;
Athirady Tamil News

விழா சிறப்புற நடைபெற உதவிய, “நல்லுள்ளங்களுக்கு” நன்றி…! -திரு.செ.சதானந்தன் (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில், நன்றியுரை)

0


விழா சிறப்புற நடைபெற உதவிய, நல்லுள்ளங்களுக்கு நன்றி…! -திரு.செ.சதானந்தன் (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில் நன்றியுரை)

(சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, “வேரும் விழுதும் 2018” கலைமாலை நிகழ்வானது கடந்த 17.03.2018 சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன்போது ஒன்றிய செயலாளர் திரு.செ.சதானந்தன் அவர்கள் நிகழ்த்திய நன்றியுரை இது..)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்டவர்களுக்கும், கலை நிகழ்வுகளை தந்தோருக்கும், விழாவில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் எமது நன்றி.. குறிப்பாக அனுசரணை வழங்கி விழா சிறப்புற நடைபெற உதவியவர்களுக்கும் நன்றி..,

அதாவது புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி, மற்றும் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு, இதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட விழாமலர் உட்பட அனைத்து விடயங்களுக்கும் அனுசரணை வழங்கிய அனைவருக்கும் எமது நன்றி….

கரோக்கி இன்னிசை வழங்கிய “சுவிஸ் ராகம்” குழுவினர், மண்டப உதவி புரிந்த திரு.கௌதமன், புகைப்பட உதவி புரிந்த திரு.கிருபா, வீடியோ உதவி புரிந்த திரு.சிவம், மேடையலங்கார உதவி புரிந்த திரு கைலை, துண்டுப்பிரசுர உதவி புரிந்த திரு.தாஸ், பிரதம விருந்தினரின் பயண செலவை பொறுப்பெடுத்த திரு.பாபு, திரு.கோபால் ஆகியோருக்கும்,

“வேரும் விழுதும்” விழாமலரை சிறப்புற பிரசுரித்து தந்த ஒன்றியத்தின் உபதலைவர் திரு.சஞ்சய், அவரது நண்பர்கள் திரு.சதீஷன், திரு.சபேசன், மற்றும் விழா மலரை இறக்குமதி செய்து தந்து உதவிய “ஏரோ லைன்ஸ்” நிறுவனர் திரு.ஸ்ரீ இராசமாணிக்கம் ஆகியோருக்கும்..

மற்றும் அண்மையில் நடைபெற்ற புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி நிகழ்வின் மண்டப உதவி புரிந்த திரு.பாலசிங்கம் தயாபரன் குடும்பத்துக்கும், அன்றைய மதிய உணவு உட்பட அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்று உதவிய திரு.சதாசிவம் பன்னீர், திரு.தாமோதரம்பிள்ளை பிரேம்குமார், திரு.பத்மநாதன் வசந்தன் ஆகியோருக்கும் எமது நன்றி…

விழா சிறப்பாக நடைபெற அனுசரணை வழங்கிய.., சாய் ட்ரடேர்ஸ் திரு.இரவீந்திரன், இம்போர்ட் தாஸ் திரு.ஸ்ரீதாஸ், என்.எஸ்.ஜுவெல்லரி திரு.சாந்தன், ஓல்டேன் கமல் டிரேடிங் திரு.கமல், அபிரா டெக்ஸ்ட்ரைல்ஸ் திரு.கண்ணன், திரு.இலட்சுமணன், திரு.குழந்தை, திரு.கிருஷ்ணகுமார், திரு.கிருபா, திரு.திகில், திரு.சண்முகம், திரு.நிமலன், திரு.கணேஷ், திரு.அன்பு, திரு.பிரதீபன், திரு.வசந்தன், திரு.சிவகுமார் தூண், திரு.பாபு தூண், திரு.இளங்கோ தூண், திரு.பிள்ளை, திரு.சிவகுமார்-பீல், திரு.ராஜா சூரிச், திரு.யோகன், திரு.தம்பா, திருமதி.செல்வி சுதாகரன் ஆகியோருக்கும்,..

அத்துடன் இன்று நடைபெறும் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்ட அனைவருக்கும், மற்றும் விழாவினை சிறப்பிக்க பல கலைநிகழ்வுகளை தந்துதவிய அனைவருக்கும், விழாவினை கண்டுகளித்து சிறப்பித்த அனைத்து உறவுகள், நண்பர்களுக்கும் எமது நன்றி கூறி விடைபெறுகிறேன்….

இவ்வண்ணம்…
திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.

(17.03.2018) சூரிச்சில் நடைபெற்ற, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், "வேரும் விழுதும்-2018"https://www.youtube.com/watch?v=cIEjHal6v9w&feature=youtu.be

Gepostet von Mano Vaner am Montag, 19. März 2018

சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (முழுமையான படங்கள்)

வந்தாரை வரவேற்று, பெருமைப்படுத்தும் புங்குடுதீவு..! -திருமதி.செல்வி சுதாகரன். (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில் வரவேற்புரை)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 7 =

*