;
Athirady Tamil News

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்”, அதிகூடிய புள்ளி பெற்ற மாணவனுக்கு, “பணமுடிப்பு” வழங்கிக் கௌரவிப்பு..! (படங்கள்)

0


புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், அதிகூடிய புள்ளி பெற்ற மாணவனுக்கு “பணமுடிப்பு” வழங்கிக் கௌரவிப்பு..! (படங்கள்)

இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த கல்வித் பொதுத்தராதர சாதாரணதர (ஓ.எல்) பரீட்சையில், புங்குடுதீவில் அதிகூடிய புள்ளி பெற்ற மாணவன் செல்வன்.புஷ்பானந்தன் துகீசன் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், அவரது “எதிர்கால கல்வி செயல்பாட்டுக்கு” உதவும் நோக்கில், இன்றையதினம் “பணமுடிப்பு” கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த, மாணவன் செல்வன். புஷ்பானந்தன் துகீசன், யாழ். புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்விகற்று, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர (ஓ.எல்) பரீட்சையில், புங்குடுதீவில் அதிகூடிய புள்ளி பெற்று (7A, 1B) சித்தி அடைந்து உள்ளார்.

இவரது “எதிர்கால கல்வி செயல்பாடு” குறித்து, கல்வி சமூகத்தை சேர்ந்தோர், ஊர் முக்கியஸ்தர்கள், யாழில் இருந்து திரு.வைகுந்தவாசன் ஆகியோர்.. “புங்குடுதீவில் உள்ள சுவிஸ் ஒன்றிய செயற்பாட்டாளர்கள்” மற்றும் புங்குடுதீவு “தாயகம் சமூக சேவையகம்” அமைப்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இன்றையதினம் மாணவன் கௌரவிக்கப்பட்டார்.

இன்றையதினம் காலை “தாயகம்” நூலகத்தில் வைத்து, மாணவன் செல்வன். புஷ்பானந்தன் துகீசன், புங்குடுதீவு “தாயகம் சமூக சேவையகம்” அமைப்பாளர்களினால் பொன்னாடை போர்த்தியும், சந்தனமாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டதுடன், கல்வி உபகரணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதனையடுத்து சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில், ஒன்றியத்தின் பொருளாளர் திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) அவர்களினால், இருபத்தையாயிரம் ரூபா பணமுடிப்பு (வங்கியில் வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகம்) மாணவனின் “எதிர்கால கல்வி செயல்பாட்டுக்கு” வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மாணவன் செல்வன். புஷ்பானந்தன் துகீசன் அவர்களுக்கு, ஒன்றிய உறுப்பினர்களான திரு.தயாபரன் பொன்னாடை போர்க்க, திரு.சந்திரபாலன் சந்தனமாலை அணிவிக்க, திரு.கோபால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்க, ஒன்றிய பொருளாளர் திரு.கைலாசநாதன் (குழந்தை) “பணமுடிப்பை” வழங்கி வைத்தார்.

மேற்படி நிகழ்வில் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் பொருளாளர் திரு.அ.கைலாசநாதன் (குழந்தை), மற்றும் ஒன்றிய உறுப்பினர்களான திரு.தயாபரன், திரு.சந்திரபாலன், திரு.கோபால், ஆகியோரும்; சமூக சேவகரும், “தாயகம் சமூக சேவையகத்தின்” போஷகரும், புங்குடுதீவு அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் அதிபருமான திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், சமூக சேவகியும், “தாயகம் சமூக சேவையகத்தின்” தலைவியும், புங்குடுதீவு அபிவிருத்தி ஒன்றியத்தின் பொருளாளருமான திருமதி. சுலோசனாம்பிகை தனபாலன் ஆகியோரும் முன்னிலை வகித்து இருந்தனர்.

மேற்படி நிகழ்வில் “தாயகம்” சமூக சேவை அகத்தின், “சொக்கலிங்கம் அக்கெடமி” மாணவ, மாணவிகள், ஆசிரியை செல்வி.கான்சனா, மாணவனின் தாய் திருமதி. புஸ்பானந்தன் புஸ்பரூபி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். நன்றி..

