத்தையும் எதிர்நோக்கி உள்ள போதிலும், இவ்வேலைத் திட்டத்தை மிகவிரைவில் வெற்றிகரமாக முடிப்பதுக்கு திடசங்கற்பம் பூண்டு செயற்பட்டு வருகிறோம்.

ஏனெனில் அக்கிணற்றின் மண்களையும், கற்களையும் இயந்திரம் கொண்டு தொடர்ந்து சிலநாட்களாக வெளியேற்றிய போதிலும், தொடர்ந்து மண்கள், கற்கள் சரிந்து கிணறானது குளம் போல் காட்சி தந்தது. ஆயினும், தொடர்ச்ச்சியாக நடைபெற்ற மீள்புனரமைப்பு வேலை காரணமாக கிணற்றின் மீள்புனரமைப்பு வேலை முடிவுறும் தருவாயில் உள்ளது. தற்போதும் தொடர்ச்சியாக மீள்புனரமைப்பு வேலை நடைபெற்று வருகிறது.

இதேவேளை மேற்படிக் கிணற்று மீள்புனரமைப்பு வேலைகளை, ஊரதீவுப் பிரதேச பெருமக்களும், மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்து விடுமுறைக்கு வந்த ஊரதீவு சொந்தங்களும் மற்றும் சில பொதுமக்களும் இன்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டு தமது மகிழ்ச்ச்சியை வெளிக்காட்டியதுடன் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்துக்கும், மேற்படி கிணற்று புனரமைப்புக்கு பங்களிப்பு செய்த சுவிஸ் வாழ் ஊரதீவு, மடத்துவெளி சொந்தங்களுக்கும் தமது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

குறிப்பாக டொக்ரர் திரு.ஆ.பேரின்பநாதன், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், ஓய்வுநிலை கிராம சேவையாளர் திரு.ந.தண்டாயுதபாணி, திரு.இ.குகநாதன் (வர்த்தகர் யாழ்ப்பாணம்) திரு.ந.கோணேஸ்வரன் (வர்த்தகர் யாழ்ப்பாணம்), திரு.இராஜரூபசர்மா (ஆலயகுரு -பானாவிடை சிவன் ஆலயம்), திரு.க.குலசேகரம் (புங்.மகா வித்தியாலய ஓய்வுநிலைக் காவலாளி), திரு.சே.ஜெகதீஸ்வரன் (தண்ணீர்பவுஸர் உரிமையாளர்), திரு.சோ.மணிவண்ணன் (வர்த்தகர் சுன்னாகம்), திரு.சி.பாலசுப்ரமணியம், திரு.மதியழகன், திரு.இ.கோகுலன் (டென்மார்க்) போன்ற ஊரதீவு பெருமக்களுடன், பொதுமக்கள் சிலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(இதில் பதிவிட்டுள்ள சில படங்கள், ஒருவாரத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டது)

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
29.07.2018

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − 2 =

*