;
Athirady Tamil News

சுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..! (படங்கள்)

0


சுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..! (படங்கள்)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் அழைப்பில், சுவிஸ்லாந்துக்கு வருகை தந்த வடமாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரத்தினம் அவர்களுடன், இருதினங்களுக்கு முன்னர் (20.03.2018) சுவிஸ் பேர்ண் மாநிலத்தில், சுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்கள் சிலர் சந்திப்பினை மேற்கொண்டு இருந்தனர். இதன்போது சுவிஸ் ஒன்றிய தலைவர், மற்றும் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி சந்திப்பில் சமகால அரசியல் விடயங்கள், மற்றும் ஏற்க்கனவே சுவிஸ் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான, புங்குடுதீவில் உள்ள ஊரதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பானாவிடை சிவன் கோவில் வீதி அபிவிருத்தி தொடர்பாகவும், சுவிஸ் ஒன்றியத்தின் வேண்டுகோளில் நிறைவேற்றப்பட்ட திருநாவுக்கரசு வித்தியாலத்தின் நிலை மற்றும் புங்குடுதீவில் உள்ள நிலைமைகள் தொடர்பிலும் உரையாடப்பட்டது.

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் ஊடாக, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்திடம் “மக்கள் பிரதிநிதிகள்” ஊடாக நிறைவேற்றி தருமாறு, எழுத்துமூலம் முன்வைக்கப்பட்ட பானாவிடை சிவன் கோவில் வீதி அபிவிருத்தி தொடர்பான கோரிக்கையும் கையளிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*