சுவிஸ் பேர்ண் முருகன் கோவிலில் நடப்பது என்ன? கணக்கறிக்கையை வெளியிட்ட கணக்காய்வாளர்கள்.. (படங்கள்)
சுவிஸ் பேர்ண் முருகன் கோவிலில் நடப்பது என்ன? கணக்கறிக்கையை வெளியிட்ட கணக்காய்வாளர்கள்.. (படங்கள்)
மேன்மை கொள் சைவ நீதி விளங்கட்டும் உலகமெல்லாம்..
ஆலய நெறிமுறைகள் எல்லாம் ஒரு ஒழுங்குபடுத்தலுக்கு அமைவாக தெளிவான நீரோடை போல அமைதியாக இருக்கும். எனவே தான் ஆலயங்களில் ஆதிகாலந்தொட்டு போதனைகள் செய்யப்பட்டு வந்தது. ஆலயமே நிர்வாகத்தின் மையப் புள்ளியாக இருந்தது. அது ஒரு காலம்..
ஆனால் தற்காலத்தில் ஆலய பரிபாலன சபை எனச் சொல்லப்படும் நிர்வாக சபையானது, தொடர்ந்து நேர்வழி இல்லாது இழுபறியான குழப்பகரமான செயற்பாட்டினையே காட்டி நிக்கிறது.
சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தின் கடந்த ஆண்டு கணக்கறிக்கை தொடர்பாக மாறிமாறி ஒரு குழப்பத்தை அடியார்கள் மீது திணிப்பதாக உணர்கின்றேன்.
கடந்த காலங்கள் போன்றே இவ்வாண்டும் அடியார்கள் முன்னிலையில் தான் கணக்கறிக்கை வெளிடப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கும் பல தடைகளை தலைவர் போட்டிருந்தது சகலரும் அறிந்ததே.
அதாவது கணக்காய்வாளர் திரு.கோடீஸ்வரன் கணக்கறிக்கையை அடியார்கள் முன்னிலையில் வெளியிட முயன்ற போது, தற்போதைய நிர்வாகசபைத் தலைவர் அவர்களினால் வீடியோ எடுத்ததும், கணக்கறிக்கையை கோப்புடன் பறிக்க முயன்றதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு மத்தியில் கடந்த மாசி 29 தொடக்கம் மார்கழி வரை கணக்குகளை முடிப்பதற்கு தலைவருக்கு ஒரு வாரம் கொடுத்திருந்தது சகலரும் அறிந்ததே, ஆனால் தலைவர் அதை உதாசீனம் செய்திருந்தார்
இந்நிலையில் தற்காலிகமாக கணக்கறிக்கையினை கணக்காய்வாளர்களினால், பொதுக் கூட்டத்திற்கு சமர்ப்பிக்காமல் நேரடியாக மக்களிடம் சமர்பித்துள்ளார்கள் என்பதையும் “அதிரடி” அறிந்துள்ளது.
இதன்மூலம் கணக்கு பரிசோதகர்கள் கணக்கினை மறைக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அத்துடன் கணக்கறிக்கையை பொதுச்சபையில் காட்டினால் அதனை ஆராய்வது சிரமம் என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்.
கணக்கு அறிக்கையினை உடனுக்குடன் வெளியிட்டிருந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும் என்பது “அதிரடி”யின் நிலைப்பாடாகும்.
அதிகாரம் பதவி என்பது சீரான நிர்வாகத்தின் நேர்மையான வழிநடத்தலே ஆகும். இதனை புரிந்து கொள்ளாதவரை குழப்பகரமான சூழ்நிலை தொடர்ந்து கொண்டே இருக்கலாம் என்பது அதிரடியின் கருத்தாகும்.
எது எப்படியோ பிரச்சினைகள குறைக்கவே சகலரும் விரும்புகிறார்கள். இதனை உணர்ந்து செயற்படட்டும் வரை இதற்று தீர்வு இல்லை.என்பதே அதிரடியின் நிலைப்பாடாகும்.
“அதிரடி” இணையத்துக்காக.. “இணுவையூரான்”