;
Athirady Tamil News

புங்கையின் மைந்தர்களே, புகழோடு வாழ்க..! -சிவமேனகை (“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து)

0


புங்கையின் மைந்தர்களே புகழோடு வாழ்க..! – சிவமேனகை

அசைந்தாடிவரும் கடலலைகள் தாலாட்ட
அகம்மகிழும் அருள்தீவின் அகத்தினுள்ளே
அழகழகாய் உயர்ந்துநிற்கும் ஆலயங்கள்
ஆன்மீக அருளலையை அள்ளிவீச
நிலம் செழிக்கும் நீலக்கடல் தீவு உங்கள்
நினைவுகளில் நீங்காத புங்குடுதீவு..

பொன் விளைந்த கிரவுஞ்ச பூமி அது
பெண்ணரசி கண்ணகியாள் தலமும் அது
மன்னவர்கள் போற்றிய வீரநிலமும் அது
மாதரசி மலர்ந்த எழில் மலர்வனமும் அது
தென்னவனின் மகன் தமிழ்கற்ற மலையும் அது
தேமதுரத்தமிழ் புலவர்கள் தோன்றிய தீவும் அதுவே ,,,,,

வண்ணத்தமிழ் வார்த்தைகளில் விளையாட
எண்ணங்களில் எழும் இலக்கியங்கள் பொருள்கூற
மண்ணின் மகிமை பாடிய மாதவத்தோர் / இப்
புண்ணிய பூமியின் மைந்தர்கள் என்பதோர் வரலாறு
விண்ணிலே பறந்து புலம்பெயர்ந்தும் புங்குடுதீவை
கண்ணின் மணியாக காக்கும் காவலர்களே..

எண்ணில் அடங்காத சேவையை என்றென்றும் /தாய்
மண்ணுக்காய் செய்யும் புங்கையின் மாதவர்களே
பண்ணோடு பாடும் என் கவிதையால் வாழ்த்துகிறேன்..

கண்ணியம் காக்கும் பெருந்தகைகளே கடல்சூழ்
புண்ணியத்தீவின் புதல்வர்களே என்றென்றும் புகழோடு வாழ்க ,,,,,,,,

நன்றி வணக்கம்
சிவமேனகை

(“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து)

(*** சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால் 28.03.2018 அன்று நடத்தப்படட “வேரும் விழுதும் -2018” விழாமலரில் பிரசுரமாகியது இது… ** “வேரும் விழுதும் -2018” விழாமலரில் பிரசுரமாகிய அனைத்து விபரங்களும் தொடர்ச்சியாக இந்த இணையத்தில் பிரசுரமாகும்.)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*