“புளொட்” அமைப்பின் “மாலைதீவுப் புரட்சி” நினைவை முன்னிட்டு “M .F” ஊடாக வாழ்வாதார உதவி…! (படங்கள் & வீடியோ)

“புளொட்” அமைப்பின் “மாலைதீவுப் புரட்சி” நினைவை முன்னிட்டு “M .F” ஊடாக வாழ்வாதார உதவி…! (படங்கள் & வீடியோ)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் (புளொட்) 03.11.1988 அன்று மேற்கொள்ளப்பட்ட “மாலைதீவுப் புரட்சி” நடவடிக்கையானது, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு அந்நிய சக்திகளை நம்பாது, எமக்கென ஓர் பின்தளம் இருக்க வேண்டுமென புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் தெளிவான சிந்தனையில் உதித்த திட்டமே மாலைதீவுப் புரட்சி நடவடிக்கை ஆகும்.
ஈழப் போராட்ட பின்தள அவசியம் பற்றிய, எதிர்கால தேவைக்கான போராட்ட முன்னெடுப்பு க்கு மாலைதீவு புரட்சி அவசியமென மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதி பெரியையா என தோழர்களால் அழைக்கப்பட்ட புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
ஈழப் போராட்டம் என்பது சொந்தக் கால்களில் எங்கள் உரிமைகளை வென்றிட வேண்டிய வரலாற்றுக் கடமையினை உணர்ந்த தலைவர் அவர்களால் மிகசாதூர்யமான நகர்வாக இது அமைந்தது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் (புளொட்) 03.11.1988 அன்று மேற்கொள்ளப்பட்ட “மாலைதீவுப் புரட்சி” நடவடிக்கையின் போது, மாலைதீவு மற்றும் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் களப்பலியான, கழகக் கண்மணிகளான தோழர் வே.மணிவண்ணன் (வசந்தி -பண்டத்தரிப்பு), தோழர் செல்லத்தம்பி பத்மசீலன் வீந்திரன் (ஜூலி – இளவாலை), தோழர் சோமசுந்தரம் சந்திரபாலன் (நிதி – நயினாதீவு), தோழர் பாப்பா (முல்லைத்தீவு), தோழர் கோபி (சங்கானை), தோழர் அப்பி (பெரிய குஞ்சுக்குளம்), தோழர்.சின்னச்சங்கர் (முல்லைத்தீவு), தோழர் குமார் (தும்பனை, பருத்தித்துறை) ஆகியோர் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டனர்.
மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் மரணித்த மேற்படி வீரமக்களின் நினைவு நாளை முன்னிட்டு, “மாணிக்கதாசன் பவுண்டேசன்” அமைப்பின் ஊடாக புலம்பெயர் புளொட் தோழரின் நிதிப் பங்களிப்பில் வவுனியா ஆச்சிபுரம் பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு வாழ்வாதார உதவியும், மாணவ மாணவிகளுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த மாபெரும் புரட்சியில் வீர காவியமான தோழர்களின் 32 வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வவுனியா ஆசிபுரத்தில் வறிய நிலையில் வாழும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. குறிப்பாக அடுத்த ஆண்டு ஆரம்ப பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அத்துடன் இருதய வருத்தம் காரணமாக பல அறுவைச் சிகிச்சை செய்து பெற்றோருடன் வாழும் ஒருவருக்கு தனது சுய பொருளாதார மேம்பாட்டுக்கு தேவையான தொழிலுக்கான மூலப் பொருளும் வாழ்வாதார உதவியாக தோழர்கள் நினைவாக வழங்கப்பட்டது.மேற்படி நிகழ்வுகளை மாணிக்காதாசன் நற்பணி மன்றத்தினூடாக வழங்கப்பட்டது.
தாயக பிரதேசமெங்கும் தோழர்கள் நினைவாக பல்வேறு சமுக நலத்திட்டங்களை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் மாலைதீவு புரட்சியில் வீரகாவியமான தோழர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல் & படங்கள்.. தலைமையகம், “மாணிக்கதாசன் பவுண்டேஷன், வவுனியா.
“புளொட்” அமைப்பின் “மாலைதீவுப் புரட்சி” 32வது வருட நினைவுநாள்..! (படங்கள் & வீடியோ)