;
Athirady Tamil News

“ஊருக்காக ஒன்றிணைந்து, நேரிய வழியில் செயல்படுவோம்” -சுவிஸ்ரஞ்சன். (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில், தலைமையுரை) -வீடியோக்களுடன்-

0


“ஊருக்காக ஒன்றிணைந்து, நேரிய வழியில் செயல்படுவோம்” -சுவிஸ்ரஞ்சன். (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில், தலைமையுரை) -வீடியோக்களுடன்-

(சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, “வேரும் விழுதும் 2018” கலைமாலை நிகழ்வானது கடந்த 17.03.2018 சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன்போது ஒன்றிய தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்கள் நிகழ்த்திய தலைமையுரை இது..)

ஒன்றியத்தின் தூண்களாய் ஒன்றிணைந்திருந்து இருபத்தொரு ஆண்டுகளாக ஒன்றியத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும், அங்கத்தவர்களுக்கும், முன்னாள், இன்னாள் நிர்வாகத்தினர் அனைவருக்கும் எனது அன்புகலந்த நன்றிகளும், வணக்கங்களும் முதல் கண் உரித்தாகட்டும்,,,,

எங்களுடைய அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கும் பெருமதிப்புக்குரிய வடமாகாண சபை உறுப்பினர் இன்றைய விழாவில் எங்களது பிரதம விருந்தினர் திரு விந்தன் கனகரத்தினம் அவர்களுக்கும்,
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ள, சுவிஸ் ஒன்றியத்தின் புங்குடுதீவு செயற்பாட்டாளராக அங்கிருந்து செயற்படும் திரு.எஸ்.கே சண்முகலிங்கம் அவர்களுக்கும்,

மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் மண்ணின் மைந்தர்களுக்கும், பெருந்தகைகளுக்கும், கௌரவ விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் மண்ணின் மைந்தர்களுக்கும் பெருந்தகைகளுக்கும் விழாவுக்கு வருகை தந்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும், நட்புகளுக்கும் எனது அன்பான வணக்கங்கள்..

எங்களுடைய ஒன்றியத்தின் இருபத்தொரு ஆண்டு செயல்நாளில், இந்த கடைசி இருவருடங்களும் எம்முடைய தலைமையில் “வேரும் விழுதும் விழா” காண்கின்றோம். இந்த இரண்டு ஆண்டும், “நாம் ஊருக்கும், உறவுகளுக்கும் என்ன செய்திருக்கின்றோம்?” என்பதை நீங்கள் அனைவரும் உன்னிப்பாக அவதானித்து பார்த்தீர்கள் ஆயின்.., முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு இலங்கை அரசின் உதவிகளை பல்வேறு செயல் திட்டங்களினூடாக பெற்று ஊருக்கும், உறவுகளுக்கும் நாங்கள் உதவி செய்திருக்கின்றோம்.

அந்தவகையில் நாங்கள் உதவியதில் முக்கிய பங்கை எமக்கு செய்து தந்தவர் இன்று பிரதம விருந்தினராக வருகை தந்திருக்கும் பெருமதிப்புக்கு உரிய திரு விந்தன் கனகரத்தினம் அவர்கள் என்பதை உங்கள் அனைவருக்கும் பெருமகிச்சியுடன் கூறிவைக்க விரும்புகின்றேன். அவருக்கு ஒன்றியத்தின் சார்பிலும், புங்கை உறவுகளின் சார்பிலும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல் புங்குடுதீவில் எந்தவொரு விடயத்துக்கும், நான் கூறியவுடன், எனது அனைத்து இடைஞசல்களையும், உபத்திரவங்களையும் சிரித்த முகத்துடன் தாங்கிக் கொண்டு ஓடோடி சென்று அந்த விடயங்கள் குறித்த தெளிவான பதிலை தந்து, எம்மூடாக தீர்வு காண ஒத்துழைத்து “புங்குடுதீவு மண்ணின் மைந்தன்” தான் என்பதை நிரூபித்த, எங்கள் அன்புக்குரிய திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அதிபருக்கும், ஒன்றியத்தின் சார்பிலும், புங்கை உறவுகளின் சார்பிலும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல், இன்று ஒன்றியத்தில் இருக்கும் நிர்வாக உறுப்பினர்கள் எனக்கு பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு தந்து எனது பணிகளுக்கு உறுதுணையாக இருப்பது மிகவும் சிறப்பான விடயம். நாங்கள் இந்த இரண்டு ஆண்டும் பல திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க இவர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் மிகவும் உறுதுணையாக இருந்தது. குறிப்பாக எங்களுடைய நிர்வாக காலத்தில், ஊர் நோக்கிய எந்தவொரு விடயத்திலும் வாத, பிரதிவாதம் செய்தாலும், பெரும்பாலும் ஏகமனதாகவே முடிவுகளை தீர்மானித்து உள்ளோம்.

