;
Athirady Tamil News

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் குளறுபடிகள் உச்சகட்டம்… நடந்தது என்ன?

0

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் குளறுபடிகள் உச்சகட்டம்… நடந்தது என்ன?

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் கடந்த காலங்களிலும் மோதல்கள் நடைபெற்று உள்ளது நீங்கள் அறிந்ததே. இதனை “அதிரடி” இணையம் உடனுக்குடன் வெளிக்கொண்டு வந்து இருந்தது. இதனைத்தொடர்ந்து ஆலயத்தை சேர்ந்தவர்களால் “எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள், பிரச்சினைகள் ஏற்படாது” எனவும் உறுதிமொழி தந்திருந்தனர்.

ஆயினும் ஆலயத்தில் குழப்பங்களும் பிரச்சினைகளும் தொடர்ந்தவாறே உள்ளது. இதன் உச்சக்கட்டமாக ஆலய கணக்குப் பரிசோதகர்களாக இருக்கும் மூவரும் ஆலய கணக்கு வழக்குகளுக்கு பொறுப்பாக இருக்கும் பொருளாளரான ராஜு அல்லது சுபாஷ் எனும் சுபாஸ்கரன் இடம் அனுமதி பெறாமல் காணி கட்டடிட குழுவைச் சேர்ந்த கிளாக்கர் என்று அழைக்கப்படும் சீவரத்தினம் மற்றும் ஸ்ரீபாலா போன்றோரின் அழுத்தம் காரணமாக ஆலய நிர்வாக சபையின் தலைவர், செயலாளர் ஆகியோருடைய ஒப்புதல் கடிதமூலம் நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிய வருகிறது.

இதேவேளை ஆலய நிர்வாக சபையை சேர்ந்த இன்னொருவரால் ஆலயத்தில் வைத்து ஊர் மற்றும் சாதிய ரீதியான வசை பாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. அதுமட்டுமல்லாமல் “கோவிலில் தொண்டர்களும், அங்கத்தவர்களுமாக உள்ளவர்களில் சிலர், வயிற்றுப் பிழைப்புக்காக தான் கோவிலுக்கு வருவதாக” இழிவான வார்த்தைகளால் தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது. (அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றையதினம் வாட்சப் குழுமமொன்றில் அவர் எழுதியுள்ளதையும் கீழே இணைத்து உள்ளோம்.)

அத்துடன் இந்த ஆண்டு கந்தசஷ்டி விரத பூஜையின் போது கோவிலில் வழமையாக வழங்கப்படும் அன்னதானம் (பிரசாதம்) நிறுத்தப்பட்டு காணி கட்டட செயலாளரான ஸ்ரீபாலா அவர்களால் கோவிலுக்குள் ஆரம்பிக்கப்பட்ட புதிய Take Away உணவு விற்பனை நிலையமான கடையில் பூசை உபயகாரர்களும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் பணம் கொடுத்து கொத்துரொட்டி போன்ற உணவு வாங்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மனம் வருந்தி எம்மிடம் தெரிவித்துள்ளார்கள்.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உண்மைநிலை அறியும் பொருட்டு, கணக்குப் பரிசோதகர்களாக இருந்து நீக்கப்படட திரு.கோடீஸ்வரன், திரு.குணரட்ணம், திரு.பண்பழகன்ஆகியோரிடம் “அதிரடி” இணையம் சிலமணிநேரமாக நீண்டதொரு செவ்வியினைப் பெற்று, சகல உண்மைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு வருகிறோம்.

நாம் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு உரையாடிய போது ஆலயத்தை ஆரம்பத்தில் ஆரம்பித்தவர்கள், கணக்கு பரிசோதகர்கள், தொண்டர்கள், உபயகாரர்கள் என அனைவருமே “கோவிலில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையே எனவும், இதனை தடுக்க முடியாத நிலையில் தாம் உள்ளதாக கூறியதோடு அங்கு ஒரு சர்வாதிகார நிர்வாகம் இயங்குவதாகவும்” தெரிவித்துள்ளார்கள். இவர்களது கருத்தை மேற்கோள்காட்டி ஆலயத்தின் பொருளாளர் திரு.சுபாஸ்கரன் அவர்களிடமும் செவ்வி கண்டு இருந்தோம். அதனையும் தொடர்ச்சியாக பிரசுரிப்போம்.

