;
Athirady Tamil News

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் குழப்பம், நடந்தது என்ன?? (படங்கள்)

0

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் குழப்பம், நடந்தது என்ன?? (படங்கள்)

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் கணக்காய்வாளர்களாக இருந்தவர்களை எந்தவொரு காரணமும் இல்லாமல், சர்வாதிகாரப் போக்கில் கணக்காய்வாளர் பொறுப்பில் இருந்து நீக்கியதினால் ஏற்பட்ட பிரச்சினைகளையும், குளறுபடிக்கான காரணத்தையும் “அதிரடி” இணையம் பகிரங்கத்தில் வெளிக்கொண்டு வந்து இருந்தது.

அப்பிரச்சினை நீண்ட விபரமாக இருந்ததினால், பகுதிபகுதியாக “அதிரடி” இணையம் வெளிக்கொண்டு வந்தவேளை, கணக்காய்வாளர்கள் உரியதீர்வு கிடைக்காத பட்ஷத்தில், சுவிஸ் சட்ட ரீதியாக தாம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்ததை அடுத்து அவர்களின் வழக்குக்கு உதவியாக நாம் செய்திகளைத் தொடர்ந்து பதிவிடுவதை தற்காலிகமாக நிறுத்தி இருந்தோம்.

இந்த நிலையில் நாளை மறுதினம் சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள “தைப்பூசம் மற்றும் தங்கரத தேர் பவனியும்” நடைபெறவுள்ள நிலையில் அதன் உபயகாரரான அச்சுவேலியைச் சேர்ந்த ராஜு எனும் சுபாஸ்கரன் மீது கொண்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், பிரதேச வேறுபாட்டை முன்னிறுத்தியும் சில ஒழுங்கு விதிகளை ஆலயத்து தலைவர் நடத்தும் வாட்சப் குழுமத்தில் பதிவிடப்பட்டு உள்ளதெனத் தெரிய வருகிறது.

தற்போதைய அசாதாரண கொரோனா சூழ்நிலைமையைக் காரணம் காட்டியே இது எழுதப்பட்டதாகத் தெரிய வருகின்றது. ஆயினும் கடந்த ஒன்பது மாதங்களாக இதுபோன்ற எந்தவொரு கட்டுப்பாட்டு அறிவித்தலும் ஏனைய உபயகாரர் எவருக்கும் அறிவிக்கப்படாத சூழ்நிலையில், இருநாட்களுக்கு முன்னர் கூட, ஆலயத்தில் சிறப்பாக பூசை தொகையான பொதுமக்களுடன் நடைபெற்ற நிலையில், இக்கடிதம் வரையப்பட்டதுக்குரிய காரணம் மேற்படி உபயகாரர் ஆலய பொருளாளர் மட்டுமல்ல, சர்வாதிகாரமாக இடைநிறுத்தப்பட்ட ஆலயக் கணக்காய்வாளர்களின் நண்பர் என்பதுமே எனப் பலரும் அங்கலாய்க்கின்றனர்.

இதேவேளை மேற்படி அறிவித்தல் கடிதத்தை, தலைவர் தன்னிச்சையாக எழுதியுள்ள போதிலும், அதனைக்கூட ஆலயத்தின் கடிதத் தலைப்பிலோ, அன்றில் உரிய முறையிலோ எழுதப்படவில்லை என்பதுடன், அதில் எவரது கையெழுத்தும் இல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி தலைவரின் பின்னணியில் உள்ளவர் அண்மையில் வெளிநாடொன்றுக்கு சென்று திரும்பி வந்து “கொரோனா தனிமைப்படுத்தலில்” இருந்தவரே எனப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேவேளை உபயகாரர் திரு.சுபாஸ்கரன் “அது உண்மை தான் எனவும், அங்கிருந்த எழுத்தோட்ட ஒளிவடிவத்தில் கூட உபயகாரரின் பெயர் பதியப்படாமல் இருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது எனவும் தெரிவித்தார். இதுவோர் பிரதேச வேறுபாட்டை முன்னிலைப்படுத்தி, தைப்பூச விழாவை குழப்பும் நோக்குடனே இக்கடிதம் உபயாகாரருக்கு அனுப்பட்டுள்ளது எனவும், மேலும் அக்குடும்பத்தை நிம்மதியாக பூசையை செய்ய விடாமல் மன உழைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார் தலைவரும் அவர் பின்னால் செயற்படும் குழுவினரும் என சந்தேகபட வேண்டி உள்ளது என உபயக்காரரின் உறவுகள் சிலரும் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து “அதிரடி” இணையம் உபயகாரர் திரு.சுபாஸ்கரன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “செயலாளர், உபதலைவர் போன்ற பலருடனும் இதுகுறித்து நியாயத்தையும், விளக்கத்தையும் தான் கேட்ட போது, அவர்களுக்கும் எதுவும் தெரியாது என்றே என்னிடம் சொன்னார்கள் எனவும், அதேபோல் தலைவருக்கு பலமுறை தொலைபேசி மூலம் விளக்கம் கேட்க முற்பட்ட போதும், அவர் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளாததினால், எழுத்து மூலம் தான் நேற்றிரவு செயலாளரிடம் விளக்கம் கேட்டதாகவும், அவரும் எந்தவொரு பதிலும் தராததினால் உள்ளதினாலேயே, எனது பொறுமையை எனது இயலாமை என்று கருதக் கூடாது என்பதினால், அதன் பின்னரே ஆலய அடியார்களிடமும், பொதுமக்களிடமும் பகிரங்கப்படுத்தி உள்ளேன் எனவும்” தெரிவித்தார்.

