;
Athirady Tamil News

வந்தாரை வரவேற்று, பெருமைப்படுத்தும் புங்குடுதீவு..! -திருமதி.செல்வி சுதாகரன். (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில் வரவேற்புரை)

0


வந்தாரை வரவேற்று, பெருமைப்படுத்தும் புங்குடுதீவு..! -திருமதி.செல்வி சுதாகரன். (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில் வரவேற்புரை)

(சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, “வேரும் விழுதும் 2018” கலைமாலை நிகழ்வானது கடந்த 17.03.2018 சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன்போது திருமதி.செல்வி சுதாகரன் நிகழ்த்திய வரவேற்புரை இது..)

வரவேற்புரை…

பிறந்த ஊருக்காய் உறவுகள் நட்புக்கள் ஒன்றுகூடி ஒன்றியத்தின் இருபத்தோராவது ஆண்டுவிழா காணும் இன்றைய நன்னாளில் உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வணங்கி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

நிறைந்த பணிகள் தன் அரசியல் வாழ்வில் இருந்தாலும் எங்களுக்காக எங்கள் பிறந்த மண்ணுக்காக நேரம் ஒதுக்கி, சுவிஸ் நாட்டுக்கு வருகை தந்து எங்களது விழாவில் பிரதம விருந்தினராக வீற்றிருக்கும் பெருமதிப்புக்குரிய வடமாகாண சபை உறுப்பினர் திரு விந்தன் கனகரத்தினம் ஐயா அவர்களை, ஒன்றியத்தின் சார்பில் வருக வருகவென்று வரவேற்கின்றோம்.

புங்கை மண்ணில் அதிபராக இருந்து பல கல்வியாளர்களை உருவாக்கிய பெருமதிப்புக்குரிய திரு .எஸ் கே சண்முகலிங்கம் ஐயா, சமூக சேவராக பல துறைகளில் தனது பணிகளை முன்னெடுக்கும், அதேவேளை எங்கள் ஒன்றியத்தின் செயல்பாடுகளுக்கும் தாய் நிலத்தில் பெரும் உதவியாக நிற்கின்றார். அவர் சிறப்பு விருந்தினராக வருகை தந்து இன்றைய இந்த விழாவை சிறப்பிப்பதில் நாங்கள் பெருமகிழ்வு அடைந்து அவரை வருக வருகவென்று வரவேற்கின்றோம்.

எங்களது கிராமம் ஆன்மீகத்தில் எல்லோரையும் இணைத்து நிற்கும் ஒரு சிறப்புவாய்ந்த கிராமம். அங்கு பிறந்தோர் புலம்பெயர் தேசங்களிலும் ஆன்மீக பணிகளில் தங்களை அர்ப்பணித்து நிற்கின்றனர். பல ஆலயங்களை அகத்தில் கொண்டு ஆன்மீகத்தில் உயர்ந்து நிற்கும் எமது கிராமத்தின் விழாவிற்கு எமது அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் ஆன்மீக குரு சரவண பவானந்த குருக்கள் ஐயா அவர்களையும் வருக வருகவென்று வரவேற்கின்றோம்.

சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்து எமது சமூகத்துக்காய் பல நற்பணிகளை ஆற்றிவரும் லண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்க போஷகர் எமது மண்ணின் மைந்தன் மதிப்புக்குரிய திரு சொக்கலிங்கம் கருணைலிங்கம் ஐயா அவர்கள் இன்றைய விழாவை சிறப்பிக்க சிறப்பு விருந்தினராக எமது அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கின்றார் அவரையும் வருக வருகவென்று வரவேற்கின்றோம்.

எழுத்துலகில் தனக்கென்று ஒரு தடம் பதித்து வாசகர்கள் மனங்களோடு சிறந்த கருத்துக்களை பேசிவரும் எழுத்தாளர் திரு சிவபாலன் துரை அவர்களும் இன்றைய இந்த விழாவை சிறப்பிக்க சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கின்றார் அவரையும் வருக வருகவென்று வரவேற்கின்றோம்.

எமது அழைப்பை ஏற்று எங்கள் விழாவை சிறப்பிக்க வருகை தந்திருக்கும், அரசியல்வாதியாக இருந்து சமூக தொண்டாற்றும் லண்டன் புங்குடுதீவு நலன்புரி சங்க செயலாளர் திரு சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்களையும்,

கௌரவ விருந்தினர்களாக எமது அழைப்பை ஏற்று எங்கள் விழாவை சிறப்பிக்க வருகை தந்திருக்கும் லண்டன் புங்குடுதீவு நலன்புரி சங்க போஷகர் திரு வேலுப்பிள்ளை வேணுகுமார் அவர்களையும்,

லண்டன் வர்த்தகர், ஊர்ப்பற்றாளன் மதிப்புக்குரிய திரு ஏரம்பு வசந்தன் ஐயா இன்றைய விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கின்றார் அவரையும் வருக வருகவென்று வரவேற்கின்றோம்.

பிரபல வர்த்தகரும், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முன்னாள் தலைவருமான திரு இராசமாணிக்கம் ரவீந்திரன் அவர்களையும்,

பிரபல வர்த்தகரும், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முன்னாள் பொருளாளருமான திரு இளையதம்பி ஸ்ரீதாஸ் அவர்களையும் ஒன்றியத்தின் சார்பில் வருக வருகவென்று வரவேற்கின்றோம்.

மங்கள விளக்குகளை ஏற்றிவைத்து விழாவை ஆரம்பித்துவைத்த பிரமுகர்கள், கல்வியாளர்கள், அரசியல் விற்பன்னர்கள். அனைவரையும் வருக வருகவென்று வரவேற்கின்றோம்.

ஒன்றியத்தின் தூண்களாய் என்றும் ஒன்றிணைந்து நின்று இன்றைய விழாவையும் சிறப்பு விழாவாக மெருகூட்ட வருகை தந்திருக்கும் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர்களையும் அங்கத்தவர்களையும் வருக வருகவென்று வரவேற்கின்றோம்.

பல்சுவை நிகழ்வுகளை அரங்குக்காண தந்து அனைவரையும் மகிழ்வுக்கு உள்ளாக்கி விழாவை சிறப்பாக மெருகூட்ட வருகை தந்த அனைத்து கலைஞர்களையும் இருகரம் கூப்பி வருக வருகவென்று வரவேற்கின்றோம்.

எங்களது ஒன்றியத்தின் இருபத்தோராவது ஆண்டுவிழாவின் கலைநிகழ்வுகளை கண்டு மகிழ்வுறவும் எமது உறவுப்பாலத்தை மேன்மை உற செய்யவும் வருகை தந்திருக்கும் அனைத்து உறவுகள் நட்புகளையும், பொதுமக்களையும் மீண்டும் மீண்டும் வருக வருகவென்று வரவேற்று பெருமகிழ்வு கொண்டு உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்.
நன்றி வணக்கம்…

இவ்வண்ணம்..
திருமதி.செல்வி சுதாகரன்
ஒன்றிய உறுப்பினர்,
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்.

நேற்றையதினம் (17.03.2018) சூரிச்சில் நடைபெற்ற, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், "வேரும் விழுதும்-2018"https://www.youtube.com/watch?v=BykcbB60Vh8

Gepostet von Mano Vaner am Sonntag, 18. März 2018

சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (முழுமையான படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*