சுவிஸில் அதிர்ச்சி சம்பவம்.. தமிழ் பாஸ்ரர் ஒருவரினால் பலாத்காரம் செய்யப்பட்டனரா இளம்பெண்கள்? விபரம் என்ன?? (வீடியோ & படங்கள்)

சுவிஸில் அதிர்ச்சி சம்பவம்.. “தமிழ் பாஸ்ரர்” ஒருவரினால் பலாத்காரம் செய்யப்பட்டனரா இளம்பெண்கள்? விபரம் என்ன?? (வீடியோ & படங்கள்)
சுவிசில் வழிதவறிப் போகும் வழிபாட்டுத் தலங்கள்..
தமிழ் பாஸ்ரர் திரு.வில்லியம்ஸ் குமார் என்பவர் நடாத்திய தனியார் தேவாலயத்தில் சிறுமிகள் மீது பாலியல் அத்துமீறல்?..
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் சிறுமிகள் மீது பாலியல் அத்துமீறல்..
13 வயது சிறுமி உட்பட 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் அடங்குவர்..
குடும்பத்தில் பிரச்சினை என்று அடைக்கலம் தேடிப்போன சிறுமியையும் விட்டு வைக்கவில்லை..
இதுவரை 5 தமிழ் இளம்பெண்களின் வாக்குமூலங்கள் வெளியாகியுள்ளன..
**விபரம் என்ன??..
ஐரோப்பாவில் தமிழர்கள் வாழும் பல (சுமார் ஐந்துக்கு மேற்பட்ட) நாடுகளில், 25 க்கு மேற்பட்ட கிளைகளைக் கொண்ட, தமிழ் தேவாலயத்தை பிரதம போதகராக இருந்து வழிநடத்தும், சுவிஸ் பேர்ண் கோனிக்ஸ் பகுதியில் வதியும் (பும்ப்லிஸ் பகுதியில் பிரதம போதக மையத்தை நடாத்தும்) தமிழ் பாஸ்ரர் திரு.வில்லியம்ஸ் குமார் அவர்களே பாலியல் வன்முறையில் ஈடுபட்டதுடன், நிதி மோசடியில் ஈடுபட்டதென, ஆதாரங்களுடன் சுவிஸின் உத்தியோகபூர்வ அனைத்து தினசரிகளும், சுவிஸ் அரச தொலைக்காட்சியும் செய்திகளாக வெளிவந்துள்ளதானது, சுவிஸ் வாழ் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, சுவிஸ் மக்கள் மத்தியிலும் பலத்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்படி பாஸ்ரர் திரு.வில்லியம்ஸ் குமார் அவர்கள் சோஷல் பணத்தில் (சுவிஸ் அரச சலுகையில்) வாழ்ந்து கொண்டு இருந்த போதிலும், இவருக்கு (இவரது தேவாலயங்களின் வாங்கிக் கணக்கு ஊடாக) பல்லாயிரக்கணக்கான பண வருவாய் வந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அம்மாவட்ட நகரசபை தெரிவித்துள்ளது.
மேலும் பல சட்டமீறல்கள் அடங்கிய முழுமையான விபரங்களுடன்
நேற்று மாலை Rundschau செய்தியில் SRF சுவிஸ் தேசியத் தொலைக்காட்சி வெளியிட்டது. இதுகுறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டு உள்ளது.
இதேவேளை சுவிசில் இவ்வாறான செயல்களுக்கு சமஸ்கிருத பூசகர்களும் விதிவிலக்கல்ல எனவும், மிகக் குறுகிய காலத்தில் இலங்கையில் இருந்து வந்து ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் “ஒரு சில” இந்து ஆலய பூசகர்களும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது என “ரீம் ஒன்லைன்” முகநூலில் பதிவிடப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.. (Thanks… Teamonline Redaktion)
https://www.srf.ch/news/schweiz/pastor-unter-druck-missbrauchsvorwuerfe-in-tamilen-kirche
https://www.nau.ch/news/schweiz/missbrauchs-vorwurfe-in-berner-tamilen-kirche-65582855