;
Athirady Tamil News

“புங்கையில் புதையல்”.. புங்குடுதீவில் இப்படியும் ஓர் மாற்றமா? (வீடியோ)

0

“புங்குடுதீவில் புதையல்”.. புங்குடுதீவில் இப்படியும் ஓர் மாற்றமா? (வீடியோ)

புங்குடுதீவில் பல நாடுகளில் உள்ள அமைப்புக்கள் பல்வேறுபட்ட சேவைகளை செய்து வருகின்றன. குறிப்பாக புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் கடந்த 25 வருடமாக செய்து வருகின்றது. சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களின் ஆதரவில் அண்மைக்காலமாக மக்களுக்கு அடிப்படை தேவையான கிணறுகள் அமைத்தல், மயானம் அமைத்தல், கல்விக்கு கரம் கொடுத்தல்.,மின் விளக்கு பொருத்துதல்.. போன்ற சேவைகளை சுவிஸ் ஒன்றியம் புங்குடுதீவு மக்களுக்கு செய்து வருகின்றது அது குறித்த ஓர் ஆவணப்படமே இந்த காணொளி..

குறிப்பாக சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்த ஆவணப்படம் இது..

இந்த ஆவணப் படப்பிடிப்புக்கு உதவிய “தமிழன் 24” இணையத்துக்கும், அவர்களின் படப்பிடிப்பாளர்கள், உட்பட அனைத்துத் தொழில்நுட்ப கலைஞனர்களுக்கும் இவற்றுக்கு ஒத்தாசை வழங்கிய “அதிரடி” இணையத்துக்கும், இவ்வொளிப்பதிவுக்காக தமது நேரத்தை ஒதுக்கி ஒத்தாசை வழங்கிய, அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மற்றும் புங்குடுதீவு மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும் சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி..

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

14.04.2021

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + ten =

*