;
Athirady Tamil News

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “நிதி”, இலங்கையில் வங்கியில் “வைப்பில்” இடப்பட்டது… (படங்களுடன், பகிரங்க அறிவித்தல்)

0


சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “நிதி”, இலங்கையில் வங்கியில் வைப்பில் இடப்பட்டது… (படங்களுடன், பகிரங்க அறிவித்தல்)

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாக சபையானது இம்மாத ஆரம்பத்தில் (02.04.2018) புர்கடோர்ப் மாநிலத்தில் கூடியதும். இதில் நிர்வாக சபை உறுப்பினர்களுடன், ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டதுடன், மேலும் சில ஒன்றிய உறுப்பினர்கள் தொலைபேசி மூலமும் தமது கருத்துக்களை தெரிவித்தனர் என்பதுடன்.

இக்கலந்துரையாடலில் தற்போது கைவசம் உள்ள “ஒன்றிய நிதி”யானது “எதிர்காலத்தில் ஊர் நோக்கிய, பொது செயற்பாட்டுக்கு” மட்டுமே செலவழிக்கப்பட வேண்டும் என்பதுக்காகவும், இங்குள்ள சுவிஸ் வங்கியில் எந்தவொரு வருமானமும் இல்லாமல் இருப்பதை விட, இலங்கையில் உள்ள வங்கியில் போட்டு, அதன் வட்டியை “ஊருக்காக” பிரயோசனப்படுத்துவது எனவும், ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே..

இதன் பிரகாரம், மேற்படி தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில், தற்போதைய பொருளாளர் திரு.கைலாசநாதன் (குழந்தை), இவ்வாரம் “தனது சொந்த செலவில்” ஊர் சென்று இருந்தார். அவருடன், “தனிப்பட்ட ரீதியில்” ஊர் சென்று இருந்த ஒன்றிய உறுப்பினர்கள் சிலரும், மற்றும் அங்குள்ள பெரியோர்களுடன் இணைந்து சில வங்கிகளில் உரையாடி..,

முதற்கட்டமாக இருபத்தைந்து இலட்சம் இலங்கை ரூபாவினை, ஒருவருட வைப்பில் (வருடாவருடம் நீடிக்கும் வகையில்) “ஒன்றிய பொருளாளர்” அ.கைலாசநாதன் (குழந்தை) அவர்களின் பெயரில் இடப்பட்டதுடன், இதன்மூலம் வருடத்துக்கு வரும் வட்டியான சுமார் மூன்று இலட்சம் இலங்கை ரூபாவினை “ஊர் நோக்கிய” செயல்பாட்டுக்கு பயன்படுத்துவது என்பதையும், இதேவேளை “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தை” மிகவிரைவில், இலங்கையில் பதிவு செய்து, அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட “ஒன்றியத்தின்” பெயருக்கு கணக்கிலக்கத்தை “உடனடியாக” மாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய, நிதியானது “இலங்கையில் உள்ள வங்கியில்” இடப்படும் நிகழ்வில், சுவிஸ் ஒன்றியத்தின் பொருளாளர் அ.கைலாசநாதன் (குழந்தை), ஒன்றிய உறுப்பினர்கள் திரு.சண்முகம், திரு.கோபால் ஆகியோருடன் சமூக சேவகரும், ஓய்வுநிலைப் பேராசிரியருமான திரு.கா.குகபாலன், சமூக சேவகரும், புங்குடுதீவு அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் அதிபருமான திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், சமூக சேவகியும் புங்குடுதீவு அபிவிருத்தி ஒன்றியத்தின் பொருளாளருமான திருமதி. சுலோசனாம்பிகை தனபாலன் ஆகியோரும் முன்னிலை வகித்து இருந்தனர்.

பல வேலைப்பளுவுக்கும் மத்தியில் எமது வேண்டுகோளை ஏற்று, அறிவுரையும், ஆலோசனையும் வழங்கியதுடன் நேரில் சமூகம் தந்து உதவிய சமூகசேவகரும், ஓய்வுநிலைப் பேராசிரியருமான திரு.கா.குகபாலன், சமூக சேவகரும், புங்குடுதீவு அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் அதிபருமான திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் ஆகியோருக்கு, சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் எமது நன்றிகள்..

