;
Athirady Tamil News

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், கௌரவிக்கப்பட்ட திரு.தனம் அண்ணர்..! (படங்கள்)

0


புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், கௌரவிக்கப்பட்ட திரு.தனம்..! (படங்கள்)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், கடந்த 28.03.2018 அன்று நடைபெற்ற “வேரும் விழுதும் -2018” விழாவில், பொதுசேவை மற்றும் சமூக சேவைகளில் தம்மை இணைத்துக் கொண்டோரும், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் உறுப்பினர்களுமான பலரில், முதல்கட்டமாக ஐவரை கௌரவித்து விருது வழங்குவதென “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” நிர்வாகசபை தீர்மானித்து செயல்பட்டது.

இதன் காரணமாக “வேரும் விழுதும் -2018” விழாவில், திரு.சிவகுமார் (பீல்), திரு.தங்கராஜா (மதி- பீல்), திரு.வடிவேலு (தூண்), திரு.சிவகுமார் (தூண்) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவராகிய திரு.க.தனபாலசுப்ரமணியம் (தனம் -சூரிச்) சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் இருந்த காரணத்தினால், எம்மால் அன்று கௌரவிக்கப்படவில்லை.

ஆயினும் கடந்த 08.04.2018 அன்று திரு தனம் அண்ணர் அவர்களின் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகளினால் அவரது பிறந்ததினத்தை செய்த போது, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் கலந்து கொண்டு, பொன்னாடை, சந்தனமாலை அணிவித்ததுடன் விருதையும் வழங்கிக் கௌரவித்தார் என்பதை அறிய தருகிறோம். நன்றி…

இவ்வண்ணம்..
திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.

14.04.2018

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*