;
Athirady Tamil News

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் தொடரும் சர்ச்சை!! முற்றுப்புள்ளி வைப்பது யார்?

0

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் தொடரும் சர்ச்சை!! முற்றுப்புள்ளி வைப்பது யார்?

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் தொடரும் சர்ச்சை!! கணக்கு விபரங்கள் கேட்போர் நீக்கப்படுகிறார்கள்.. தொடர்ந்து நிர்வாகத்தில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்…

முற்றுப்புள்ளி வைப்பது யார்?

பேர்ண் கல்யாண முருகன் ஆலயத்தில் கடந்த வாரம் அதிரடியாக 3 கணக்கு பரிசோதகர்களும் நீக்கப்பட்டது தொடர்பாக எமது “அதிரடி” இணையத்தில் பகிரங்கப்படுத்தி இருந்தோம்.

இதனைத் தொடர்ந்து அதிரடி நிர்வாகத்துடன் தொடர்பு கொண்ட சிலர் “இந்த விடயம் சார்ந்து செய்திகளை வெளியிட வேண்டாமெனவும், தாம் நிர்வாகத்துடன் பேசி இந்தப் பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முயற்சி செய்ய போவதாகவும் தொடர்ந்து பிரச்சனைகளை வளர்க்க வேண்டாம்” எனவும் கேட்டுக் கொண்டனர். நாமும் ஆலய தொண்டர்களின் நன்மை கருதி கடந்த ஐந்து தினங்களாக பொறுமை காத்து வந்தோம்.

ஆயினும் இன்றைய தினம் சுவிஸ் பெர்ன் முருகன் ஆலய நிர்வாகத்தின் வாட்ஸ்அப் குழுமத்தில் வழிவந்த செய்தியானது கணக்கு கேட்பவர்களையும் குறிப்பாக கணக்கு பரிசோதகர்களை வெளியேற்றியது போல தற்போது பதவியில் உள்ள பொருளாளர் தானாகவே விலகிச் செல்ல நிர்ப்பந்திப்பது போன்று உள்ளது.

இதன் மூலம் அங்கே ஒரு சர்வாதிகார போக்குடன் ஆன நிர்வாகமே இயங்குவதாக உணரமுடிகிறது.

இதுகுறித்து கோவில் நிர்வாகசபை தலைவர், செயலாளர் சார்பில் வாட்ஸ்அப் குழுமத்தில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கையில்…

“நேற்றைய கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்.
பொருளாளர் கணக்கை காட்ட கூட்டம் வேண்டும் என்று அறிவித்து விட்டு கூட்டத்துக்கு வராமல் இருந்தது சிரமத்தின் மத்தியில் வந்த அங்கத்தவர்களை அவமதிப்பதாகும்.

சுவிஸ் வேலை இழப்பு நஷ்டஈடு, கொரோனாவால் வருமான இழப்பு பெறுதல் முகமாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு அவசரமாக அனுப்புவதற்கு கடைசி மூன்று மாத ஆலய கணக்கு வழங்கல் வேண்டும்.

எனவே கணக்கை இன்றிலிருந்து 5 நாட்களுக்குள் அவசர கூட்டம் கூடி கணக்கை ஒப்படைக்குமாறு கேட்கப்படுகின்றீர்கள். அத்துடன் தவறும் பட்சத்தில் குறித்த திகதிக்குள் அனுப்பாமல் இழப்பீட்டு வரவு தொகை தடைப்படுமாயின் அதற்கான பொறுப்பை பொருளாளர் ஏற்றல் வேண்டும்.

பொதுவானவை
நிர்வாகசபை கூட்டத்தில் பெரும்பான்மை அங்கத்தவர் முடிவு ஒன்று எட்டப்படுமாயின் அது ஒட்டுமொத்த நிர்வாக முடிவாகும், அந்த முடிவை எதிர்ப்பவர்களும் நிர்வாக முடிவுக்கு கட்டுப்பட்டு ஆதல் வேண்டும். வலுவாக எதிர்ப்பின் சபையிலிருந்து விலகி எதிர் கருத்துக்களை எங்கு வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம்.

ஆகவே சபையில் இருந்து கொண்டு சபைக்கு எதிராகவும் ஆலயத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தாமலும் சபையுடன் சேர்ந்து இயங்க சாத்தியமில்லாத அங்கத்தவர்கள், தாங்களாகவே சபையில் இருந்து விலகுதல் சிறந்த செயலாகும்”.
என குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி நிர்வாகசபையின் அறிக்கையினையை “பேர்ண் முருகன் ஆலய வரவு செலவு கணக்கு விபரங்களை திட்டமிட்ட ரீதியில் பொருளாளர் சமர்ப்பிக்காமையால் நிர்வாகத்துக்கு பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிய வந்துள்ளது” எனக் குறிப்பிட்டு சிலர் பல்வேறு வாட்ஸ்-அப் குழுமத்தில் மேற்படி அறிக்கையினை பிரசுரித்துள்ளனர்.

