;
Athirady Tamil News

சுவிஸில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியும், சுவிஸ் புலிகளின் குளறுபடிகளும்… நடந்தது என்ன?? (படங்கள்)

0

சுவிஸில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியும், சுவிஸ் புலிகளின் குளறுபடிகளும்… நடந்தது என்ன?? (படங்கள்)

கடந்த இருபத்தி மூன்று வருடமாக தனித்து செயல்பட்டு வந்த “சுவிஸ் தமிழர் கிரிக்கெட் சம்மேளத்தினால்” நாளையதினம் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டிக்கு எதிராக, சுவிஸ் புலிகள் எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்” விளையாட்டுத் துறையினரால் அதேநாளில் வான்படைச் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் நினைவு சுமந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஏற்பாடாகி இருந்தது. இதனை முன்னிட்டு தாம் தனித்தே நடத்துவதாக “சுவிஸ் புலிகளினால்” அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு இருந்தது. (அந்த அறிக்கை இது..👇👇👇👇👇👇)

அனைவருக்கும் வணக்கம்
எதிர்வரும் 14.07.2019 அன்று நடைபெறவிருக்கும் கேணல் சங்கர் அண்ணா நினைவு சுமந்த துடுப்பாட்டப்போட்டி திட்டமிட்டபடி Bern Wankdorf மைதானத்தில் நடைபெறும்

முரண்பாடுகளைத் தவிர்த்து அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டுமென்பதற்காக நாம் முடிந்தவரை முயற்சி செய்தோம். தமிழீழத்தின் மென்பந்து துடுப்பாட்டத்துக்கான தேசியக்கிண்ணம் சங்கர் அண்ணாவின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது.

அதன் தொடர்ச்சியாக நாங்கள் புலத்திலும் அதனைச் செய்ய வேண்டும். எனவே குறித்த திகதியினை எமக்கு விட்டுத் தரும்படி எடுத்துக் கூறியும் சம்மேளனம் தொடர்ந்தும் நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருந்ததால் நாம் அதிலிருந்து விலகி எமது சுற்றுப் போட்டியினை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இந்நிலையில் சங்கர் அண்ணாவின் நினைவு சுமந்த சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பித்த கழகங்களுக்கு எமது நன்றினைத் தெரிவித்துக் கொள்வதோடு இதுவரை விண்ணப்பிக்காத கழகங்களையும் நாளை இரவு 12.00 மணிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அன்புரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.

மண்ணுக்காக மரணித்த மாவீரர் வான்படைச் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அண்ணா நினைவு சுமந்த சுற்றுப்போட்டியில் கலந்து கொண்ட காரணத்துக்காக, தங்கள் கழகம் சம்மேளனத்தில் இருந்து நீக்கப்பட்டால் தங்கள் கழகம் தொடர்ந்து விளையாடுவதற்குரிய சூழ்நிலையினை துடுப்பாட்டப்பிரிவு நிச்சயம் மேற்கொள்ளும் என்பதனையும் தங்களுக்கு உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகிறோம்

நன்றி
மென்பந்து துடுப்பாட்டப்பிரிவு
விளையாட்டுத்துறை. (சுவிஸ் விடுதலைப் புலிகள்)

***********************************

ஆயினும் இந்த “கிரிக்கெட் சுற்றுப் போட்டியில்” கிரிக்கெட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட விளையாட்டுக் கழகங்களும், சுவிஸ் புலிகளின் ஏற்பாட்டில் நான்கு விளையாட்டுக் கழகங்களும், கலந்து கொள்ள முன்வந்த காரணத்தினால், தமது மரியாதையை கருத்தில் கொண்டு சுவிஸ் புலிகளினால் விட்டுக் கொடுப்பு போன்ற நாடகம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக நடைபெற்ற சுவிஸ் புலிகளின் பொறுப்பாளர் திரு.ரகுபதி, சுவிஸ் புலிகளின் பாதுகாப்பு படைப் பொறுப்பாளர்களான திரு.சுதா, திரு.ரகு ஆகியோர் கிரிக்கெட் சம்மேளனப் பொறுப்பாளர் திரு.சந்திரனுடன் மேற்கொண்ட “சுத்துமாத்து” இரகசிய பேசசுவார்த்தையினைத் தொடர்ந்து, சுவிஸ் புலிகளின் விளையாட்டுப் போட்டியினையை சுவிஸ் தமிழர் கிரிக்கெட் சம்மேளனமே (சம்மேளனத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய) நடத்தி தருவதென தீர்மானிக்கப்பட்டது. (இதுதொடர்பாக கிரிக்கெட் சம்மேளனம் விடுத்த அறிக்கை கீழே👇👇👇👇👇👇)

****சுவிஸ் மென்பந்து துடுப்பாட்ட (கிரிக்கெட்) சம்மேளனம் இன்றுகாலை (13.07.2014) விடுத்த அறிக்கை….***

அன்பார்ந்த மென்பந்து கிரிக்கட் கழக வீரர்களுக்கும், நண்பர்களுக்கும் வணக்கம்.

