;
Athirady Tamil News

சிறப்பாக நடைபெற்ற, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “சுவிஸ் வாழ் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி” (வீடியோ & படங்கள்)

0


சிறப்பாக நடைபெற்ற, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “சுவிஸ் வாழ் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி” (வீடியோ & படங்கள்)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “சுவிஸ் வாழ் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி” கடந்த 28.01.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது. மேற்படி போட்டியில் வெற்றியீட்டிய மற்றும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்குமான “பரிசில்கள்” எதிர்வரும் 17.03.2018 அன்று மாலை இரண்டு மணிக்கு, சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில், நடைபெறும் “வேரும் விழுதும்” விழாவில் வைத்து வழங்கப்பட உள்ளது.

மேற்படி “சுவிஸ் வாழ் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி”யானது சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் கல்விப் பொறுப்பாளர் திரு.சின்னத்துரை இலட்சுமணன் தலைமையில், ஒன்றிய உறுப்பினர்களான திருமதி.லலிதா இலட்சுமணன். திருமதி.தகீதா(தயா) பிரசாந்த், திருமதி.செல்வி சுதாகரன் ஆகியோரின் மேற்பார்வையில் “சுவிஸ் வாழ் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி” கடந்த 28.01.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வுக்கு ஒன்றியத்தின் செயலாளர் திருசெல்லத்துரை சதானந்தன், ஒன்றியத்தின் பொருளாளர் திரு.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை), ஒன்றியத்தின் உறுப்பினர்களான திரு.பாலசிங்கம் தயாபரன் (கீர்க்பேர்க்), திரு.சுதாகரன் (புர்கடோர்ப்) திரு.தாமோதரம்பிள்ளை பிரேம்குமார் (சூரிச்). திரு.கிருபாகரன் (புர்கடோர்ப்) ஆகியோர் சரீர உதவிகள் புரிந்து சிறப்பித்து இருந்தனர்.

அத்துடன் ஒன்றியத்தின் உபதலைவர் திரு.சஞ்சய், ஒன்றிய உறுப்பினர்களான திரு.இரவீந்திரன் (சாய் ட்ரடேர்ஸ்), திரு.சதீஷ் (பாடன்), திரு.சபேசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

மேற்படி நிகழ்வின் “மண்டபம், குளிர்பான குடிவகைகள், மதியஉணவு” போன்ற சகலவிதமான செலவுகளையும், ஒன்றிய உறுப்பினர்களான திரு.பாலசிங்கம் தயாபரன் (கீர்க்பேர்க்), திரு.தாமோதரம்பிள்ளை பிரேம்குமார் (சூரிச்). திரு சதாசிவம் பன்னீர்செல்வம் (சூரிச்), திரு.பத்மநாதன் ரவி -வசந்தன்- (ஆர்கூ) ஆகியோர் பொறுப்பேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கும் எமது நன்றி..

இவ்வண்ணம்…
திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸர்லாந்து.

***குறிப்பு..

அன்பு உறவுகளே…
எதிர்வரும் 17.03.2018 அன்று மாலை இரண்டு மணிக்கு, “வேரும் விழுதும் 2018” விழா நிகழ்வானது சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் நிதியில் இருந்து எந்தவொரு சதமும் எடுக்காமல், செய்வதென நாம் தீர்மானித்து செயல்படுகிறோம்.

ஆகவே உங்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து பங்களிப்பை (அனுசரணையை) எதிர்பார்த்து நேசக்கரம் நீட்டுகிறோம். இதனை தயவுசெய்து இம்மாதம் நான்காம் திகதிக்கு -04.02.2018.- முன்பாக தந்துதவுமாறு வேண்டுகிறோம், ஏனெனில் அனுசரணை வழங்குவோரின் விபரங்களையும் “விழா மலரில்” நாம் பிரசுரிக்க உள்ளோம்…

எமது விழா அறிவித்தலைக் கண்டதும் “சுவிஸ் ராகம்” கரோக்கி இசைக் குழுவினர் இன்னிசை வழங்க சம்மதித்து உள்ளனர். மண்டப உதவிக்கு திரு.கௌதமன் (வரசித்தி மஹால்), திரு.கிருபா புகைப்பட உதவிக்கும், திரு.சிவம் வீடியோ படப்பிடிப்பு உதவிக்கும், “தமிழன் 24” இணையத்தின் சார்பாக திரு.தாஸ் துண்டுப்பிரசுர உதவிக்கும் சம்மதித்து உள்ளனர்.

திரு.ரவீந்திரன் (சாய் ட்ரடேர்ஸ்), திரு.தயாபரன், திரு.இலட்சுமணன், திரு.சஞ்ஜய், திரு.குழந்தை, திரு.கிருஷ்ணகுமார், திரு.பன்னீர்செல்வம், திரு.பிரேம்குமார், திரு.சதா, திரு.அன்பு, திரு.பத்மநாதன் ரவி (வசந்தன்), ஆகியோர் இதுவரை “அனுசரணை” வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.

அதேபோல் உங்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து பங்களிப்பை (அனுசரணையை) எதிர்பார்த்து நேசக்கரம் நீட்டுகிறோம். இதனை தயவுசெய்து இம்மாதம் நான்காம் திகதிக்கு -04.02.2018.- முன்பாக தந்துதவுமாறு வேண்டுகிறோம்.

*** அதேபோல் விழா மலரில் தங்களின் கருத்துக்களை (வாழ்த்துக்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் உங்களின் வர்த்தக விளம்பரங்களை) தெரிவிக்க விரும்பும் எவராயினும், அதுகுறித்த முழுமையான விபரத்தை, இம்மாதம் நான்காம் திகதிக்கு -04.02.2018.- முன்பாக தந்துதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.. இதுவே எமது இறுதி அறிவித்தல், இதன்பின்னர் வரும் எந்தவொரும் வாழ்த்தும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

*** மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கும்…
ஒன்றியத் தலைவர் திரு.ரஞ்சன் -077.9485214, ஒன்றிய செயலாளர் திரு.சதா -078.8518748, ஒன்றிய பொருளாளர் திரு.குழந்தை -079.9373289, ஒன்றிய கல்விப் பொறுப்பாளர் திரு.இலட்சுமணன் .079.5063194, ஒன்றிய உபதலைவர் திரு.சஞ்ஜய் -078.6539292, ஆகிய இலக்கங்களுடன் “உடன்” தொடர்பு கொள்ளவும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 11 =

*