13 May 2017 0 Comments Report

“புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கு” திறப்பு விழாவின், (இருநாள்) முழுமையான தொகுப்பு… (வீடியோ வடிவில்)


“புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கு” திறப்பு விழாவின், (இருநாள்) முழுமையான தொகுப்பு… (வீடியோ வடிவில்)

கடந்த 2017 ஏப்ரல் மாதம் 15ம், 16ம் தகதிகளில் நடைபெற்ற, “புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கு” மண்டப சுற்றுமதில், பெரிய அம்பலவாணர், சின்ன அம்பலவாணர் ஆகியோரின் உருவச்சிலைகள் திரைநீக்கம், தொழிற்பயிற்சி நிலைய, கணனி வகுப்பு, தையல் பயிற்சி வகுப்புக் கட்டிடங்களும், திறக்கப்பட்டு கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே..

மேற்படி விழாவில், “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீடசையில் வெற்றியீட்டிய புங்குடுதீவு அமெரிக்க மிஷன் பாடசாலை மாணவி செல்வி மதுஷிகா மதிவதனன், தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தையும், வட மாகாணத்தில் முதலாமிடத்தையும் பெற்ற புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலய மாணவன் வரதராஜா டிலச்னுக்கும் ஒரு சிறுதொகை பணப்பரிசிலை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதேபோன்று, மேற்படி விழாவில், “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில், “2017 வேரும் விழுதும்” விழாவில் கலந்து கொண்ட திரு. இளஙகோவன், திரு. பொன் சுந்தரலிங்கம், திரு.எஸ்.கே சண்முகலிங்கம், திரு. சதாசிவம் (கிளி மாஸ்ரர்) ஆகியோருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மேற்படி “புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கு” திறப்பு விழாவில், நாட்டிய நடனங்கள், வில்லுப்பாட்டு, தவில் இசைக்கச்சேரி, போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

விருந்தினர்கள் வரவேற்பு, விருந்தினர்கள் உரை, “தாயகம் சமூக சேவை அகம்” மாணவிகளின் வரவேற்பு நடனம் ஆகியன நடைபெற்று தொடர்ந்து விழா நடைபெற்றது.

அத்துடன் பேராசிரியர் திரு.கா.குகபாலன் அவர்களினால் எழுதப்பட்ட “தீவகம்; தொண்மையும், மேன்மையும்” எனும் நூலும் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டது,

பல்வேறு நடனம் நாட்டியம், வில்லுப்பாட்டு, தவில், நாதஸ்வர கச்சேரி என்பவற்றுடன், “சங்கீத பூஷணம்” திரு.பொன் சுந்தரலிங்கம் அவர்களின் இன்னிசைக் கச்சேரி போன்றனவும் நடைபெற்று, விருந்தினர்கள் உரை, பரிசளிப்பு விழா போன்றவற்றுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

**** “புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின்” பிரதம போஷகர் திரு.பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் உரையின் வீடியோ… (இருநாளும் ஆற்றிய உரையின் முழுமையான தொகுப்பு வீடியோ)

**** முதல்நாள் வீடியோக்கள்…

**** இரண்டாம்நாள் வீடியோக்கள்…

**** மேலதிக வீடியோக்கள்…

*** தொடர்புபட்ட செய்திகளுக்கு…

புங்குடுதீவு “அம்பலவாணர் கலையரங்கம் திறப்பு விழா அழைப்பிதழ்”… (படங்கள்)

புங்குடுதீவு “அம்பலவாணர் கலையரங்கம் திறப்பு விழா ஆரம்பம்… (படங்கள்) -பகுதி-1

புங்குடுதீவு “அம்பலவாணர் கலையரங்கம்” திறப்பு விழா: மங்கள விளக்கேற்றல் & விருந்தினர்கள் உரை… (படங்கள்) -பகுதி-2

புங்குடுதீவு “அம்பலவாணர் கலையரங்கம்” திறப்பு விழா: மாலை நிகழ்வுகள், நாட்டிய நடனங்கள், வில்லுப்பாட்டு, தவில் இசைக்கச்சேரி… (படங்கள் & VIDEO) -பகுதி-3

புங்குடுதீவு “அம்பலவாணர் கலையரங்கம்” திறப்பு விழா: இரண்டாம்நாள் காலை அமர்வு.. (படங்கள் & வீடியோ) -பகுதி-4

புங்குடுதீவு “அம்பலவாணர் கலையரங்கம்” திறப்பு விழா: இரண்டாம்நாள் மாலைஅமர்வு.. (முழுமையான படங்கள் & வீடியோ) -பகுதி-5 (இறுதி)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “கௌரவிக்கப்பட்ட மாணவர்கள் & விருந்தினர்கள்”… (படங்கள்)


Post a Comment

*