;
Athirady Tamil News

சுவிஸில் புங்குடுதீவை சேர்ந்த, ஐங்கரனின் வழக்குக்கு நடந்தது என்ன? (விபரமான தகவல்)

0

சுவிஸில் புங்குடுதீவை சேர்ந்த ஐங்கரனின் வழக்குக்கு நடந்தது என்ன? (விபரமான தகவல்)

கடந்த ஒக்டோபேர் 2018 இல் வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே, மற்றும் முன்னாள் வடமாகாண ஆளுநரின் செயலாளரான “புங்குடுதீவு மண்ணின் மைந்தர்” திரு.இளங்கோவன், டான் தொலைக்காட்சி நிறுவனர் திரு.குகநாதன் ஆகியோர் சுவிஸ் வந்த சமயம், புங்குடுதீவின் தேவை கருதி “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, “ஆர்ப்பாட்டம்” எனும் பெயரில் “தூஷணப் போராட்டம்” நடத்திய சுவிஸ் புலிகளுடன் இணைந்து செயல்பட்ட திரு.கணேஷ் ஐங்கரன் என்பவர், சுமார் ஒரு வாரத்தின் பின்னர் தன்னைப் புங்குடுதீவை சேர்ந்த சிறுவயது இளைஞன் தாக்கியதாக சுவிஸ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றது.

இவர் சுவிஸ் புலிகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது குறித்து ஐங்கரன் சார்ந்த ஈபிடிபி கட்சியின் உத்தியோகபூர்வ பிரமுகரிடம் “அதிரடி” இணையம் அக்காலகட்டத்திலேயே தொடர்பு கொண்டு கேட்ட போது, “ஐங்கரன் எமது தீவிர ஆதரவாளர் தான் எனவும், அவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது குறித்து, நாம் ஐங்கரனிடம் கேட்ட போது, புலிகளில் யார்யார் இதில் கலந்து கொண்டுள்ளனர்? என்பதை பதிவு செய்வதுக்காகவே அங்கு சென்றவரென எம்மிடம் தெரிவித்து உள்ளார்” எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அதாவது, தாக்கிய இடத்திலேயே விழுந்து, தவழ்ந்து திரு.ஐங்கரன் என்பவர், நண்பர்களால் காரில் தூக்கிச் செல்லப்பட்டதாக அடையாளம் தெரியாத சிலர் பரவலாக உரையாடிய போதிலும், இதனை மறுதலித்த சம்பந்தப்பட்ட இளைஞனான திரு.கீதன் தயா “தான் தாக்கவில்லை எனவும், தனது மாமாவான ரஞ்சன் அவர்களைக் குறித்து தன்னுடன் விவாதித்து, ஐங்கரன் நிறைவெறியில் தானே விழுந்து எழும்பியதாகவும், ஆகவே இது பொய் வழக்கு என்பதைக் கருத்தில் கொண்டு திரு.ஐங்கரன் என்பவர் தனக்கெதிராக தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும்” பதில்மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

சுவிஸ் வாழ் மக்களிடையே பிரபலமாக உரையாடப்பட்ட, அதாவது திரு.கணேஷ் ஐங்கரன் என்பவர் தன் மீது, சிறுவயது இளைஞன் ஒருவர் தாக்கியதாக தெரிவித்து தாக்கல் செய்த வழக்கு குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 4500 சுவிஸ் பிராங் தண்டப்பணம் செலுத்த வேண்டுமென ஆரம்ப நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து சட்டத்தரணி மூலம் திரு.கீதன் தயா அவர்களால் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இருவாரங்களுக்கு முன்னர் சுவிஸ் சொலோத்தூண் மேல்நீதிமன்றத்தில் மேற்படி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றில் குற்றம் சுமத்தியவரான திரு.கணேஷ் ஐங்கரன், குற்றம் சாட்டப்பட்டவரான திரு.கீதன் தயா ஆகியோருடன் அவரது மாமனாரான திரு.சொக்கலிங்கம் ரஞ்சன், சட்டத்தரணி திரு.சீமோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள், ஆரம்பத்திலேயே “இவ்வழக்கை வாபஸ் பெற்று இருதரப்பும் சமாதானமாக போகுமாறு பலமுறை அறிவுறுத்திய போதிலும்” குற்றம் சுமத்தியவரான திரு.கணேஷ் ஐங்கரன் என்பவரினால், அவ்வேண்டுகோள் மறுதலிக்கப்பட்டதுடன், “தான் வாபஸ் பெற முடியாது எனவும், தன் மீது தாக்குதல் நடத்தியவர் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்” எனவும், தெரிவித்ததுடன் “பார்வையாளராக உள்ள ரஞ்சன் என்பவர் இங்கு இருக்கக் கூடாது எனவும், அவரால் தனக்கு ஆபத்து” எனவும் குறிப்பிட்டார்.

அதனை மறுதலித்த நீதிபதி “இது ஜனநாயக முறைப்படியான செயல்பாடு எனவும், நீதிமன்றில் யார் இருக்கலாம், யார் இருக்கக் கூடாது என்பதை நீதிமன்றே முடிவெடுத்து செயல்படுகிறது” எனவும், “அவரால் பிரச்சினை என்றால், அதனை பொலிஸில் முறையீடு செய்யுமாறும்” தெரிவித்து அக்கோரிக்கையை நிராகரித்தார்.

இதன் பின்னர் குற்றம் சுமத்தியவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக சமூகம் தந்த சாட்சிகள், அத்துடன் குற்றம் சுமத்தியவர், குற்றம் சாட்டப்பட்டவர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட குறுக்குவிசாரணை ஆகியவற்றை தொடர்ந்து, சுமார் மூன்று மணித்தியாலத்துக்கு மேற்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர், சுமார் அரை மணித்தியாலம் தீர்ப்பை அறிவிப்பதுக்காக ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் கூடிய நீதிமன்றில் எடுத்த எடுப்பிலேயே வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் “இவ்வழக்கை முழுமையாக தள்ளுபடி செய்வதாகவும், இதுக்குரிய முக்கிய காரணமாக புர்க்டோர்ப் வைத்தியசாலை அறிக்கை, மாநில போலீஸ் அறிக்கை, மற்றும் நேரடி சாட்சிகளின் அடிப்படையில், குற்றம் சுமத்தியவரான கணேஷ் ஐங்கரன் என்பவர் அவ்வேளையில் “மதுபோதையில்” இருந்தது உறுதியாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்பதினாலேயே இத்தீர்ப்பு வழங்கப்படுவதாகக்” குறிப்பிடப்பட்டு உள்ளது.

சுமார் பதினாறு மாதங்களாக நடைபெற்ற இவ்வழக்கு, தற்போது முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வேண்டுமெனில் மேன்முறையீடு செய்வதுக்கு முப்பது நாட்கள் தவணை வழங்கப்பட்டதுடன், குற்றம் சாட்டப்பட்டவரின் நீதிமன்ற செலவை (சட்டத்தரணிக்கு உட்பட) அரசே பொறுப்பேற்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தகவல்.. சுவிஸில் இருந்து திரு.சிவன்.

சுவிஸ் புலிகளின் “தூஷணப் போராட்டத்துக்கு” எதிரான வழக்கின் தீர்ப்பு: சொல்வது என்ன?.. (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புலிகளுக்கு எதிரான வழக்கு; மீண்டும் நேற்று பேர்ண் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.. நடந்தது என்ன?? (படங்கள் & வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*