;
Athirady Tamil News

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொருளாளர் தூக்கி எறியப்பட்டார்.. செயலாளர் விலகல்?.. நடந்தது என்ன??

0

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொருளாளர் தூக்கி எறியப்பட்டார்.. செயலாளர் விலகல்?.. நடந்தது என்ன??

ஆலயம் ஆரம்பித்த காலம் தொட்டு செயளாளராகவும், பொருளாளராகவும், நிர்வாகசபை உறுப்பினராகவும் எனப் பல பொறுப்புக்களிலும் இருந்த ராஜு எனும் தர்மலிங்கம் சுபாஸ்கரன் பொருளாளர் பொறுப்பில் இருந்து திடீரென “குழுவால்” வெளியேற்றப்பட்டு உள்ளார். கடந்த வருட இறுதிப் பகுதியில், பேர்ண் முருகன் ஆலயக் கணக்கை முழுமையாக தமது பரிசோதனைக்கு ஒப்படைக்கும்படி கோரிய கணக்காய்வாளர் மூவரும் இவ்வாறே, வெளியேற்றப்பட்டு “அதிரடி” இணையம் செய்தி பிரசுரித்து இருந்தது நீங்கள் அறிந்ததே.

செயலாளர் வெளியேறினார்..

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய கணக்காய்வாளர் மூவரும் வெளியேற்றப்பட்டதினால், அப்போது செயலாளராக இருந்த திரு. திருநாவுக்கரசு இராசையா எனும் ரவி அவர்கள் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்து வெளியேறிய போதும், செயலாளருடன் “இந்த பொதுச்சபை மீண்டும் கூடுவதுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதினால், ராஜினாமாக் கடிதத்தை வாபஸ் பெற்று இணைந்து பயணிக்குமாறு” மீண்டும் கேட்கப்பட்டு இணைக்கப்பட்டார்.

பொருளாளர் வெளியேற்றம்…

இதேவேளை “அதிரடி” இணையத்துக்கு தகவல்கள் வழங்கிய குற்றச்சாட்டிலும், தமக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையெனவும் குற்றம்சாட்டி தாம் பரிதாபத்துக்காக நிர்வாகசபையில் இணைத்ததைக் கூறி, ராஜு எனும் தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களை, பொருளாளர் பொறுப்பில் இருந்து திடீரென “குழுவால்” வெளியேற்றப்பட்டு உள்ளார்.

01.03.2020 ம் திகதி பொதுச்சபையால் தெரிவு செய்யப்பட்ட பொருளாளரை உண்மைக்குப் புறம்பாக வெளியேற்றல், பரிதாபத்திற்காக தெரிவு செய்ததாக ஆலய தலைவர் குறிப்பிட்டது போன்ற விடயங்கள் தவறு எனவும், அதிரடியில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என்றால் “அதிரடி”யுடன் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது “அதிரடி”க்கு எதிராக வழக்குத் தொடர வேண்டுமே தவிர பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இதுபோன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபடுவது முறையல்ல எனப் பலரும் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்கு கிடைத்த தகவலின்படி, பேர்ண் முருகன் ஆலய பொருளாளரான ராஜு எனும் தர்மலிங்கம் சுபாஸ்கரனால் காணிக்கட்டிட சபையின் வங்கிக்கணக்கில் வைப்பில் இடப்பட்ட பணத்திற்கான கிட்டத்தட்ட (2,20,000,- Chf) வரவு செலவுக்கணக்கின் பிரதி தரும்படி பல தடவை கேட்டதாலும், மேலும் தலைவர் தீபன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் கணக்கு விபரத்தையும் மேலும் 29.02.2020 இடம்பெற்ற லச்சார்ச்சனை வரவு 17,800.- Chf கணக்கு விபரத்தையும் பல மாதங்களாக பொருளாளரிடம் ஒப்படைக்கும்படி கேட்டதாலும் மேலும் 2020 தை, மாசி மாதம் பழைய நிர்வாகத்தில், தானே பொருட்கள் கொள்வனவு செய்ததாக தலைவர் தீபன் கூறி பத்து மாதம் கழித்து 2020 மார்கழியில் பணம் தரும்படி கேட்டதாலும் மேலும் ஜந்திரத்தகடு கொள்வனவு செய்யப்பட்டற்கான பற்றுச்சீட்டு இல்லாமல் பணம் கேட்டதாலும் ஏற்பட்ட முரண்பாடே பொருளாளரை உடனடியாக வெளியேற்ற எடுத்த தீர்மானமென தெரிய வருகிறது.