முதலில் இதுபோன்ற சம்பவங்கள் குறித்தும் அதாவது ஆலயத்தில் ஊர், சாதியம் சார்ந்தும், தரம்தாழ்ந்து பேசுதல், இழிவான சொற்பதங்கள் பாவித்தல் குறித்தும் இவ்வாலயத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரிடம் “அதிரடி”இணையம் தொடர்பு கொண்டு வினவியபோது, “நீங்கள் அறிந்தது பெரும்பாலும் உண்மை தான் எனவும், ஒழுங்கான ஆளுமையுள்ள நிர்வாகம் இல்லாமல் காணிக் கட்டிடக் குழுவின் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படும் நிர்வாகமே இப்போது உள்ளது எனவும், இந்த ஆலயத்தை ஆரம்பிக்க பாடுபட்டவன் என்றவகையில் மனதால் நொந்து போயுள்ளேன்” எனவும் குறிப்பிட்டார்.

அடுத்து “அதிரடி” இணையம் கணக்குப் பரிசோதகர்களாக இருந்து நீக்கப்படட, மூவரிடமும் செவ்வி கண்டோம். அவர்களிடம், “சுவிஸில் மிகவும் பெரிய கோவிலான பேர்ண் முருகன் கோவிலின் பிரச்ச்சினைகள், குழப்பங்களை ஏன் ஊடகம் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறீர்கள்?” என்று நாம் கேட்டபோது, “கோவில் நிர்வாகத்துக்கு என்று ஒரு வாட்ஸ்அப் குழுமம் உள்ளது. நிர்வாக பிரச்சினைகள் அனைத்தையும் அங்கு தான் நாம் எழுதிக் கொள்வோம். தம்மை நீக்குவதாக எமக்கு கடிதம் வந்த கையோடு அந்த குழுமத்தையே நிறுத்தி விட்டார்கள்.

இதன் காரணமாகவே ஆலய பொதுச்சபை உறுப்பினர்களுக்கும், அடியார்களுக்கும் எமது தரப்பு நியாயத்தை தெரிவிப்பதற்காகவே நாம் இந்த பிரச்சினையை பொதுவெளிக்கு கொண்டுவர விரும்பி ஊடகத்தை நாடி உள்ளோம்” எனக் குறிப்பிடடே இந்த செவ்வியை வழங்கி இருந்தனர்,….

கேள்வி 1
கணக்கு சம்பந்தப்பட்ட கணக்குப் பரிசோதகர் அவர்களை கட்டுப்படுத்தக்கூடிய பொறுப்பில் உள்ளவர் யார்?

பதில்
தலைவர் செயலாளர் பொருளாளர் ஆயினும் நாம் கணக்கு பரிசோதகர்கள் என்ற வகையில் எமக்கு முதன்மையானவர் பொருளாளர் ஆகிய தூண் மாநிலத்தில் வசிக்கும் சுபாஷ்கரண், கைதடி குணம் எனும் திரு.திருலோகநாதன் அவர்களும்.

கேள்வி 2
அப்படியாயின் உங்களை நீக்குவதாக உங்களுக்கு வழங்கப்பட்ட கடிதம் சம்பந்தமாக உங்களுக்கு மேல் பதவியில் உள்ள பொருளாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தீர்களா?

பதில்
ஆம் நாம் இந்த கடிதம் குறித்து பொருளாளர் சுபாஷ் அவர்களிடம் தெரிவித்த போது இந்த கடிதம் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று தெளிவுபட நமக்கு தெரிவித்துள்ளார்.