14.07.19 சுற்றுப்போட்டி சம்மந்தமாக இருந்த சூழலை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் இதை தீர்க்கும் முகமாக ஒரு வார காலமாக இரு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் எதிர்காலத்தின் இணைந்த பணிகளுக்கான விட்டுக்கொடுப்புக்களாக அமைந்தது. சமரசமான முடிவுகள் இருதரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மாவீரர்கள் நினைவு போட்டிகளை மதிக்கும் முகமாக நல்லெண்ண முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை நிர்வாகமும், விளையாட்டுத் துறையும், சுவிஸ் மென்பந்தாட்ட கிரிக்கட் சம்மேளனமும் இணைந்து இச்சுற்றுப்போட்டியை சம்மேளன விதிமுறைகளுக்கமைய நடாத்துவது என்றும் இரு தரப்பாலும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாவீரர் கேணல் சங்கர் அண்ணா ஞாபகார்த்த சுற்றுப்போட்டி என்பதால் சம்மேளனம் இதற்கு ஒத்துழைத்து இரு தரப்பினரும் இணைந்து சம்மேளன விதிமுறைகளுக்கமைய நடாத்துவதற்கு நாம் ஒப்புக்கொண்டுள்ளோம். சம்மேளனம் தமிழ் தேசியத்தையும் மாவீரர்களையும் மதிப்பவர்கள் என்பதால் சம்மதம் அளித்துள்ளோம்

அன்பான எம்கழக நண்பர்களே திட்டமிட்டபடி இப்போட்டிக்கு பதிவு செய்த 21 கழகங்களுக்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு போட்டி நடைபெறும். ஆகவே அனைத்து கழக நண்பர்களையும் போட்டியில் கலந்து சிறப்பிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இதுவரை பதிவு செய்யாத கழகங்கள் மாலை 4 மணிக்கு முன்பாக எம்மிடம் பதிவு செய்யவும்.

குறிப்பு : #நடைபெறயிருந்தபத்தாண்டுமுள்ளிவாய்க்கால் வலிசுமந்த பணப்பரிசு கொண்ட சுற்றுப்போட்டி திகதி வருகின்ற வாரம் அறிவிக்கப்படும்.

இங்ஙனம்
சுவிஸ் மென்பந்தாட்டம் கிரிக்கட் சம்மேளனம் சார்பில்,
நேசன் மற்றும் சந்திரன்.

நன்றி

*****************************************

ஆயினும் சற்றுமுன்னர் சுவிஸ் புலிகளின் பொறுப்பாளரான திரு.ரகுபதி அவர்களினால் “கிரிக்கெட் சம்மேளனத்துக்கு” தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்ட தகவலில், “என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, சுவிஸ் புலிகளின் விளையாட்டுத்துறை முடிவுக்கு இணங்க, நாம் தனித்தே செய்ய உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இறுதிநேரத்தில், அதுவும் வாரஇறுதி என்பதினால், இவர்களினால் (கிரிக்கெட் சம்மேளத்தினால்) பிறிதொரு விளையாட்டு மைதானத்தை எடுக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு “குள்ள நரித்தனமாக” சுவிஸ் புலிகள் செயல்பட்டு உள்ளது அம்பலத்துக்கு வந்து உள்ளது.

ஆயினும் சுவிஸ் மென்பந்தாட்டம் கிரிக்கட் சம்மேளனத்தின் துரித செயல்பாட்டினால் சொலத்தூர்ன் மாநிலத்தில், (Neumattstrasse 25, 2540 Grenchen) மைதானம் எடுக்கப்பட்டு நாளைக்காலை ஒன்பது மணிக்கு அனைத்து விளையாட்டுக் கழகங்களின் பங்களிப்புடன் “கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி” நடைபெறவுள்ளது. (இதுதொடர்பாக கிரிக்கெட் சம்மேளனம் விடுத்த அறிக்கை கீழே👇👇👇👇👇👇)

****சுவிஸ் மென்பந்து துடுப்பாட்ட (கிரிக்கெட்) சம்மேளனம் இன்றுமாலை (13.07.2014) விடுத்த அறிக்கை….***

அவசர அறிவித்தல்

நேற்று அமைப்பு சாராருக்கும், சம்மேளனம் சார்பாக சந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இருவரும் இணைந்து சம்மேளன விதிகளுக்கமைய போட்டியை நடாத்த முடிவெடுக்கப்பட்டிருந்தது. நாம் இதய சுத்தியுடன் இணைந்து போட்டியை நடாத்தித்தர இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தோம்.

