;
Athirady Tamil News

சுவிஸ்ரஞ்சன் தாக்கல் செய்த. மற்றுமோர் வழக்கின் இறுதித் தீர்ப்பு..! (நடந்தது என்ன?)

0

சுவிஸ்ரஞ்சன் தாக்கல் செய்த. மற்றுமோர் வழக்கின் இறுதித் தீர்ப்பு..! (நடந்தது என்ன?)

புளொட் அமைப்பின் செயலதிபரான உமாமகேஸ்வரனின் கொலையுடன் சம்பந்தப்பட்ட ராபின் என்பவரும் அவனது மனைவியும் சுவிஸ் கேர்சன்புக்ஸ் எனுமிடத்தில் இனந்தெரியாத நபர்களினால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு, கடந்த வருட (2019) நடுப்பகுதியில் வாட்சப் போன்ற சமூகவலைத் தளங்கள் ஊடாக, “சுவிஸ்ரஞ்சன்” எனும் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் குறித்து, உண்மைக்கு புறம்பாகவும், காழ்ப்புணர்ச்சியிலும் “அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்” எழுதியமை, எழுதியதைப் பகிர்ந்தமை, தேவையற்ற விடயங்களை பகிர்ந்தமை” போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் திரு.கணேஷ் ஐங்கரன் என்பவருக்கு எதிரான வழக்கு பலமாதங்கள் விசாரணையின் பின்னர் இறுதித் தீர்ப்பு இவ்வாரம் வழங்கப்பட்டு உள்ளது.

அதாவது “உண்மைக்கு புறம்பாக” சுவிஸ் கேர்சேன்புக்ஸ் எனுமிடத்தில் கர்ப்பிணிப் பெண்ணைக் கற்பழித்து கொலை செய்தமை என்று எழுதியமை, “தகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து” எழுதியமை, “மற்றவர்கள் எழுதியதைப் பகிர்ந்தமை” உட்பட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் திரு.கணேஷ் ஐங்கரன் “குற்றவாளி” எனவும், இதுக்காக நாப்பது நாட்கள் சிறைத்தண்டனை அல்லது 1600 சுவிஸ் பிராங் அபராதம் விதிப்பதாகவும், அத்துடன் இரண்டுவருட காலம் எந்தவொரு குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது எனவும், அப்படி மீறி நடந்தால் இத்தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும்,

அதேவேளை உடனடியாக நானூறு சுவிஸ் பிராங்கை தண்டனையாகக் கட்டிட வேண்டும் எனவும், இல்லாவிடில் பத்துநாட்கள் சிறைத்தண்டனை எனவும், அத்துடன் மேலதிகமாக வழக்கு செலவென ஐநூறு சுவிஸ் பிராங்குமாக மொத்தம் 900 சுவிஸ் பிராங் உடன் செலுத்தப்பட வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

மேற்படித் தீர்ப்பானது மூன்று மாதத்துக்கு முன்னரே வழங்கப்பட்ட போதிலும், திரு.கணேஷ் ஐங்கரன் என்பவர் இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்து, பின்னர் அந்த மேன்முறையீட்டை வாபஸ் பெற்றதினால் இப்போது இறுதித் தீர்ப்பாக வழங்கப்பட்டு உள்ளது.

மேற்படி வழக்கு குறித்தும், இத்தீர்ப்புக் குறித்தும் “சுவிஸ்ரஞ்சன்” எனும் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, “என்னைக் குறித்து உண்மைக்கு புறம்பாக எழுதுவதும், அதனை முகநூல், வாட்சப் போன்ற சமூகவலைத் தளங்கள் ஊடாக பகிர்வதும் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. “காய்த்தமரம் கல்லடி படும்” என்பதை உணர்ந்து, நான் பொறுமையாக இருந்தால் சிலர், எனது பொறுமையை எனது பலவீனமெனக் கருதியதினாலேயே, நான் எனது சட்டத்தரணி ஊடாக சில சட்ட நடவடிக்கைகளை எடுத்தேன், அதில் வெற்றியும் கண்டுள்ளேன்”.

இதுமட்டுமல்லாது எனது ஊரை சேர்ந்த ஊடகவியாளர்களென தம்மைக் கூறிக்கொள்ளும் மூவரும் இதுபோன்ற நடவடிக்கைகளில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அண்மையில் கூடிய எமது “சுவிஸ் ஒன்றியக் கூட்டத்திலேயே” விவாதித்தோம். அதில் கலந்து கொண்ட பெரும்பான்மையான உறுப்பினர்களின் வேண்டுகோளாக “இதனைக் கணக்கில் எடுக்காது, எமது பணியை செவ்வனவே செய்ய வேண்டுமெனவும், யாராக இருந்தாலும் நேரடியாக வந்து கதைத்தால் மட்டும் பதிலளிக்க வேண்டும் எனவும், இதனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுமெனவும்” கேட்கப்பட்டதாலேயே நாம் பொறுமை காக்கிறோம். தேவையேற்படின் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை இன்னும் சிலரோ “வந்ததை பகிர்ந்தோம்” எனும் தோரணையில், எம்மைக் குறித்து தவறாக வந்ததையும், மற்றவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். ஆயினும் இதுவும் சட்டப்படி குற்றம் என்பதை அவர்கள் உணரவில்லை போல் உள்ளது.

கடந்த வருட இறுதியில், என்னாலேயே தாக்கல் செய்யப்பட்ட மற்றுமோர் வழக்கில், இதுபோன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், “வந்ததை பகிர்ந்தேன், எனக்கு எதுவும் தெரியாது” எனக் குறிப்பிட்ட போதிலும், சுவிஸ் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.கொலம்பஸ், சுவிஸ் நீதிமன்றால் “குற்றவாளி”யெனத் தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனைக்கு உள்ளாகினார், அதேபோல் இப்போது திரு.கணேஷ் ஐங்கரனும் தண்டனைக்கு உள்ளாகி உள்ளார். இவைகள் எல்லோருக்கும் பாடமாக அமையட்டும்” என்றார்.

தகவல்.. -சுவிஸில் இருந்து திரு.சிவன்.

சுவிஸில் புங்குடுதீவை சேர்ந்த, ஐங்கரனின் வழக்குக்கு நடந்தது என்ன? (விபரமான தகவல்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + seven =

*