;
Athirady Tamil News

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட “நிதி” தொடர்பான தீர்மானம்..!

0


புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய அவசரக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட “நிதி” தொடர்பான தீர்மானம்..!

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாக சபையானது இன்றுகாலை (02.04.2018) பத்து மணிக்கு, புர்கடோர்ப் மாநிலத்தில் கூடியது. இதில் நிர்வாக சபை உறுப்பினர்களுடன், ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டதுடன், மேலும் சில ஒன்றிய உறுப்பினர்கள் தொலைபேசி மூலமும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேற்படிக் கலந்துரையாடலில் தற்போது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கையிருப்பில் உள்ள “நிதியான” 16.698 சுவிஸ் பிராங் 55ராப்பன் குறித்து, “எதிர்காலத்தில் என்ன செய்வதென?” தெளிவாக தீர்மானிக்கும் வகையில் கலந்துரையாடப்பட்டது.

தற்போது கைவசம் உள்ள நிதியானது “எதிர்காலத்தில் ஊர் நோக்கிய, பொது செயற்பாட்டுக்கு” மட்டுமே செலவழிக்கப்பட வேண்டும் என்பதுக்காகவும், இங்குள்ள சுவிஸ் வங்கியில் எந்தவொரு வருமானமும் இல்லாமல் இருப்பதை விட, இலங்கையில் உள்ள வங்கியில் போட்டு, அதன் வட்டியை “ஊருக்காக” பிரயோசனப்படுத்துவது (வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கு உதவுதல்) எனவும், தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை, ஏதாவது முக்கிய “புங்குடுதீவில், பெரிய பொதுத் தேவைக்காக” எப்போதும் எடுக்கும் வகையில், வைப்பில் இடவேண்டுமென; அதாவது நிரந்தர வைப்பில் இடாமல், சேமிப்பு வைப்பில் இட்டு, அதன் வட்டியை “ஊருக்காக பயன்படுத்துவதெனவும்” (வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கு உதவுதல்) ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், தற்போதைய பொருளாளர் திரு.கைலாசநாதன் (குழந்தை), இவ்வாரம் “தனது சொந்த செலவில்” ஊர் செல்வது எனவும், முதற்கட்டமாக ஒன்றியத்தை சேர்ந்த செயற்பாட்டாளர்கள் மூவரை இணைத்து, பதினைந்தாயிரம் சுவிஸ் பிராங்கை வங்கியில் இடுவதுடன், “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தை” மிகவிரைவில், இலங்கையில் பதிவு செய்து, அதன் பின்னர் “பதிவு செய்யப்பட்ட ஒன்றியத்தின்” பெயருக்கு கணக்கிலக்கத்தை உடனடியாக மாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் புதிதாக நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டவுடன், இக்கணக்கை மாற்றம் செய்வதாயின், (இலங்கையில் வங்கிக் கணக்கு இருக்கும் வகையிலேயே) அவர்கள் (புதிய பொருளாளர்) தமது “சொந்த செலவில்” இலங்கை சென்றே, தமது பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் எனவும், “ஒன்றிய நிதி” எக்காரணம் கொண்டும், அநாவசியமாக செலவழிக்க அனுமதி அளிப்பது இல்லையெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேற்படிக் கலந்துரையாடலில், தலைவர் திருசொக்கலிங்கம் ரஞ்சன், செயலாளர் திரு.சதானந்தன், பொருளாளர் திரு.கைலாசநாதன், ஒன்றிய கல்விப் பொறுப்பாளர் திரு.இலக்ஷ்மன் உபதலைவர் திரு.சஞ்சய், இளைஞரணிப் பொறுப்பாளர் திரு.சதீஷ், மற்றும் ஒன்றிய உறுப்பினர்களான திரு.பிரதீபன், திரு. அன்பு, திருபிரேம்குமார், திரு.கிருஷ்ணகுமார், திரு.பன்னீர்செல்வம், திரு.தயாபரன், திரு.சுரேந்திரன், திரு.ப.வசந்தன் ஆர்கூ, திரு.வசந்தன் சூரிச், திருமதி.செல்வி சுதாகரன், ஆகியோர் “நேரிலும், தொலைபேசி மூலமும்” கலந்து சிறப்பித்து இருந்தனர். திரு.இரவீந்திரன் வேறுநாட்டுக்கு சென்றுள்ளதை தெரிவித்தனர்.

தற்போது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கையிருப்பில் உள்ள “நிதியான” 16.698 சுவிஸ் பிராங் 55 ராப்பன் தொகையில், “பதினைந்தாயிரம் சுவிஸ் பிராங்” இலங்கையில் உள்ள வங்கியில் வைப்பில் இடப்பட்டால், மிகுதி 1.698 (ஆயரத்தி அறுநூற்றி தொண்ணூற்றியெட்டு) சுவிஸ் பிராங் 55 ராப்பன் கையிருப்பில் உள்ளது என்பதை அனைவருக்கும் அறிய தருகிறோம். நன்றி..

இவ்வண்ணம்…
திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.

02.04.2018

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − three =

*