4 March 2017 0 Comments Report

சிவாஜிலிங்கத்துக்கு, “போடா முட்டாள்” எனும் கௌரவம் அளித்த, யாழ். தமிழ் பொலிஸ் அத்தியட்சகர்..!! (“அதிரடி”யின் படங்கள் &வீடியோ)


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதய மாகாண சபை உறுப்பினருமாகிய சிவாஜிலிங்கத்தினை “போடா”, “முட்டாள்” போன்ற வார்த்தைகளால் தமிழ் போலிஸ் உயர்அதிகாரி ஒருவர் திட்டி உள்ளார்.

இன்றையதினம் ஐனாதிபதியின் வருகையினை முன்னிட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்னாள் போராட்டதில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோசங்களை எழுப்பியவாறு இரூந்தார்.

இந்நிலையில் இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ் அத்தியட்சகர் சனிஸ்டன், முதலில் சிவாஜிலிங்கம் போலீஸ் அதிகாரியை பார்த்து, “போடா” என்று கூறியதைத் தொடர்ந்து, சிவாஜிலிங்கத்தினை “போடா” “முட்டாள்”போன்ற வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

நடுவீதியில் தாண்டவமாடிய பொலிஸ் அதிகாரி; ஜனாதிபதியின் யாழ் விஜயத்தில் சம்பவம்…

“எருமை மாடு மாதிரிக் கதைக்கிறியே, படிச்சிருக்கிறியா? மண்டைக்குள் சரக்கு இல்லையா?” என யாழ். பொலிஸ் அதிகாரி ஒருவார் காணாமால் போனோர் உறவுகளைப் பார்த்து திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” நிகழ்சித்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இனறையதினம், யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்திருந்த நிலையில் காணாமல் போனோர் உறவினர்கள் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக யாழ் மாவட்டச் செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சில பொதுமக்கள் ஏ9 வீதியின் குறுக்கே வந்து அமந்திருந்ததால் கடும் சினமடைந்த, யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் என்பவர், “எழும்பி செல்லுமாறு”, கூறியதும்,

முதலில் சிவாஜிலிங்கம் போலீஸ் அதிகாரியை பார்த்து, “நீ போடா” என்று கூறியதைத் தொடர்ந்து, வடக்கு மாகாண சபை உறுப்பினரை திட்டியதோடு, “நீ ஆரடா றோட்டில இருக்கிறதற்கு? இது பப்பிளிக் றோட், போடா வெளியில், முட்டாள்” என கடுமையாக திட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிவாஜிலிங்கம் “நீ போடா நாயே” என்று போலீஸ் அதிகாரியை பார்த்து, திட்டி உள்ளார்.

அதனையடுத்து போராட்டம் நடாத்திய தாய் ஒருவரை “எருமை மாடு மாதிரிக் கதைக்கிறியே, படிச்சிருக்கிறியா? மண்டைக்குள் சரக்கு இல்லையா?” என திட்டிய போது, நியாயம் கேட்ட ஊடகவியலாளரை அச்சுறுத்தி, அவரது அடையாள அட்டையைினைப் பரிசோதித்ததோடு மிக அருவருப்பான தூசன வார்த்தைகளால் அவரை ஆங்கிலத்தில் திட்டியுள்ளார்.

“அதிரடி” இணைய யாழ் நிருபர்களில் ஒருவரான “பிரபா”


Post a Comment

*