;
Athirady Tamil News

சுவிஸ் புலிகளுக்கு எதிரான வழக்கு; மீண்டும் நேற்று பேர்ண் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.. நடந்தது என்ன?? (படங்கள் & வீடியோ)

0

சுவிஸ் புலிகளுக்கு எதிரான வழக்கு; மீண்டும் நேற்று பேர்ண் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.. நடந்தது என்ன?? (படங்கள் & வீடியோ)

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வந்த முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த வருடம் பத்தாம் மாதம் சுவிஸ்லாந்து நாட்டுக்கும் விஜயம் செய்தார். சுவிஸில் கடந்த 11.10.2018 அன்று நடைபெற்ற, வடமாகாண முன்னாள் ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே, மற்றும் அவரது செயலாளரும், இலங்கையின் மூத்த சிவில்சேவை அதிகாரிகளில் ஒருவரும், புங்குடுதீவு மண்ணின் மைந்தருமான திரு.இலட்சுமணன் இளங்கோவன், டான் டிவி நிறுவனர் திரு.குகநாதன் ஆகியோருடனான, “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலைக் குழப்பும் நோக்கில், மண்டபத்துக்கு முன்பாக “சுவிஸ் புலிகள்” எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் (ரி.சி.சி)” ஆர்ப்பாட்டம் எனும் பெயரில், மிகக் கேவலமான முறையில் “தூஷணப் போராட்டம்” நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.

இதன் எதிரொலியாக “தனதும், தனது குடும்பத்தின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவித்ததுடன், தன்மீது கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் முயற்சி மேற்கொள்ள முயற்சித்தமை, முகநூல்களில் தன்னையும், தான் சார்ந்த அமைப்பையும் மிரட்டும் வகையில் பதிவுகள் இட்டமை, தன்னைக் குறித்து “உண்மைக்கு புறம்பான” செய்திகளை வாட்சப் போன்ற சமூகவலைத் தளங்களில் பகிர்ந்தமை” ஆகிய குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு,…

இலங்கையில் இணுவிலை சேர்ந்தவரும், “சுவிஸ் புலிகளின்” நிதி பொறுப்பாளரான “குட்டி” எனும் திரு.நாகராஜா மகாராஜா, இலங்கையில் குருநகரை சேர்ந்தவரும், “சுவிஸ் புலிகளின்” முன்னாள் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளரும், தற்போதைய அரசியல் பொறுப்பாளருமான திரு.வளத்தீஷ் கொலம்பஸ், “சுவிஸ் புலிகளின்” மகளிர் அணிப் பொறுப்பாளரான சண்டிலிப்பாயை சேர்ந்த திருமதி.சசியின் கணவரும், இலங்கையில் இணுவிலை சேர்ந்தவருமான திரு.பிரபாகரன் ராஜதுரை, இலங்கையில் கோண்டாவில் வடக்கை சேர்ந்தவரும், “சுவிஸ் புலிகளின்” வீடியோப் படப் பிடிப்பாளரும், தகவல் வழங்குநருமாக செயற்படும் “வெடிமுத்து” அல்லது “யதி” எனும் திரு.கந்தவனம் தஜீபன், இலங்கையில் மட்டக்களப்பை சேர்ந்தவரும் (தாய் -மட்.கொத்தியாதுளை, தந்தை -மட்.அரசடித்தீவு) “சுவிஸ் புலிகளின்” அரசியல்துறை முக்கியஸ்தரான “தீபன்” அல்லது “தீபராஜ்” எனும் “தூஷண வித்தகரான” திரு.தில்லையம்பலம் தீபராஜ் ஆகியோர் மீது,..

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய தலைவரான “புலிக்குட்டி” அல்லது “சுவிஸ்ரஞ்சன்” எனும் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது, மீண்டும்  நேற்றையதினம் சுவிஸ் பேர்ண் விசாரணை நீதிமன்றில், சுவிஸ் விசாரணை நீதிபதி திரு.கம்யூஸியன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் பதினோராம் திகதி, திரு.பிரபாகரன் ராஜதுரை, “வெடிமுத்து” அல்லது “யதி” எனும் திரு.கந்தவனம் தஜீபன், “தீபன்” அல்லது “தீபராஜ்” எனும் திரு.தில்லையம்பலம் தீபராஜ் ஆகியோரிடம், விசாரணை நீதிபதி திரு.கம்யூஸியன், வழக்குத் தொடுநரான “புலிக்குட்டி” அல்லது “சுவிஸ்ரஞ்சன்” எனும் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன், அவரது வழக்கறிஞரான திரு.சீமோன் பிளாக் ஆகியோர் குறுக்கு விசாரணை செய்து, அவர்களின் தகவலும் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்றையதினம் ஏனைய இருவரான, சுவிஸ் புலிகளின் நிதி பொறுப்பாளர் “குட்டி” எனும் திரு.நாகராஜா மகாராஜா, சுவிஸ் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.கொளம்பஸ் வளத்தீஷ் ஆகியோரிடம், விசாரணை நீதிபதி திரு.கம்யூஸியன், வழக்குத் தொடுநரான “புலிக்குட்டி” அல்லது “சுவிஸ்ரஞ்சன்” எனும் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன், அவரது வழக்கறிஞரான திரு.சீமோன் பிளாக் ஆகியோர் குறுக்கு விசாரணை செய்து, அவர்களின் தகவலும் பதிவு செய்யப்பட்டது.