கேள்வி 3
பொருளாளர் சுபாஷ் உங்களுக்கு தெரிவித்த இந்த பதிலை நிர்வாக சபையின் முன்னிலையிலோ, அன்றில் ஊடகத்துக்கோ தெரிவிப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்
நிச்சயமாக தெரிவிப்பார். ஏனெனில் அவர் இது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமாக எமக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் பொருளாளர் சுபாஷ் அவர்களின் கையெழுத்து இல்லை. இந்த கடிதத்தை “அதிரடி” இணையத்துக்கும் பகிரங்கப்படுத்த அனுப்பி வைக்கிறோம். அதில் பொருளாளர் இன் கையொப்பம் இல்லை என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி 4
நீங்கள் எப்போது முதல் இவ்வாலயத்தின் கணக்குப் பரிசோதகர்களாக உள்ளேர்கள்?

பதில் ..
குணரெட்னம் பண்பழகன் ஆகிய இருவரும் 2016, 17, 18 முதல் கோயில் நிர்வாகக் கணக்குப் பரிசோதகர்களாகவும், 2018, 19, 20 இல் இருந்து கோடீஸ்வரன் காணிகட்டிடக் குழு கணக்காய்வாளராகவும், 2019, 2020இல் கோயிலும், காணிக்கட்டிடக்குழு கணக்காய்வாளாராகவும் இருந்து வந்துள்ளோம். நாம் கோயிலும், கட்டிடக்குழு ஆகிய இரண்டின் கணக்குப் பரிசோதகராக இருக்கிறோம்.

கேள்வி 5
இப்போது உங்களை அப்பொறுப்பில் இருந்து நீக்கியத்துக்கான காரணம் என்ன?… (தொடரும்)

கணக்காய்வாளர் எமக்கு வழங்கிய செவ்வியின் முழுமையான விபரம் என்ன? என்பது தொடர்வதுடன்.. எமது கேள்விக்கு, பொருளாளரின் பதில் என்ன? கந்தசஷ்டி உபயகாரர்கள் சிலர் தெரிவித்த தகவல்கள் என்ன? உண்மையில் நடந்தது என்ன? எனும் விபரம் தொடரும்..

(இதேவேளை ஆலயத்தைக் குறித்து உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிடுவோர் குறித்து “சட்ட நடவடிக்கை” எடுக்கப்படும் என கோயிலால் துண்டுபிப்பிரசுரம் வெளியிடப்பட்டதாக “அதிரடி” இணையத்துக்கு சிலர் அறிய தந்துள்ளனர்.
*** “அதிரடி” இணையமானது எப்போதும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது இல்லை. எக்காலத்திலும் எந்தவொரு நடவடிக்கைக்கும் பயந்து “அதிரடி” இணையம் ஒதுங்கி ஓடாது. “உண்மை, நேர்மை, நடுநிலைமை” என்பதை மையப்படுத்தி செயல்படும் “அதிரடி” இணையத்தை எவரும் மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என்பதை துணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.)

இதேவேளை “இடைநிறுத்துகிறோம்” எனும் கடிதத்தை கணக்குப் பரிசோதகர்களுக்கு அனுப்ப முதல் “சுவிஸ் சட்டத்தின்படி மூவருக்கும் தனித்தனியாக அனுப்ப வேண்டும் என்பதோ, சுவிஸ் மொழியில் இருக்க வேண்டும் என்பதோ, ஒரிஜினல் கடிதத்தையே உரியவர்களுக்கு அனுப்ப வேண்டுமோ என்பது தெரியாமல் ஆலயக் கணக்குப் பரிசோதகர்களுக்கு கடிதத்தை அனுப்பி விட்டு, இப்போது “உண்மையை வெளிக்கொணரும்” ஊடகங்களுக்கு மிரட்டல் விடுக்க வேண்டாமென” ஆலய நிர்வாகத்துக்கு நயமுடனே தெரிவித்துக் கொள்கிறோம்.

-தகவல்.. -புங்கையூரான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*