;
Athirady Tamil News

சுவிஸில் புலிகளிடையே மீண்டும் குழப்பம்; மாவீரர் தினத்தின் குளறுபடியின் உண்மை நிலையென்ன?? (படங்களுடன்)

0

சுவிஸில் புலிகளிடையே மீண்டும் குழப்பம்; மாவீரர் தினத்தின் குளறுபடியின் உண்மை நிலையென்ன?? (படங்களுடன்)

சுவிஸில் விடுதலைப் புலிகள் ஏற்கனவே, நான்கு பிரிவாக பிரிந்து செயல்படும் நிலையில் “மாவீரர் தினத்தை” முன்வைத்து மற்றுமோர் பிரிவும் ஆரம்பமாகி உள்ளது. “ரி.சி.சி” எனும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, “தமிழர் இயக்கம்”, “அக்கினிப் பறவைகள்”, முன்னாள் பொறுப்பாளர் குலம் என்பவரின் தலைமையில் ஒருபிரிவு என்று பல பிரிவுகளாக சுவிஸில் உள்ள புலிகள் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது, “போராளிகள் கட்டமைப்பு” என்பவர்களும் புலிகள் சார்பில் செயல்பட தொடங்கி உள்ளனர்.

சுவிஸ்லாந்து நாட்டில் ரகுபதி தலைமையில் “ரி.சி.சி” எனும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு “தாமே, புலிகள் அமைப்பு” என்று கூறிவரும் நிலையில், தமிழர்களின் பிரச்ச்சினையை சர்வதேச அளவில் எடுத்து சென்று, தமிழ்மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ரீதியில் சுவிஸ் புலிகளில் இருந்த மற்றுமோர் பிரிவினரால், “தமிழர் இயக்கம்” எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

அதேபோல் புலிகளில் இருந்த இளையோர் சிலரால், தமிழரின் அடையாளம் அழிபட விடக்கூடாது எனும் ரீதியில் “அக்கினிப் பறவைகள்” எனும் அமைப்பும், சுவிஸ் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர் குலம் என்பவரின் தலைமையில் உள்ளோரும் ரகுபதி தலைமையை நிராகரித்து “முன்னாள் போராளிகள் உட்பட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில்” செயல்பட்டு வரும் இவ்வேளையில், “இறுதி யுத்தத்தில்” பங்காற்றி, சுவிஸ் வந்துள்ளவர்களின் தலைமையில், “போராளிகள் கட்டமைப்பு” எனும் மற்றுமோர் அமைப்பும் உருவாக்கம் பெற்று உள்ளது.

சுவிஸ்லாந்து நாட்டில் ரகுபதி தலைமையில் புலிகளின் “ரி.சி.சி” எனும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, வழமை போல் இம்முறையும் “மாவீரர் தினத்தை” நினைவு கூரவுள்ளனர். ஆயினும் “இறுதி யுத்தத்தில்” பங்காற்றி சுவிஸ் வந்துள்ளவர்களின் தலைமையில், உள்ள “போராளிகள் கட்டமைப்பு” எனும் அமைப்பினர் “இறுதி யுத்தத்தில்” மாவீரர்கள் ஆகிய புலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட அனைத்துப் போராளிகளின் புகைப்படங்களும், மாவீரர் தினத்தில் வைக்க வேண்டுமெனும் கோரிக்கையுடன்” இவர்களுடன் நீண்ட நேரம் பேசசுவார்த்தை நடத்தி உள்ளனர்.

ஆயினும் “எப்போதும் சொல்வது போல்”.. “தலைமை எமக்கு அறிவிக்காதவர்களை, மாவீரர்கள் பட்டியலில் பெயரிடவோ அல்லது அவர்களின் புகைப்படங்களை வைக்கவோ எம்மால் முடியாது, “தலைமை வந்து அறிவித்தால் மட்டுமே ஏற்போம்” என்று புலிகளின் ரகுபதி தலைமையான “ரி.சி.சி” எனும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பால், புலிகளின் “போராளிகள் கட்டமைப்பு” அமைப்பினருக்கு பதில் தரப்பட்டு உள்ளது.

இதன்போது, “புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான்” ஆகியோரின் புகைப்படங்களும் வைக்கப்படுமா?” எனும் கேள்வியும் முன்வைக்கப்பட்டு விவாதித்த போது, “முதற்கட்டமாக இறுதிச்சமரில் பலியான முக்கிய தளபதிகளில் உறுதி செய்யப்படட நூற்றுக்கணக்கானோரின் புகைப்படங்களை வைக்க வேண்டுமெனவும், குறிப்பாக முக்கிய தளபதிகளான நடேசன், சூசை, பானு, ரமேஷ், புலித்தேவன், ஜெயம், தீபன், துர்க்கா, துவாரகா, இசைப்பிரியா உட்பட நூற்றுக்கணக்கானோரின் புகைப்படங்களை வைக்க வேண்டுமெனவும்* கோரிக்கை முன்வைக்கப்படட போதிலும், புலிகளின் ரகுபதி தலைமையான “ரி.சி.சி” எனும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பால் “தலைமை எமக்கு சொல்ல வேண்டும், அதுவரை இதனை ஏற்றுக் கொள்ள முடியாது” எனக்கூறி இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது.

அதாவது புலிகள் உயிருடன் இருந்த காலத்தில் (2009 க்கு முன்னர்) மக்களிடம் “புலிகள் அமைப்பின்” பெயரில் சேகரித்த நிதிக்கு கணக்கு விபரமென்ன? மற்றும் அந்த நிதியை, “போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், பொதுமக்களுக்கு வழங்குமாறு” உலகம் பூராவும் உள்ள புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு, மக்களினால் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, “தலைவர் மீண்டும் வருவார், அவர் வந்து கணக்கு விபரம் கேட்கும் போது கணக்கு விபரத்தையும், நிதியையும் ஒப்படைப்போம்” என்று சொல்லும் பதில் போன்றே, இதுக்கும் பதிலளித்து “இறுதி யுத்தத்தில் பலியான முக்கிய தளபதிகளையும், மாவீரர்களையும்” ஏமாற்றி உள்ளனர்.

இதன் எதிரொலியாக, புலிகளின் “போராளிகள் கட்டமைப்பு” அமைப்பினர், “புலிகளின் அனைத்து பிரிவினரையும் உளவாங்கி” எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25.11.2018) அன்று சூறிச்சில் “அனைத்து முக்கிய தளபதிகளின்” புகைப்படங்களுடன் “மாவீரர் தினத்தை” நினைவுகூர உள்ள அதேவேளை, எதிரவரும் செவ்வாய்க்கிழமை “ரி.சி.சி” எனும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பால், “மாவீரர் தினம்” நினைவு கூறப்பட உள்ளதாக அறிவித்து உள்ளனர். அதாவது ஏனைய நாடுகள் போன்றே இங்கும் இரண்டு மாவீரர் தினம் நடைபெற உள்ளது.

(இதுகுறித்து வெளிவந்த அறிக்கைகளையும், துண்டுப் பிரசுரங்களையும் கீழே இணைத்துள்ளோம்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − eleven =

*