ஆயினும் மேற்படி அறிக்கையினை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டவர்கள் ஆலயத்தில் நிர்வாக சபையில் உள்ள சிலர் எனவும் அவர்களில் சிலர் ஆலயத்திற்கு வருவோரை சோத்துக்காகவே வருபவர்கள் என ஆலயத்தில் வைத்தே இழிவுபடுத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இதன் உண்மை நிலையை அறியும் பொருட்டு “அதிரடி” இணையம் பல முனைகளிலும் தகவல்களை பெற்றுள்ளது.

அதனடிப்படையில் ஆலய நிர்வாகசபை வாட்ஸ்-அப் குழுமத்தில் பொருளாளர் பதிவிட்ட தகவல்களும் “அதிரடி” இணையத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

அவ்வறிக்கையில்…
“பொருளாளர் சம்பந்தமான ஓர் கடிதத்தை ஆலய நிர்வாகசபை Whatsapp இல் பார்த்தேன். ஏற்கனவே ஏனையோரின் கருத்துக்களை எழுத Whatsapp தடை செய்யப்பட்டிருந்தது. 06.12.2020 முன்பு கணக்கை சமர்ப்பிக்க எனக்கு நேரம் ஒதுக்கி தருமாறு ஏற்கனவே பொருளாளர் ஆகிய நான் செயளாளரிடம் கேட்டிருந்தேன். அதற்கு ஒரு பதிலும் இல்லை.

அதன் பிற்பாடு 08.12.2020 அதிகாலை 02.08 மணிக்கு செயளாளரால் 11.12.2020 வெள்ளி நிர்வாகசபை கூட்டம் என நிர்வாகசபை Whatsapp மூலம் அறிவித்திருந்தார் .

பின்பு செயளாளரிடம் தொலைபேசியினூடாக கேட்டபோது “தான் தன்னிச்சையாக அறிவித்ததாகவும், பின்பு அவர் தலைவரிடம் கேட்டு அறிவிப்பதாகவும்” கூறியிருந்தார். ஆனால் கூட்டம் சம்பந்தமாக செயளாளரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் பின்பு எனக்கு வரவில்லை .

அத்துடன் மீண்டும் அறியத்தருகிறேன் வருகிற திங்கள், செவ்வாய் இவ்விரண்டு நாட்களுக்குள் நிர்வாகசபையை கூட்டினால் என்னால் கணக்கை சமர்ப்பிக்க முடியும். எனது கடமையை சரிவர செய்ய ஒத்துழைக்கா விட்டாலும் இடையூறு செய்யாமல் இருக்குமாறு தயவாக கேட்டுக் கொள்கின்றேன்”.
எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதே ஆலய வாட்ஸாப்ப் குழுமத்தில் மேற்படி பொருளாளர் இன் அறிக்கைக்கு பதிலளித்த செயலாளர் அவர்கள்,
“நான் தவறுதான் செய்து விட்டேன் திரும்ப அறிவிக்காமல் விட்டது மன்னிக்கவும்.”
என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு அதே வாட்ஸ்-அப் குழுமத்தில் பதிலளித்த தலைவர் அவர்கள்…

“கூட்டத்திற்கு வட்சப் மூலமாக செயலாளர் அறிவித்திருந்தார் கூட்டம் இல்லை என்று மீண்டும் எழுதவில்லை எது எப்படியோ வரும் செவ்வாய் அவசர கூட்டம் ஒன்றை செயலாளர் அறிவிக்கவும் நன்றி.” என்று பதில் அளித்துள்ளார்.

இதேவேளை “அதிரடி” இணையத்துக்கு கிடைத்த முழுமையான தகவலின் அடிப்படையில் பொருளாளர் இடம் இருந்து கணக்கு அறிக்கையை பெற துடிப்பதானது சுவிஸ் அரசாங்கத்திடமிருந்து கொரோனா காரணமாக வழங்கப்படும் இழப்பினை பெறுவதற்கே ஆகும் எனத் தெரிய வருகிறது. அதாவது அவர்கள் இந்த நிர்வாக பிரச்சினையை தீர்ப்பதற்காக அல்ல என்பது உறுதியாகத் தெரிய வருகிறது.

****பேர்ண் முருகன் ஆலயப் பிரச்சனை உரிய நியாயமான முறையில் தீர்க்கப்படாது விட்டால் “அதிரடி” இணையத்துக்கு கிடைத்த அனைத்து உண்மை தகவல்களும் தொடர்ச்சியாக பகிரங்கப் படுத்தப்படும்.

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் குளறுபடிகள் உச்சகட்டம்… நடந்தது என்ன?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 4 =

*