இவ்வண்ணம்..
திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.

13.04.2018

*****************************************************
*****************************************************

**** புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் “புதிய நிர்வாகத்துக்கான” பொதுச்சபை கூடுதல்…!! (அறிவித்தல்)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபை தெரிவுக்கான, பொதுச்சபை ஒன்றுகூடுதல், அதாவது சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களின் ஒன்றுகூடல் எதிர்வரும் 06.05.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு பேர்ண் மாநிலத்தின் புர்கடோர்ப் மாவட்டத்தில் KInderGarten (பின்புறம் உள்ள மண்டபம்) Stöckernfeldstrasse 2, 3414 Oberburg நடைபெற உள்ளது என்பதை அனைவருக்கும் அறிய தருகிறோம்.

மேற்படி ஒன்றுகூடலில் அடுத்த நிர்வாகத்துக்கான தெரிவுகள் நடைபெற உள்ளது என்பதுடன், தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகள், வரவு செலவுக் கணக்குகள் யாவும் பகிரங்கத்தில் அறிய தரப்படும்.

**தற்போதைய நிர்வாகம் குறித்தோ, புங்குடுதீவில் தங்களின் “பொது தேவைகள்” குறித்தோ எதுவும் தெரிவிக்க வேண்டுமாயின் இப்போதே (முன்கூட்டியே) எழுத்து மூலம் அறிய தருமாறு கேட்டுக் கொள்கிறோம். (நேரத்தைக் கருத்தில் கொண்டு, அன்றையதினம் இதுகுறித்த விவாதத்தில் ஈடுபடாமல், முன்கூட்டியே எழுத்து மூலம் அறிய தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

**மேலும் மேற்படி ஒன்றுகூடலில் சுவிஸில் உள்ள புங்குடுதீவை சேர்ந்த எவரும் கலந்து கொள்ள முடியும் என்பதுடன், நிர்வாகத்தில் தெரிவு செய்யப்படுபவர்களோ, அன்றில் நிர்வாக தெரிவில் கலந்து கொள்பவர்களோ நிச்சயமாக ஒன்றிய உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதையும் அனைவருக்கும் அறிய தருகிறோம்.**.

அதாவது முன்னைய (பழைய) ஒன்றிய உறுப்பினர்களாயின் கடந்த வருட சந்தா (2017) நிச்சயமாக செலுத்தி இருக்க வேண்டும்.. புதிதாக இணைந்து பங்காற்ற விரும்புபவர்களும் நிர்வாகத்திலோ, நிர்வாகத் தெரிவிலோ பங்காற்ற முடியும். ஆயினும் அவர்கள் அதுக்கு அடுத்த மூன்று மாதத்துக்குள் இவ்வருட (2018) சந்தாவை செலுத்துவோம் என எழுத்து மூலம் உத்தரவாதம் தர வேண்டும். (கடந்தமுறை தவறுகளை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது)

நிர்வாகத்தில் தெரிவாபவர்கள் பெயருக்காக இதில் இருக்க முடியாது, தமது “ஊர் நோக்கிய” செயற்பாட்டில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்து “முழுநேரமாக, செயற்பாட்டாளர்களாக” இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு பங்களிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

*** மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கும்…
ஒன்றியத் தலைவர் திரு.ரஞ்சன் -077.9485214, ஒன்றிய செயலாளர் திரு.சதா -078.8518748, ஒன்றிய பொருளாளர் திரு.குழந்தை -079.9373289, ஒன்றிய கல்விப் பொறுப்பாளர் திரு.இலட்சுமணன் .079.5063194, ஒன்றிய உபதலைவர் திரு.சஞ்ஜய் -078.6539292, ஆகிய இலக்கங்களுடன் “உடன்” தொடர்பு கொள்ளவும்.

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “நிதி”, இலங்கையில் வங்கியில் “வைப்பில்” இடப்பட்டது… (படங்களுடன், பகிரங்க அறிவித்தல்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*