;
Athirady Tamil News

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய செயலாளர் திடீர் இராஜினாமா.. பின்னணி என்ன? (படங்கள்)

0

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய செயலாளர் திடீர் இராஜினாமா.. பின்னணி என்ன? (படங்கள்)

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் தொடரும் சர்ச்சை!! கணக்கு விபரங்கள் கேட்போர் நீக்கப்படுகிறார்கள்.. தொடர்ந்து நிர்வாகத்தில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்… இதன் எதிரொலியாக ஆலய நிர்வாக சபையின் செயலாளராக இருந்த திரு.திருநாவுக்கரசு இராசையா எனும் ரவி அவர்கள் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்து உள்ளதாக தெரிய வருகிறது.

முற்றுப்புள்ளி வைப்பது யார்?

பேர்ண் கல்யாண முருகன் ஆலயத்தில் கடந்த வாரம் அதிரடியாக 3 கணக்கு பரிசோதகர்களும் நீக்கப்பட்டது தொடர்பாக எமது “அதிரடி” இணையத்தில் பகிரங்கப்படுத்தி இருந்தோம்.

இதனைத் தொடர்ந்து அதிரடி நிர்வாகத்துடன் தொடர்பு கொண்ட சிலர் “இந்த விடயம் சார்ந்து செய்திகளை வெளியிட வேண்டாமெனவும், தாம் நிர்வாகத்துடன் பேசி இந்தப் பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முயற்சி செய்ய போவதாகவும் தொடர்ந்து பிரச்சனைகளை வளர்க்க வேண்டாம்” எனவும் கேட்டுக் கொண்டனர். நாமும் ஆலய தொண்டர்களின் நன்மை கருதி கடந்த இருவாரமாக பொறுமை காத்து வந்தோம்.

ஆயினும் சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய நிர்வாகத்தின் வாட்ஸ்அப் குழுமத்தில் வழிவந்த செய்தியானது கணக்கு கேட்பவர்களையும் குறிப்பாக கணக்கு பரிசோதகர்களை வெளியேற்றியது போல தற்போது பதவியில் உள்ள பொருளாளர் தானாகவே விலகிச் செல்ல நிர்ப்பந்திப்பது போன்று உள்ளது.

கடந்த ஆறு தினங்களுக்கு முன்னர் நடந்த கோயில் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட, “ஊர், சாதி, சோத்துக்காக வருவோர்” எனக் குறிப்பிட்டுக் கதைக்கும் “தீவான்” எனும் அடைமொழியை கொண்டு வாழும் ஒருவரின் உரையாடலைத் தொடர்ந்து, நிர்வாகத்தில் உள்ள சிலர் தமது பொறுப்புக்களில் இருந்து விலகுவதெனத் தீர்மானித்து இருந்தனர்.

இதேபோல் இருதினத்துக்கு முன்னர் பொருளாளரினால் “கடந்த மூன்று மாத” கணக்கறிக்கையை ஒப்படைக்கும் கூட்டத்திலும், பொருளாளருக்கு தெரியாமலே அக்கூட்டத்தின் உரையாடல்களை இரகசியமாக தலைவர் அவர்களால் ஒலிப்பதிவு செய்யப்பட்டதும், இது முன்னறிவித்தல் இன்றி இரகசியமாக நடைபெற்றது சுவிஸ் சட்டத்துக்கு முரணானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தாமே ஆதிக்கம் செலுத்த வேண்டுமென விரும்பும் சிலரால் தற்போதைய செயலாளர் மற்றும் பொருளாளரை நீக்கி விட்டு தமது கைப்பொம்மைகளான “சாமி மற்றும் ராம் பாலா” ஆகியோரை அப்பதவிக்கு கொண்டு வரும் நோக்கில் எடுக்கப்பட்ட முயற்சியினால் சம்பந்தப்படடவர்களுக்கு கொடுக்கப்பட்ட மனஅழுத்தமே தற்போதைய செயலாளரின் இராஜினாமாவுக்கு காரணமெனவும் தெரிய வருகிறது.

கோவில் வாட்சப் குழுமத்தில் செயலாளரின் இராஜினாமும் அதுக்குரிய கோயிலின் பதிலும் பதிவிட்டுள்ள அதேவேளை, கோவில் கடிதத்தால் பதிவிட்ட பதில் கடிதத்தில், அதை எழுதியவரின் பெயரோ, கையெழுத்தோ இல்லாதது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவர்களால் எடுக்கப்படும் முயற்சிகள் தவறு எனவும், இதுக்கு தீர்வு காண வேண்டுமெனில் “உடனடியாக பொதுச்சபையை கூட்டுவதே சிறந்த வழி” எனவும் பலரும் கருத்துத் தெரிவித்துள்ள போதிலும், தற்போதைய சூழ்நிலையைக் காரணம் காட்டி தொடர்ந்து இழுபறியே தொடருமெனவும் தெரிய வருகிறது.

(இதேவேளை இருதினத்துக்கு முதல் நடைபெற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தில் “அதிரடி” இணையம் குறித்து சிரிப்பாக வருவதாகவும், அதில் வரும் செய்திகளைக் கணக்கெடுப்பது இல்லையெனவும்” தலைவர் உட்பட சிலர் தெரிவித்ததாக நாம் அறிகிறோம்.
“எம்மைக் கணக்கெடுக்காத நீங்கள், எதுக்கு எம்மீது (ஊடகங்கள் மீது) சட்ட நடவடிக்கை எடுப்போமென, ஆலயத்தின் கடிதத் தலைப்பில் அறிக்கை மூலம் பூச்சாண்டி காட்டீனீர்கள்?” என்பதையும் சொல்லி விடுங்களேன் என “அதிரடி” இணையம் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறது.)

****பேர்ண் முருகன் ஆலயப் பிரச்சனை உரிய நியாயமான முறையில் தீர்க்கப்படாது விட்டால் “அதிரடி” இணையத்துக்கு கிடைத்த அனைத்து உண்மை தகவல்களும் தொடர்ச்சியாக பகிரங்கப் படுத்தப்படும்.

தகவல்.. சுவிஸிலிருந்து புங்கையூரான்..

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் தொடரும் சர்ச்சை!! முற்றுப்புள்ளி வைப்பது யார்?

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் குளறுபடிகள் உச்சகட்டம்… நடந்தது என்ன?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 1 =

*