நேற்றைய வழக்குக் குறித்து, “சுவிஸ் புலிகளின்” சார்பு ஊடகத்தில் நேற்று வெளியாகிய செய்திகளைத் தொடர்ந்து, இன்றையதினம் வழக்குத் தொடுநரான “புலிக்குட்டி” அல்லது “சுவிஸ்ரஞ்சன்” எனும் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களிடம் “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “இன்னமும் வழக்கு விசாரணை முழுமை அடையாததினால், அதுகுறித்துக் கருத்து தெரிவிப்பது முறையல்ல.. ஆயினும் உண்மை வெல்லும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது, சுவிஸ் புலிகள் எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்” உண்மையான பக்கம் வெளிவரும் எனவும்” தெரிவித்தார்.

ஆயினும் “உங்களிடம் வீடியோ ஆதாரம் இல்லையெனவும், அதனைத் தாம் அழித்து விட்டதாகவும்”, அதேபோல் இன்றைய வழக்கு விசாரணையின் போது, சுவிஸ் புலிகளின் நிதி பொறுப்பாளர் குட்டி எனும் திரு.நாகராஜா மகாராஜா, “நீங்கள் அவரதும், அவரது மனைவி, பிள்ளைகளின் புகைப்படங்களையும் பிரசுரித்து செய்தி வெளியிட்டதாக, நீதிபதியிடம் முறையிட்டு உள்ளதாகவும்” புலிகள் சார்பு ஊடகங்களில், நேற்றையதினம் எழுதப்பட்டு உள்ளது. இதன் உண்மை நிலையென்ன?” என மீண்டும் நாம் கேட்ட போது..

“ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்களுடன் கடந்த வருட இறுதியில் செய்தி வெளியாகிய போதே, கணேஷ் ஐங்கரன் என்பவரினால் எனக்கெதிராக அப்போதே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆயினும் பொதுவெளியில் (அதாவது வீதியில் இறங்கி) ஆர்ப்பாட்டம் செய்யும் போது, அதில் கலந்து கொண்ட புகைப்படங்களை பிரசுரிப்பது தவறில்லையென பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றத்தாலும் அந்த வழக்கு கடந்த வருட இறுதியிலேயே நிராகரிக்கப்பட்டது என்பதை இவர்கள் அறியவில்லை போல் உள்ளது”,

அத்துடன் இன்றைய வழக்கு விசாரணையின் போது திரு.குட்டி, இந்த புகாரை முன்வைத்த போது, “இந்த வழக்குக்கும், இந்த புகாருக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை, தேவையெனில் அதுக்கு தனியாக போலீசில் வழக்குப் போடுங்கள்” என்று நீதிபதி, திரு.குட்டியிடமே தெரிவித்து விட்டார்” எனவும்,

தவிர, “என்னிடம் உரிய ஆதாரங்கள் (வீடியோக்கள்) இருக்கோ?, இல்லையோ? அதனை என்னால் பெறமுடியுமோ?, இல்லையோ?? அதனை நான் வழக்கு விசாரணையின் போது பார்த்துக் கொள்கிறேன்,” ஆயினும் இந்த வழக்கில் “சுவிஸ் புலிகள்” உரிய பாடம் படிப்பார்கள்”.. எனவும்,

“முதலில் தமது “தேசியக் கொடி, தேசியத் தலைவர்” என்று குறிப்பிடும் புலிக்கொடியையும், பிரபாகரனின் படத்தையும் கைகளில் தாங்கிக் கொண்டு, படுகேவலமாக “தூஷணப் போராட்டம்” நடத்திய இவர்களுக்கு சரியான தண்டனை நீதிமன்றம் வழங்கும் என்பது உறுதி” எனவும் தெரிவித்தார்.      

“அதிரடி”யின் விசேட நிருபர்.. -அரிச்சந்திரன்..

dan news

பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது என, வடக்கு மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே சுவிஸில் தெரிவித்துள்ளார்.

Gepostet von DAN News am Samstag, 13. Oktober 2018

சுவிஸ் புலிகளுக்கு எதிரான வழக்கு; இன்று பேர்ண் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.. நடந்தது என்ன?? (படங்கள் & வீடியோ)

“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா? புலிக்குட்டிக்கு எதிரானதா?? (வீடியோ ஆதாரங்களுடன்)

சுவிஸில் வடமாகாண ஆளுநர்: “புலிகளின் தூசணப் போராட்டம்” ஒண்ணுமே புரியலடா சாமி..! (முகநூலில் இருந்து -பகுதி-2)

சுவிஸ் “தூசணப் புலி” பொறுப்பாளர் ரகுபதியின் நாகரிகமற்ற செயல்களும், பனங்காட்டு நரியின் சந்திப்பும்… (முகநூலில் இருந்து)

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + eleven =

*