10 April 2017 0 Comments Report

யாழ். துவாரகேஸ்வரன் மீதான, மானநஷ்ட வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது..


யாழ். துவாரகேஸ்வரன் மீதான, மானநஷ்ட வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது..

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் தியாகராஜா துவாரகேஸ்வரன் மீது தொடுக்கப்பட்டுள்ள மானநஷ்ட வழக்கு எதிர்வரும் 25.08.2017 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்றவருடம் யாழ் ஊடக மத்திய நிலையத்தில் துவாரகேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் தனது கௌரவத்திற்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது என, ஜெகன் என்பவர் ஐந்து கோடி நஷ்டஈடு கோரி தாக்கல் செய்த வழக்கு கடந்த 31.03.2017 ம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது.

யாழ்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் என்று கூறிக்கொள்ளும் துவாரகேஸ்வரன் சொகுசு பஸ் சேவை ஒன்றை நடாத்தி வருகின்றார்.

இவர் தனது சொந்த வியாபரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி வருகின்றார் என்பது எமக்கு ஆதாரத்துடன் கிடைக்கப் பெற்றுள்ளது.

தனது சொகுசு பஸ்சேவையை விஸ்திரப்படுத்துவதற்காக, இவர் அண்மையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் “யாழ் மக்கள் சொகுசு பஸ்சேவையையே விரும்புவதாகவும், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் பொருட்டு சொகுசு பஸ் ஒன்றையும், லொறி ஒன்றையும் கொள்வனவு செய்வதற்கு வங்கியொன்றை, குறைந்த வட்டியில் கடன்வழங்க சிபார்சு செய்யுமாறும்” கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழ் கிளிநொச்சி பகுதியிலுள்ள மக்களில் பலர் பல்வேறுபட்ட பொருளாதார சிக்கல்களுக்கு முகம்கொடுக்கும் போது, அவர்கள் சொகுசு பஸ்களையா கேட்கின்றனர்? என்பதை கீழுள்ள தியாகராஜா துவாரகேஸ்வரனின் கடிதத்தில் கண்டு கொள்ளலாம்..


Post a Comment

*