அத்தோடு எனக்கு உறுதுணையாக இருக்கும் நிர்வாகத்துக்கு, குறிப்பாக செயலாளர் சதா, பொருளாளர் குழந்தை, கல்விப் பொறுப்பாளர் இலக்சுமணன் அண்ணர், உபதலைவர் சஞ்சய், இளைஞரணிப் பொறுப்பாளர் சதீஷ், கணக்காய்வாளர் பன்னீர், நண்பர்கள் குமார், தயா, ரவியண்ணர், பிரேம்குமார், நிமலன், பாபு, சௌந்தரராஜன், சண்முகம் அண்ணர், கோபால் அண்ணர், திருமதி சுதா செல்வி போன்றோர் உட்பட இன்னும் சிலரின் பரிபூரண ஒத்துழைப்பே, அதாவது கலந்துரையாடலில் தவறாது கலந்து, ஆலோசனை வழங்கியது எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது

இதைவிட தனது மகளின் விபத்தினால் ஏற்பட்ட கஷ்ட சூழ்நிலையிலும் எமது வேண்டுகோளை ஏற்று, இன்று வரவேற்புரை நிகழ்த்தியதுடன், இன்னுமோர் மகளை வரவேற்பு நடனமும் ஆட வைத்து எமக்கு பூரண ஒத்துழைப்பு நல்கிய சகோதரி செல்வி சுதாகரன் குடும்பத்துக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிலரது பெயரை நான் தவறுதலாக விட்டு இருந்தால், குறை நினைக்காதீர்கள்,

இருபத்தியொரு வருட ஒன்றியத்தின் செயல்திட்டங்களில் எங்களினுடைய உறவுகள் பல்வேறுவழிகளில், பல பங்களிப்புக்களை செய்திருக்கின்றீர்கள் என்பதை நான் நன்றியுடன் வரவேற்கின்றேன். தொடர்ந்தும் நீங்கள் ஒன்றியத்தின் பணிகளில் பங்கெடுப்பதில் மகிழ்வு கொள்கின்றேன்.

ஆனால் ஒருசிலர் நாங்கள், தங்களை ஒதுக்கின்றோம் என்றவகையில் மறைமுக விமர்சனங்களை தொடுக்கின்றீர்கள். நான் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றைத் தெளிவாக உங்களுக்கு கூறிவைக்க விரும்புகின்றேன் , “நாங்கள் ஒருபோதும், ஒருவரையும் ஒதுக்கவும் இல்லை, தவிர்க்கவும் இல்லை” “நான் பெரிது, நீ பெரிது என்பதற்கு அப்பால் எங்களுடைய ஊர் பெரிது, உறவுகள் முக்கியம்” என்ற வகையில் தான் எல்லோரையும் இணைத்து, ஒன்றிணைந்து செயற்படவே விரும்புகின்றோம் ,அதனையே தொடர்ந்தும் செய்து வருகின்றோம்.

அதேபோல் “ஊரின் ஒரு பிரதேசத்துக்கு மட்டுமே அனைத்தையும் செய்கிறீர்கள்” எனும் குற்றச்சாட்டையும் ஓரிருவர் என்னிடம் தெரிவித்தார்கள். எமது நிர்வாகத்தில் “புங்குடுதீவின் பன்னிரண்டு வடடாரத்தையும் ஒரே கண்ணோட்டத்துடனேயே பார்த்து செயல்படுகிறோம்”.

“ஊரில், அங்குள்ள மக்களுக்கு என்ன தேவை?” என்பதை எவராயினும் “எழுத்துமூலம்” ஒன்றியத்திடம் கேட்க்கும் போது, நிர்வாகசபை ஒன்றுகூடி எம்மால் முடிந்தவரை, அரச நிதியில் இருந்து செய்து கொடுக்கிறோம். இதனை குறிப்பிட்ட பிரதேச மக்கள் சிலர் மட்டுமே, தொடர்சசியாக எழுத்துமூலம் கோரிக்கை வைத்து விடுவதுடன் நின்றுவிடாது, நேரிலோ, தொலைபேசி மூலமோ அந்த விடயத்தை பலமுறை எனக்கு தெரியப்படுத்தி செய்ய வைக்கிறார்கள் என்பதே உண்மை.

