;
Athirady Tamil News

சுவிஸ் தமிழ் பெண்ணின் ஓவியத்தை மாற்றி, பிழைப்பு நடத்தும் ஊடகங்களும், தேசியவாதிகளும்?.. (உண்மை என்ன?)

0

சுவிஸ் தமிழ் பெண்ணின் ஓவியத்தை மாற்றி, பிழைப்பு நடத்தும் ஊடகங்களும், தேசியவாதிகளும்?.. (உண்மை என்ன?)

அண்மையில் சுவிஸ் தமிழ் பெண் வரைந்த “Genocide” இனவழிப்பு ஓவியத்துக்கும் Raiffeisen Swiss Bank வழங்கிய பரிசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதியாக தெரிய வந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வை இன்று நடந்தது போல் காட்டி பிழையான தகவல்களை பரப்பிய தமிழ் ஊடகங்களும், பலரின் கவனத்தை ஈர்த்த ஓவியங்களும் குறித்து “அதிரடி” இணையத்துக்கு கிடைத்த தகவலை மக்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்..

உண்மையில் நடந்தது என்ன?

§§§§§§§ ஓவியம் ஒன்று… §§§§§§

சுவிற்சர்லாந்தில் அமைந்திருக்கும் Raiffeisen எனும் வங்கி நடாத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் ஓவியப்பிரிவில் «இசையின் உலகம்» எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கு 1வது பரிசு வழங்கப்பட்டுள்ளது. வெற்றிப் பரிசாக ஆயிரம் சுவிஸ்பிராங்குகளை வங்கி வழங்கி செல்வி. அபிர்சனா தயாளகுரு அவர்களை மதிப்பளித்துள்ளது.

மதிப்பளிப்பு நிகழ்வு 19.06.2019 அன்று அவுஸ்ரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெற்றிருந்தது. “இசை என்னை அசைக்கிறது” எனும் தலைப்பில் இவர் வரைந்த ஓவியம் பல ஆயிரம் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு வெல்லப்பட்டுள்ளது. ஈழத்தை சேர்ந்த இளையவருக்கு கிடைத்திருப்பது வரவேற்கக் கூடியதும், பாராட்டுதலுக்கு ஊறியதும் ஆகும்.

“இசையுடன் தொடர்புபடுத்தி, உங்கள் சொந்த அனுபவத்தினை கலையாகப் படையுங்கள்” என வங்கி கேட்டிருந்தது. இசை எப்படி உங்களை ஆட்படுத்துகிறது?, இசை ஆக்கத்திறனை எப்படி வளர்க்கிறது?, அதனை நீங்கள் உங்கள் கலையால் எப்படி வெளிப்படுத்துவீர்கள்? என்பன போட்டியில் கேட்டிருந்த விடயமாகும்.

“இசை கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறது, செய்திகளை கடத்துகிறது, தூதுசெல்கிறது, பார்வை மாற்றத்தை அளிக்கிறது, சிந்திக்க வைக்கிறது” எனும் பொருளில் பிறர் உதவி இல்லாமல் இவ் ஓவியம் தன்னால் நிறந்தீட்டி படைக்கப்பட்டதாக செல்வி அபிர்சனா தெரிவித்தார்.

ஈழத்தில் யாழ். இணுவிலை தாயகமாக்கொண்ட பெற்றோருக்கு சுவிற்சர்லாந்தில் அறோ மாநிலத்தில் புறுக்நகரில் பிறந்தவர் செல்வி தயாளகுரு அபிர்சனா ஆவார்.

சுவிற்சர்லாந்து நுண்கைலக் கல்லூரியில் ஓவியத்துறையில் பட்டயக் கல்வியை மேற்கொள்ளும் அவர் உயர்கட்டிடக் கட்டுமான வரைஞராகவும் மேற்படிப்பினை மேற்கொண்டு வருகின்றார். அவருக்கு “அதிரடி” இணையமும் பாராட்டுதலை தெரிவிக்கிறது.

§§§§§§§ ஓவியம் இரண்டு.. §§§§§§§

இலங்கையில் 2009ல் நடைபெற்ற இறுதியுத்தம், அதனைத் தொடர்ந்து இன்றுரை தொடரும் அடக்குமுறை போன்றவற்றை கருத்தோவியமாக வரைந்து கடந்த 01.03.2021 அன்று தமிழ் இன அழிப்பிற்கு பன்னாட்டு சமூகத்திடம் நீதிகேட்டு ஜெனீவாவில் “சுவிஸ் புலிகளால்” நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்ட மேடைக்காக செல்வி அபிர்சனா அவர்களால் தனிப்படட ரீதியில் வரையப்பட்டது இதுவாகும்.

ஆயினும் அங்கு மேடையில் இருந்தவர்களினால் “இந்த ஊர்வலத்தில் கொண்டு வரப்படட ஓவியத்தை வரைந்தவர் செல்வி அபிர்சனா எனவும் இவருக்கு சுவிஸ் வங்கியால் ஓவியத்துக்கு முதல்பரிசை அவுஸ்ரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் வைத்து வழங்கப்பட்டது” எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆயினும் “எந்த ஓவியத்துக்கு கிடைத்தது? என்பது புரியாமல், ஊடகங்கள் சிலவும், “சமூகவலைத்தள போராளிகள்” சிலரும் தவறான ஓவியத்துடன், தவறான தகவல்களை பரப்பி உள்ளனர்”.

அவுஸ்ரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் முதல்பரிசை ஓவியத்திறமையில் பெற்றுக் கொண்ட செல்வி அபிர்சனா அவர்களின் கலைத்திறமைக்கு “அதிரடி” இணையத்தின் வாழ்த்துகள்..

-தகவல் & படங்கள் சுவிஸிலிருந்து “அதிரடி” இணையத்துக்காக “புங்கையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*