;
Athirady Tamil News

அம்பிகையின் ஆதரவு போராட்ட களத்தில் பரபரப்பு; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி, கைது (முழுமையான வீடியோ)

0

அம்பிகையின் ஆதரவு போராட்ட களத்தில் பரபரப்பு; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதுபொலிஸார் தடியடி, கைது (முழுமையான வீடியோ)

சர்வதேச நீதி கோரி திருமதி அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் 16 ஆவது நாளை அடைந்துள்ள நிலையில் அவரது வீட்டினின் முன் ஒன்றுதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பிகையின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவரை காப்பாற்று என்று கிளர்ந்தெழுந்த தமிழர்களில் சிலர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைந்ததை அடுத்து, அதனை அடக்குவதற்கு பெருமளவிலான பிரித்தானிய பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் ஓரிருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், சிலருக்கு தண்டப்பணம்விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சிலர், “சுமார் 16 நாட்களாக அறவழிப் போராட்டத்தில் நடந்து வந்த அம்பிகா அக்காவின் போராட்டத்தை வன்முறையில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது “நாம் தமிழர் கட்சியைச்” சேர்ந்தவர்களேயென” குற்றம் சாட்டி உள்ள போதிலும், இதனை மறுதலித்த “நாம் தமிழர் கட்சியினரோ “இல்லை இது திராவிடத்தின் சூழ்ச்சி, புலியாதரவாளர்கள் சிலர் உணர்ச்சி வேகத்தில் மேற்கொண்ட நடவடிக்கையே இக்குழப்பத்துக்கு காரணமெனத்” தெரிவித்து உள்ளனர்.

எதுஎப்படியோ அமைதியான வழியில் நடைபெற்ற அறவழிப் போராட்டம் சிலரால் திசை திருப்பப்பட்டுள்ளது எனப் பலரும் அங்கலாய்க்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + six =

*