;
Athirady Tamil News

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாகத்துக்கான” பொதுச்சபை கூடுதல்…!! (அறிவித்தல்)

0


புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் “புதிய நிர்வாகத்துக்கான” பொதுச்சபை கூடுதல்…!! (அறிவித்தல்)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபை தெரிவுக்கான, பொதுச்சபை ஒன்றுகூடுதல், அதாவது சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களின் ஒன்றுகூடல் எதிர்வரும் 13.05.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு பேர்ண் மாநிலத்தின் புர்கடோர்ப் மாவட்டத்தில் நடைபெற உள்ளது என்பதை அனைவருக்கும் அறிய தருகிறோம். (ஒன்றுகூடல் நடைபெறும் விலாசம் பின்னர் அறிய தரப்படும்)

மேற்படி ஒன்றுகூடலில் அடுத்த நிர்வாகத்துக்கான தெரிவுகள் நடைபெற உள்ளது என்பதுடன், தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகள், வரவு செலவுக் கணக்குகள் யாவும் பகிரங்கத்தில் அறிய தரப்படும்.

**தற்போதைய நிர்வாகம் குறித்தோ, புங்குடுதீவில் தங்களின் “பொது தேவைகள்” குறித்த்தோ எதுவும் தெரிவிக்க வேண்டுமாயின் இப்போதே (முன்கூட்டியே) எழுத்து மூலம் அறிய தருமாறு கேட்டுக் கொள்கிறோம். (நேரத்தைக் கருத்தில் கொண்டு, அன்றையதினம் இதுகுறித்த விவாதத்தில் ஈடுபடாமல், முன்கூட்டியே எழுத்து மூலம் அறிய தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

**மேலும் மேற்படி ஒன்றுகூடலில் சுவிஸில் உள்ள புங்குடுதீவை சேர்ந்த எவரும் கலந்து கொள்ள முடியும் என்பதுடன், நிர்வாகத்தில் தெரிவு செய்யப்படுபவர்களோ, அன்றில் நிர்வாக தெரிவில் கலந்து கொள்பவர்களோ நிச்சயமாக ஒன்றிய உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதையும் அனைவருக்கும் அறிய தருகிறோம்.**.

அதாவது முன்னைய (பழைய) ஒன்றிய உறுப்பினர்களாயின் கடந்த வருட சந்தா (2017) நிச்சயமாக செலுத்தி இருக்க வேண்டும்.. புதிதாக இணைந்து பங்காற்ற விரும்புபவர்களும் நிர்வாகத்திலோ, நிர்வாகத் தெரிவிலோ பங்காற்ற முடியும். ஆயினும் அவர்கள் அதுக்கு அடுத்த மூன்று மாதத்துக்குள் இவ்வருட (2018) சந்தாவை செலுத்துவோம் என எழுத்து மூலம் உத்தரவாதம் தர வேண்டும். (கடந்தமுறை தவறுகளை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது)

நிர்வாகத்தில் தெரிவாபவர்கள் பெயருக்காக இதில் இருக்க முடியாது, தமது “ஊர் நோக்கிய” செயற்பாட்டில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்து முழுநேரமாக செயற்பாடடாளர்களாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு பங்களிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

**முக்கிய குறிப்பு….
புதிதாக நிர்வாகம் தெரிவு செய்யப்படடாலும், அடுத்த ஒரு வருடத்துக்கான நிதி வரவு செலவுக் கணக்குகளை தற்போதைய தலைவர், பொருளாளர் இருவரின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது என நாம் கடந்த வருடம், நிர்வாக ரீதியாக பகிரங்க அறிவித்தல் விடுத்தோம் என்பதையும் அனைவருக்கும் அறிய தருகிறோம். (ஏனெனில் ஒன்றிய நிதியானது அநாவசியமாக, தேவை இல்லாமல் எவராலும் செலவழிக்கக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்) நன்றி…

இவ்வண்ணம்….
திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்.

30.03.2018

***உங்களின் கருத்துக்களையும், விபரங்களையும், ஊர் நோக்கிய தேவைகளையும்.. எமது மின்னஞசல் மூலம் தெரிய படுத்தவும்.. நன்றி…
pungudutheevuswiss@gmail.com

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − 2 =

*