*** எதிர்வரும் காலங்களில் புதிதாக நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டவுடன், இக்கணக்கை மாற்றம் செய்வதாயின், (இலங்கையில் வங்கிக் கணக்கு இருக்கும் வகையிலேயே) அவர்கள் (புதிய பொருளாளர்) தமது “சொந்த செலவில்” இலங்கை சென்றே, தமது பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் எனவும், “ஒன்றிய நிதி” எக்காரணம் கொண்டும், அநாவசியமாக செலவழிக்க அனுமதி அளிப்பது இல்லையெனவும் தீர்மானிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கையிருப்பில் உள்ள “நிதியான” 16.698 சுவிஸ் பிராங் 55 ராப்பன் தொகையில், இலங்கையில் உள்ள வங்கியில் இருபத்தைந்து இலட்சம் இலங்கை ரூபா வைப்பில் இடப்பட்டதுடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் புங்குடுதீவில் அதிகூடிய புள்ளிபெற்ற மாணவனை கௌரவித்து வழங்கப்படும் தொகை போன்றவற்றை கழித்து மிகுதி (சுமார் அறுநூற்றி தொண்ணூற்றியெட்டு) 698 சுவிஸ் பிராங் 55 ராப்பன் கையிருப்பில் உள்ளது என்பதையும், “துல்லியமாக” வரவு செலவுக் கணக்கறிக்கையுடன், பொருளாளர் நாடு திரும்பியதும் அனைவருக்கும் அறிய தருகிறோம். நன்றி..

இவ்வண்ணம்..
திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.

11.04.2018

***************************

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் “புதிய நிர்வாகத்துக்கான” பொதுச்சபை கூடுதல்…!! (அறிவித்தல்)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபை தெரிவுக்கான, பொதுச்சபை ஒன்றுகூடுதல், அதாவது சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களின் ஒன்றுகூடல் எதிர்வரும் 06.05.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு பேர்ண் மாநிலத்தின் புர்கடோர்ப் மாவட்டத்தில் KInderGarten (பின்புறம் உள்ள மண்டபம்) Stöckernfeldstrasse 2, 3414 Oberburg நடைபெற உள்ளது என்பதை அனைவருக்கும் அறிய தருகிறோம்.

மேற்படி ஒன்றுகூடலில் அடுத்த நிர்வாகத்துக்கான தெரிவுகள் நடைபெற உள்ளது என்பதுடன், தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகள், வரவு செலவுக் கணக்குகள் யாவும் பகிரங்கத்தில் அறிய தரப்படும்.

**தற்போதைய நிர்வாகம் குறித்தோ, புங்குடுதீவில் தங்களின் “பொது தேவைகள்” குறித்தோ எதுவும் தெரிவிக்க வேண்டுமாயின் இப்போதே (முன்கூட்டியே) எழுத்து மூலம் அறிய தருமாறு கேட்டுக் கொள்கிறோம். (நேரத்தைக் கருத்தில் கொண்டு, அன்றையதினம் இதுகுறித்த விவாதத்தில் ஈடுபடாமல், முன்கூட்டியே எழுத்து மூலம் அறிய தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

**மேலும் மேற்படி ஒன்றுகூடலில் சுவிஸில் உள்ள புங்குடுதீவை சேர்ந்த எவரும் கலந்து கொள்ள முடியும் என்பதுடன், நிர்வாகத்தில் தெரிவு செய்யப்படுபவர்களோ, அன்றில் நிர்வாக தெரிவில் கலந்து கொள்பவர்களோ நிச்சயமாக ஒன்றிய உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதையும் அனைவருக்கும் அறிய தருகிறோம்.**.

அதாவது முன்னைய (பழைய) ஒன்றிய உறுப்பினர்களாயின் கடந்த வருட சந்தா (2017) நிச்சயமாக செலுத்தி இருக்க வேண்டும்.. புதிதாக இணைந்து பங்காற்ற விரும்புபவர்களும் நிர்வாகத்திலோ, நிர்வாகத் தெரிவிலோ பங்காற்ற முடியும். ஆயினும் அவர்கள் அதுக்கு அடுத்த மூன்று மாதத்துக்குள் இவ்வருட (2018) சந்தாவை செலுத்துவோம் என எழுத்து மூலம் உத்தரவாதம் தர வேண்டும். (கடந்தமுறை தவறுகளை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது)

நிர்வாகத்தில் தெரிவாபவர்கள் பெயருக்காக இதில் இருக்க முடியாது, தமது “ஊர் நோக்கிய” செயற்பாட்டில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்து முழுநேரமாக செயற்பாட்டாளர்களாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு பங்களிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

*** மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கும்…
ஒன்றியத் தலைவர் திரு.ரஞ்சன் -077.9485214, ஒன்றிய செயலாளர் திரு.சதா -078.8518748, ஒன்றிய பொருளாளர் திரு.குழந்தை -079.9373289, ஒன்றிய கல்விப் பொறுப்பாளர் திரு.இலட்சுமணன் .079.5063194, ஒன்றிய உபதலைவர் திரு.சஞ்ஜய் -078.6539292, ஆகிய இலக்கங்களுடன் “உடன்” தொடர்பு கொள்ளவும்.

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்”, அதிகூடிய புள்ளி பெற்ற மாணவனுக்கு, “பணமுடிப்பு” வழங்கிக் கௌரவிப்பு..! (படங்கள்)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்”, அதிகூடிய புள்ளி பெற்ற மாணவனுக்கு, “பணமுடிப்பு” வழங்கிக் கௌரவிப்பு..! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*