25 February 2017 0 Comments Report

“யாழ்ப்பாண வடிவேலு” என அழைக்கப்படும், தியாகராசா துவாரகேஸ்வரனின் ரகளை.. (படங்கள்)


“யாழ்ப்பாண வடிவேலு” என அழைக்கப்படும், தியாகராசா துவாரகேஸ்வரனின் ரகளை.. (படங்கள்)

சில தினங்களுக்கு முன்னர், யாழ் பண்ணையில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்தில் “யாழ்ப்பாண வடிவேலு” என அழைக்கப்படும், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரென கூறிக் கொள்ளும் தியாகராசா துவாரகேஸ்வரன் ரகளையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இதுதொடர்பாக யாழில் இருந்து வெளிவரும் “இணையம்” ஒன்றில் ஆதாரத்துடன் வெளிவந்த செய்தி இது…

“யாழ்ப்பாண வடிவேலு” என அழைக்கப்படும், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரென கூறிக் கொள்ளும் தியாகராசா துவாரகேஸ்வரன், தனது பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளை துாசணத்தால் ஏசுவதும், காசு கட்டி பஸ்சில் ஏறிவிட்டால் பஸ் முழுதும் உனக்கோ சொந்தம்? என பயணிகளை ஏசுவதும், பயணிகளின் பொருட்களை தவற விட்டுவிட்டு அது தொடர்பாக கேள்வி கேட்டால் அச்சுறுத்துவதும் வழமையாகும்.

இதனால் இவரது “ஈஸ்வரன் பேரூந்து சேவை”யில் பயணிகள் யாரும் ஏறுவது கிடையாது. இதனால் விரக்தியுற்று மனப்பிறள்வான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள துவாரகேஸ்வரன் இன்று பண்ணை பஸ் நிலையத்தில் ஏனைய பஸ்கள், பஸ் நிலையத்தினுள் இருக்கும் போது தனது பஸ்சை பஸ் நிலையத்திற்கு வெளியே றோட்டில் நிறுத்தி கொழும்புக்கு செல்வதற்காக பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளை தனது பஸ்சில் ஏற்றுவதற்கு முனைந்துள்ளார்.

இதனால் கடும் கோபமுற்ற ஏனைய பஸ் உரிமையாளர்கள் தமது பஸ்சையும் பண்ணையில் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே எடுத்து தெருவில் நிறுத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தைத் தணிப்பதற்காக அங்கு யாழ் பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிசார் சென்று நிலைமையைக் கட்டுப்படுத்த முற்பட்டுள்ளனர். தற்போது துவாரகேஸ்வரனின் பஸ்சை அங்கிருந்து அகற்றுமாறு பொலிசார் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதே வேளை கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் இதே போல் ரகளையில் ஈடுபட்ட துவாரகேஸ்வரன் தனது பஸ்களை பொலிஸ் நிலையத்துக்கு முன் விட்டுவிட்டு சென்று விட்டான். இதனால் கோபமுற்ற பொலிசார் பஸ்சை உடனடியாக அப்புறப்படுத்தாது விட்டால், தாங்கள் பஸ்சை நீதிமன்றில் ஒப்படைக்கப் போவதாக தெரிவித்ததையடுத்தே துவாரகேஸ்வரன் பஸ்சை அப்புறப்படுத்தியுள்ளான்.

யாழ்ப்பாணத்தில் இவனது ரவுடித்தனத்திற்கு எதிராகச் செயற்படுபவர்களை தனக்கு வால் பிடிக்கும் ஊடகவியலாளர்கள் என கூறிக் கொண்டு திரிபவர்களுக்கு கூக்குரல் இட்டு கதறி விட்டு யாழ்ப்பாண நீதிபதியே கேளுங்கள் என அவலக்குரல் இட்டு நீதிபதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என எண்ணி தனது நரித்தனத்தை காட்டியுள்ளான்.

ஏற்கனவே இவனது செயற்பாடுகளால் நீதிபதிகளிடம் பல தடவைகள் தண்டனை பெற்று சிறை சென்ற இந்த வடிவேலுவை நீதிபதிகள் நன்கு அறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை யாழ்ப்பாணப் பொலிசாரும் தமது சிறப்பான நடவடிக்கை மூலம் இவனது மனநோய்க்கு மருந்து கொடுத்து வருவதாக அறிய முடிகின்றது.

(நன்றி… நியூ யப்னா இணையம்)

தொடர்புபட்ட செய்திக்கு…

நல்லூர் கோயிலில் சட்டத்தை மீறி, நடந்து கொண்ட “UNP துவாரகேஸ்வரன்”..!! (படங்கள் & வீடியோ)

“தமிழ் மக்களுக்கு துஸ்பிரயோகம்”: துவாரகேஸ்வரனுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்..! (படங்கள் & VIDEO)


Post a Comment

*