எங்களுடைய நிர்வாக காலத்தில், எமது முக்கிய கோரிக்கையான “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” செயல்பாட்டில் சார்பு அரசியல் எக்காலத்திலும் இருக்கக் கூடாது என்பதையும், ஒன்றியத்தின் நிதி ஊருக்காக மட்டுமே செலவழிப்பது எனவும், இங்கு விழாக்களை ஒன்றிய நிதியில் இருந்து செய்யாமல், தனிப்பட்ட முறையில் நண்பர்களிடம் அனுசரணை பெற்று செய்வது என்பதிலும் தெளிவாக இருந்து அதை இன்றுவரை முறையாக கடைப்பிடித்து வருகிறோம்.

அத்துடன் எங்களுடைய நிர்வாக காலத்தில், பல திட்டங்களுக்கு ஒன்றியத்தின் பொது நிதியில் கைவைக்காமல், அரச உதவிகள் மூலமும், துறைசார் பொது நிறுவனங்களின் உதவிகள் மூலமும் அரசியல் பிரமுகர்களை தொடர்பு கொண்டு ஊருக்கு பல்துறை சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து செய்து வருகின்றோம்.

இதேவேளை, “ஒன்றியத்தின் பணிகளை, தொடர்ந்தும் எங்களுடைய நிர்வாகத்தினரை செய்யுமாறு” சிலர் அன்புக்கோரிக்கை விட்டிருக்கின்றீர்கள். உங்கள் வேண்டுகோளுக்கு நன்றி.. ஆயினும் இதுகுறித்து மே மாதம் நடைபெறும் பொதுச்சபையிலேயே, முடிவெடுக்க முடியும்.

இதேவேளை சிறு சிறு பிரச்சனைகளுக்காக பிரிந்து நிற்காமல், அனைவரும் ஒற்றுமையாக ஆதரவு தருவீர்களாயின், அத்துடன் “எமது கோரிக்கைகள்” ஏற்றுக் கொள்ளப்படுமாயின் மட்டுமே, “செயல்படுபவர்களை மட்டும் இணைத்து” தொடர்ந்தும் எங்களது சேவையினை ஆற்றுவது குறித்து சிந்திக்கிறோம்.

ஊருக்கும் உறவுகளுக்கும் உதவி செய்யும் எங்களுடைய தொடர் சேவைக்கு அப்பால் சுவிஸ் நாட்டிலும் ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் எங்களுடைய உறவுப்பாலத்தை மேம்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்து வருகின்றோம். அந்தவகையில் இன்றைய விழாவிலும் விசேட விருந்தினர்களாக புலத்தின் பல இடங்களிலும் இருந்தும் உறவுகளை வரவேற்று எதிர்கால புங்கையின் ஒன்றிணைந்த திட்டதுக்கு எங்கள் நல்லெண்ணத்தை காட்டியிருக்கின்றோம்.

சுவிஸ் நாட்டில் அறிவு போட்டிகளை நடாத்தி ஏனைய கிராம சிறுவர்களையும் ஊக்குவிக்கும் ஒரு திட்டத்தையும் நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

ஒன்றியத்தின் இந்த இரண்டுவருட எங்களுடைய நிர்வாக காலத்தில் நாங்கள் பல விடயங்களை செய்திருக்கின்றோம். எந்த சந்தர்ப்பத்திலும் ஊருக்காகவும், உறவுகளுக்காகவும் தேவை அறிந்து உதவ முன்வந்திருக்கின்றோம்,. பல புதிய திட்டங்களை எதிர்காலத்தில் செய்ய திட்டமிட்டிருக்கின்றோம்.

எனவே ஒன்றியத்தின் தலைவர் என்ற முறையில், அனைத்து புங்குடுதீவு உறவுகளிடமும் நான் கேட்பது “அனைவரும் ஒன்றிணைந்து வாருங்கள். எமது பிறந்த ஊருக்கு எம்மால் ஆன உதவிகளை தொடர்ந்தும் செய்து, அதனை சொர்க்கபுரி ஆக்குவோம்”.

இன்றைய வேரும் விழுதும் விழாவுக்கு வருகை தந்து விழாவை சிறப்பித்துக் கொண்டிருக்கும் அனைத்து பிரமுகர்களுக்கும், அனைத்து ஊர் உறவுகளுக்கும், நட்ப்புக்களுக்கும் மீண்டும் எனது நன்றிகளை கூறிக்கொண்டு உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்..

இவ்வண்ணம்..
திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்),
தலைவர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.

சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (முழுமையான படங்கள்)

வந்தாரை வரவேற்று, பெருமைப்படுத்தும் புங்குடுதீவு..! -திருமதி.செல்வி சுதாகரன். (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில் வரவேற்புரை)

விழா சிறப்புற நடைபெற உதவிய, “நல்லுள்ளங்களுக்கு” நன்றி…! -திரு.செ.சதானந்தன் (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில், நன்றியுரை)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 6 =

*