ஓம் முருகா . செயளாளர் அவர்கட்கு . தலைவர் தீபன் அவர்களால் தைப்பூச உபயகாரர் ஆகிய எனக்கு வேண்டுகோள் மொட்டைக்கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இம் மொட்டைக்கடிதம் பற்றி செயளாளர் ஆகிய உங்களுக்கு தெரியுமா ? ஏற்கனவே நடைபெற்ற பல விஷேட தினங்களில் இப்படியான நடைமுறைகளை செயற்படுத்தபடவில்லை என்பது தெரிந்தவிடயமே. தைப்பூச விழாவை குழப்புவதற்காக ஒரு குழுவினர்கள் செயற்படுகிறார்கள் என்று உணருகிறேன். இது பற்றி செயளாளரின் கருத்து என்ன என்பதை எழுத்து மூலம் அறியத்தரவும். நன்றி . தைப்பூச உபயகாரர் ( பேர்ண் முருகன் ஆலய பொருளாளர் ராயு )

§§§§§§§§§§§§§§§§§§

ஓம் முருகா . பேர்ண் முருகன் ஆலய தலைவர் , செயளாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு. தைப்பூச பெருவிழாவை குழப்பும் திட்டத்தடனும், தைப்பூச உபயகாரருடன் தனிமனித விரோதமும், ஊர் பிரதேசவாதமும் என்பதை தலைவர் அனுப்பிய மொட்டைக்கடிதம் மூலம் என்னால் சந்தேகிக்க முடிகிறது. கொரோனா ஆரம்பமாகி நாள் தொடக்கம் இன்று வரை இப்படியான ஓர் கடிதம் உபயகாரருக்கு அனுப்பியது இல்லை. ஆலய கடித தலைப்பில்லாமலும் தலைவர் செயளாளரின் கையொப்பம் இல்லாமலும் அனுப்பியது தாங்கள் தப்பித்துக்கொள்ளும் தந்திரோபாயம். மேலும் இவ் மொட்டைக்கடிதம் சம்பந்தமாக உபதலைவரிடமும் , செயளாளரிடமும் ஒரு சில உறுப்பினரிடமும் கேட்டபோது தமக்கு இக்கடிதம் சம்பந்தமாக எதுவும் தெரியாதென பதில் தந்துள்ளனர். உங்களிடம் இருந்து தகுந்த பதில் வராத பட்சத்தில் 20:00 மணிக்கு பின்பு ஊடகவாயிலாக பொதுமக்களுக்கு அறிவிக்க உள்ளேன்.

§§§§§§§§§§§§§§§§§§

வணக்கம் செயளாளர் அவர்கட்கு. உங்களிடமும் இருந்தும் பதில் வராததால் தைப்பூச உபகாரராகிய எனக்கு பேர்ண் முருகன் ஆலயத்தால் தைப்பூச விழாவைக் குழப்பும் நோக்குடன் தனிமனித விரோதத்தை பழி தீர்க்கவும் , ஊர் பிரதேசவாதத்தையும் , தைப்பூச விழாவை குழப்பும் நோக்கத்துடன் கொண்டு தலைவர் வேறு சிலருடன் சேர்ந்து எனக்கு நேரடியாகவும் ஆலய நிர்வாக குழுமத்திற்கும் தலைவர் செயளாளர் கையொப்பம் இல்லாமலும் , ஆலய கடித தலைப்பில்லாமலும் மொட்டைக்கடிம் அனுப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார் என்பதை பொதுஊடகம் ஊடாக பொதுமக்களுக்கு அறியப்படுத்த உள்ளேன். காரணம் இது போன்ற செயற்பாடுகள் இனிமேலும் வேறு உபயகாரருக்கு நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக. நன்றி தைப்பூச உபயகாரர்.

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் குளறுபடிகள் உச்சகட்டம்… நடந்தது என்ன?

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் தொடரும் சர்ச்சை!! முற்றுப்புள்ளி வைப்பது யார்?

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய செயலாளர் திடீர் இராஜினாமா.. பின்னணி என்ன? (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + three =

*