;
Athirady Tamil News

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய செயலாளர் திடீர் விலகல்.., பொருளாளரை வெளியேற்ற முடிவு(?).. நடப்பது என்ன??

0

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய செயலாளர் திடீர் விலகல்.. பொருளாளரை வெளியேற்ற முடிவு(?).. நடப்பது என்ன??

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில், கடந்த சிலமாதங்களாக “காணிக்குழுவில்” உள்ள தலைவர், உபதலைவர், பொருளாளர், ஆகியோர் மேற்கொள்ளும் தனிப்படட சர்வாதிகாரமான முடிவுகளினால் பல குளறுபடிகள் ஏற்பட்டு வருவதை “அதிரடி” இணையம் உடனுக்குடன் ஆதாரங்களுடன் சுவிஸ் மக்கள் மத்தியில் வெளிக்கொணருவது நீங்கள் அறிந்ததே. இவர்களுடன் இணைந்த பொதுச்சபையால் தெரிவு செய்யப்படாத நிர்வாகசபை உறுப்பினரென தன்னைத் தானே கூறிக் கொண்டு, ஆலயத்துக்கு வருவோரை “சொத்துக்காகவும், சோத்துக்காகவும்” வருபவர்கள் என கேவலப்படுத்தும் நபரும் இணைந்து செயல்பட்டு பல குழப்பங்களை உருவாக்கி வருவதாக நம்பகரமான வடடாரங்கள் மூலம் தெரிய வருகிறது.

ஆரம்பத்தில் “காணிக் கட்டிட சபை பொருளாளரிடம், காணிக்குரிய கணக்கு வழக்குகளை சரிபார்ப்பத்துக்கு தருமாறு பலமுறை பலவழிகளில் கோரியும், அதனை ஒப்படைக்காது” காரணமின்றி கணக்குப் பரிசோதகர்கள் மூவரை இடை நிறுத்தம் செய்ததை யாவரும் அறிந்ததே.

01.03.2020 ஆம் திகதி முதல் இன்று வரை ஆலய நிர்வாகசபையுடன் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவுகளை ஆலய தலைவர் சர்வாதிகாரமாகவும் வேறு குழுவின் (காணிக் குழுவின்) கைப்பொம்மையாவும் நிர்வாக உறுப்பினர்களை அவமதிப்பதன் காரணத்தால் செயலாளர் இராஜினாமா செய்துள்ளாரென தெரிய வருகிறது. ஆயினும் அவரை மீண்டும் அடுத்த பொதுச்சபை தெரிவுவரை பொறுப்பில் இருக்குமாறு சிலர் வலியுறுத்தி வருவதாகவும் தெரிய வருகிறது.

மேலும் ஆலய நிர்வாக சபைப் பொருளாளரையும் வெளியேற்ற ஏற்பாடு நடைபெறுவதாக தகவல்கள் கசிந்துள்ளது. தற்போதைய நிர்வாகசபையின் காலம் 31.03.2021 இல் முடிவு பெறவுள்ளதால் இப்படியான செயல்கள் பொதுமக்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்ற வாரம் சபையினரை பூசைக்கு வரும்படி அழைத்து தங்களுக்கு சார்பானவர்களை வைத்து திடீரென கூட்டத்தை கூட்டி பொருளாளரை சட்டத்திற்கு விரோதமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அதனை பல மணி நேரமாக பிழை என வாதாடி இருந்தார் செயலாளர் எனவும், மேலும் நிர்வாகசபைக்கு தெரியாமலும் செயலாளருக்கு தெரியாமலும் யாரை கேட்டு இப்படி சர்வாதிகார நடவடிக்கை எடுக்கிறியல் என தர்க்கப்பட்டு கடைசியில். கையெழுத்து வைத்ததாக தகவல் கிடைத்துள்ளது.

இது சர்வாதிகார செயல் என்பதால் தனது செயளாலர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் பலராலும் தெரிய வந்ததை அடுத்து செயளாலரை “அதிரடி” இணையம் தொடர்பு கொண்ட போது தொடர்பு கிடைக்கவில்லை. பின்பு பொருளாளரை தொடர்பு கொண்ட போது “எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை, தனக்கு எதுவும் தெரியாதெனவும்”, “அதிரடி” இணையத்துக்கு தெரிவித்து உள்ளார்.

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் குழப்பம், நடந்தது என்ன?? (படங்கள்)

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் தொடரும் சர்ச்சை!! முற்றுப்புள்ளி வைப்பது யார்?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*