;
Athirady Tamil News

சுவிஸ் நாட்டின் தேர்தலில் சாதித்த தமிழ் பெண்ணும், சாதிக்கத் துடிக்கும் தமிழர்களும்.. (படங்கள்)

0

சுவிஸ் நாட்டின் தேர்தலில் சாதித்த தமிழ் பெண்ணும், சாதிக்கத் துடிக்கும் தமிழர்களும்.. (படங்கள்)

நேற்று மார்ச் மாதம் 7 ம் திகதி சுவிற்சர்லாந்து சொலத்துாண் மாநிலசபைத் தேர்தலில் நான்கு தமிழர்கள் வெவ்வேறு பிரதேசங்களில் போட்டி இட்டிருந்தனர். அவர்கள் அவரவர் தொகுதியில் பெற்ற வாக்குகளையும் கீழே காணலாம்..

அனைவரும் மிககடுமையாக உழைத்ததின் விளைவாக பல ஏனைய வேட்பாளர்களை பின்தள்ளி முன்னேற கூடியதாக அமைந்திருந்தது. இவர்களில் முக்கிமாக பாராக் ரூமி Farah Rumy, எனும் இலங்கைத் தமிழ் முஸ்லீம் பெண் Solothurn-Lebern பிரதேசத்தில் 3522வாக்குகளை பெற்று சுவிற்சர்லாந்தின் மாநிலசபைகளில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் பெண் என்ற பெருமையை பெற்று கொள்கின்றார்.

இவரது பெற்றோர் இலங்கையை சேர்ந்த தமிழ் முஸ்லிமாக இருந்து இவர் சுவிஸிலேயே பிறந்து வளர்ந்து “வெற்றிவாகை சூடிய” அவரின் புதிய அரசியல் பிரேவசத்திற்கு சுவிற்சர்லாந்து வாழ் தமிழர் சார்பில் வாழ்த்துக்களையும் பெருமிதத்தினையும் “அதிரடி” இணையம் சார்பில் தெரிவித்து கொள்கின்றோம்.

அதே போன்று Dorneck-Thiersteinபிரதேசத்தில் போட்டியிட்ட சுலோஜன் சுந்தரலிங்கம் (SP) 1594 நான்கு வாக்குகளை பெற்று வெற்றிக்கு அருகாமையை நெருங்கியது எமக்கு பெருமிதத்தினை தருகின்றது. இன்னமும் 671 வாக்குகளை பெற்றிருந்தால் Shulojan வெற்றி பெற்றிருப்பார்.

சுவிஸ் Olten-Gösgen பிரதேசத்தில் போட்டி இட்ட ஸ்ரீ இராசமாணிக்கம் அவர்கள் 2.867 வாக்குகளை பெற்று சோசலிச ஜனநாயக கடசியில் போட்டியிட்ட ஏனைய 13 வேட்பாளர்களைபின்தள்ளி முன்னேறி உள்ளார்..இவரின் இந்த வெற்றியானது வருகின்ற மாதம் நடைபெற இருக்கும் Olten நகரசபை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பினை உறுதிப்படுத்தும் என நம்புகின்றோம்.

சுவிஸ் Bucheggb.-Wasseramt பிரதேசத்தில் நடைெபற்ற தேரதலில் சோசலிச ஜனநாயக கட்சி ஏற்க்கனவே தனக்கிருந்த 6 ஆசனஙகளில் ஒரு ஆசனங்களை இழந்து 5 இடங்களை மட்டுமே பாதுகாக்க முடிந்தது. மேலும் சொசலிச ஜனநாயககட்சியின் வாக்கு வங்கி சரிந்துள்ளது.

இப்பிதேசத்தில் போட்டியிட்ட சுதாகரன் கணபதிப்பிள்ளை 2330 வாக்குகளை மட்டுமே பெற்று கொள்ளகூடியதாக அமைந்திருந்தது. இவர் தான் சார்ந்திருக்கும் கிராமசபை தேர்தலில் எதிர்வரும் ஏப்பிரல் மாதத்தில் போட்டியிட உள்ளார். இக்கிராமசபையில்சோசலிச ஜனநாயகக் கட்சியின் உள்முரண்பாடுகினால் எதிர்பாக்கும் வெற்றியினை கட்சி பெறுமா என்பதினை பொறுத்திருந்தே பார்க்க முடியும்.

Solothurn-Lebernபிரதேசத்தில் வெற்றி பெற்ற Farah Rumy, தான் குடியேற்றவாதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதிலும், அனைவருக்கும் சமத்துவமான உரிமைகளிற்கும், வாய்ப்புகளிற்காகவும் தனது குரல் ஒலிக்கும் எனவும் தற்பொழுது சுகாதார துறையில் தொழில் புரியும் அனைத்து தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கவனத்தில் கொண்டு அவற்றிற்கு ஓர் நிரந்த தீர்விற்காக போராடப் போவதாக உறுதி அளித்துள்ளார்.

தகவல்…”அதிரடி” இணையத்துக்காக, சுவிஸிலிருந்து சுதாகரன் கணபதிப்பிள்ளை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*