இதேபோல் சரியான கணக்கு விபரத்தை காணிக்குழுவிடமும், ஆலயத்தலைவர் தீபனிடமும் பல தடவை கேட்டதாலேயே கணக்குப் பரிசோதகர்களும், பொருளாளரும் வெளியேற்றப்பட்டார்கள் எனவும் தெரிய வரும் அதேவேளை ஆலய பொருளாளரின் கணக்கு 01.03.2020 தொடக்கம் 30.11.2020 வரை தலைவர், செயளாளர், பொருளாளர், கணக்குப் பரிசோதகர்கள் மற்றும் சபையினராலும் சரிபார்த்து கையொப்பம் இட்டு பொதுமக்களின் பார்வைக்கு விளம்பரப் பலகையில் ஒட்டிய பின்பு பல மாதம் கழித்து உண்மைகளை மறைப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்து பொருளாளர் வெளியேற்றப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.

இதேவேளை பிந்திக் கிடைத்த தகவலின்படி, “31.03.2021 உடன் ஆலய சட்டவிதிமுறையின்படி தற்போதைய நிர்வாகசபையின் காலம் முடிவடைய உள்ளதால், திடீரென கணக்குப் பரிசோதகர்கள் மூவரும் நீக்கம், பொருளாளர் நீக்கம் போன்றவை யாவும் சர்வாதிகாரச் செயல்” என்பதை சுட்டிக்காட்டி, அதனைக் கண்டித்து 28.02.2021 அன்று செயளாளர் அவர்களும் மீண்டும் தனது செயலாளர் பொறுப்பில் இருந்து வெளியேறியுள்ளார் எனவும் தெரிய வருகிறது.

கணக்கு விபரங்களை தொடர்ச்சியாக கணக்குப் பரிசோதகர்களும், பொருளாளரும் கேட்பதனால் அவர்களை வெளியேற்றினால் கணக்குகளை ஆய்வு செய்யவோ அல்லது பொருளாளரிடம் காட்டாமல் அவர்களை வெளியேற்றினால் மற்றவர்கள் கேட்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதாலும் அவற்றை மறைப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டு என்பதினாலேயே இதுபோன்ற நடவடிக்கைகள் எனப் பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இப்படி தொடர்ச்சியான பிரச்சனையால் ஆலயத்தின் நன்மதிப்பு கெடுகிறது என்பதைக் காரணம்காட்டி, உடன் பொதுச்சபையை கூட்டும்படி ஆலய பொதுச்சபையினர், மற்றும் அடியார்களும் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர் எனவும் தெரிய வருகிறது.

மேலும் காணிகட்டிடசபை வரவுசெலவு , ஆலயத் தலைவர் தீபன் கையாண்ட கொடுப்பனவுகள் சம்பந்தமாக ஏற்பட்ட முரண்பாட்டை மறைக்கவே கணக்குப்பரிசோதகர்கள் மூவரும் நீக்கம், பொருளாளர் நீக்கம், செயளாளர் பதவிவிலகல் இடம்பெற்றுள்ளது இவை அனைத்திற்கும் பொதுச்சபையின் முடிவு தான் தீர்வாகுமென மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

— “அதிரடி” இணையத்துக்காக சுவிஸில் இருந்து புங்கையூரானுடன் இணைந்து உண்மைவிளம்பி”–

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − 2 =

*