நேற்றைய சந்திப்பின் பின்னர் எம்முடன் எமக்காக நின்ற கழகங்கள் அனைத்துக்கும் நன்றி தெரிவித்து செய்தி அனுப்பியிருந்தோம். அப்படி “நன்றி தெரிவித்தது தவறு” என்ற சிறுபிள்ளைத்தனமான வாதத்தை முன்வைத்து போட்டியை தாம் தனியே நடத்துவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளனர். எம்மை நம்பவைத்து கழுத்தறுத்துள்ளனர்.

எமது கழகங்களுக்கு நன்றி தெரிவித்தது தவறா….??? வேண்டுமென்றே திட்டமிட்டு இந்தப் பழிவாங்கல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். திட்டமிட்டபடி எமது முள்ளிவாய்க்கால் பத்தாண்டு வலிசுமந்த பணப்பரிசில் கொண்ட சுற்றுப்போட்டி நாளை நடைபெறும் (Neumattstrasse 25, 2540 Grenchen மைதானம்) என்பதனை அறியத் தருகிறோம். நடைபெற்ற சிரமங்களுக்காக கழகங்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்.

சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திரு சுதா அண்ணா மற்றும் ரகு அண்ணா முகத்திலும் கரி பூசியுள்ளார்கள். நடுநிலை வகித்து சமரச பேச்சில் ஈடுபட்ட அவர்கள் இருவரும் அமைப்பினர் செய்த தவறுக்காக சந்திரன் அவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். அவர்களின் நடுநிலை நிலைப்பாட்டை சம்மேளனம் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

இங்ஙனம்
சுவிஸ் மென்பந்து கிரிக்கட் சம்மேளனம் சார்பில்
நேசன் மற்றும் சந்திரன்

**************************************

இதேவேளை இந்த குளறுபடிகள் பின்னணியில் சுவிஸ்புலிகளின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் மதி அவர்களும், அவரின் கைப்பாவைகளான கோணேஷ், சவுண்ட் சிவா, சூரிச் திலீபன் போன்ற எடுபிடிகளும் உள்ளதாக பொதுமக்கள் சிலர் தெரிவித்து உள்ளனர்.

இதுபோன்ற பிரச்சினைகளை, “சுமூகமாகத் தீர்ப்பது” எப்படி என்று கையாளத் தெரியாமல் “எடுப்பார் கைப்பிள்ளையாக” செயல்படும் சுவிஸ் புலிகளின் பொறுப்பாளர் திரு.ரகுபதியையும், எல்லோருக்கும் வக்காலத்து வாங்கி, இந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்கும் சுவிஸ் புலிகளின் நிதி பொறுப்பாளர் குட்டி அவர்களையும் பலரும் விமர்சித்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து “கிரிக்கெட் சம்மேளனப் பொறுப்பாளர்களின்” ஒருவர் “அதிரடிக்கு” கருத்துத் தெரிவிக்கையில், “நாம் என்றுமே, தேசியத்தையும், மாவீரர்களையும் மதிக்கிறோம், ஆனால் “தேசியத்தின் பெயரினால்” பிழைப்பு நடத்துபவர்களையும், வயிறு வளர்ப்பவர்களையும் நம்பி, நாம் ஏமாந்து விட்டோம். இவர்கள் மக்களுக்கான அமைப்பு அல்ல, “தனிப்பட்ட குழு” என்பதை நிரூபித்து விட்டார்கள். “தேசியத்தின் பெயரினால்” செயல்படும் மாமாக்களை இனியும் நாம் நம்ப மாட்டோம், இவர்கள் மாவீரர்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்” எனவும் தெரிவித்து உள்ளனர்.

நாளைக்காலை ஒன்பது மணிக்கு சொலத்தூண் மாநிலத்தில் (Neumattstrasse 25, 2540 Grenchen) “சுவிஸ் தமிழர் கிரிக்கெட் சம்மேளனத்தின்” விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளதென உறுதியாகத் தெரிய வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 6 =

*