;
Athirady Tamil News

“புளொட்” செயலதிபரின் கொலையாளியென கருதப்படும் ராபின், சுவிஸில் கொலை செய்யப்பட்ட வழக்கு..! (படங்கள் & வீடியோ)

0


“புளொட்” செயலதிபரின் கொலையாளியென கருதப்படும் ராபின், சுவிஸில் கொலை செய்யப்பட்ட வழக்கு..! (படங்கள் & வீடியோ)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் முகுந்தன் எனும் உமா மகேஸ்வரன் 16.07.1989 இல் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கொலையாளியெனக் கருதப்பட்ட அச்சுவேலியைச் சேர்ந்த ராபின் எனும் உதயகுமார் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சுமார் இருபத்திநான்கு வருடத்துக்கு முன்னர், அதாவது 28.11.1994 இல் சுவிஸர்லாந்து நாட்டில் வைத்து “இனந்தெரியாத நபர்களினால்” கொலை செய்யப்பட்டது தெரிந்ததே.

இக்கொலை குற்றச்சாட்டில் “புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம்சாட்டி, சுவிஸ் பொலிஸாரினால் அப்போதைய “புளொட்” சர்வதேச பொறுப்பாளரான சுவிஸ்ரஞ்சன் எனும் சொக்கலிங்கம் ரஞ்சன் டிசம்பர் 1994 முதல் கைது செய்யப்பட்டு, சுமார் மூன்று வருடங்களாக, சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு,

விசாரணையின் பின்னர் (சுமார் மூன்று வருடங்களின் பின்னர்) 30.04.1997 அன்று, “குற்றச்சாட்டுக்கான எந்தவித ஆதாரங்களோ, தடயங்களோ இல்லையெனக் கூறி” சுவிஸ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போது எடுக்கப்பட்டது…

இதேவேளை “உண்மை தெரிந்தும், தெரிவிக்க மறுப்பதாகக் கூறி”, மற்றும் மூன்று புளொட் சுவிஸ் கிளை உறுப்பினர்களும், சுமார் மூன்று முதல் ஆறு மாதம் வரை தடுத்து வைக்கப்பட்டு இருந்து, “குற்றச்சாட்டுக்கான எந்தவித ஆதாரங்களோ, தடயங்களோ இல்லையெனக் கூறி” விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் & வீடியோ உதவி… -புளொட்.

“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985) காட்சிகள்.. -001 (படங்கள் & வீடியோ வடிவில்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*