23 April 2018 0 Comments Report

புங்குடுதீவு “அம்பலவாணர் கலைஅரங்க” திறப்பு விழாவின், முதலாம் ஆண்டு நிறைவு விழா..! (படங்கள் & வீடியோக்கள்)


புங்குடுதீவு அம்பலவாணர் கலைஅரங்க திறப்பு விழாவின் முதலாம் ஆண்டு நிறைவு விழா..! (படங்கள் & வீடியோக்கள்)

புங்குடுதீவு கலைப்பெருமன்றத்தின் ஏற்பாட்டில் “அம்பலவாணர் கலைஅரங்க திறப்பு விழாவின் முதலாம் ஆண்டு நிறைவு விழா” இன்று 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு வடமாகாண ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் தலைமையில் புங்குடுதீவில் இடம்பெற்றது.

காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளாக இடம்பெற்ற இந்த நிகழ்வில், காலை நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் குரேயும், சிறப்பு அதிதிகளாக வைத்திய நிபுணர் திரு.ப.ஸ்ரீகிருஷ்ணா, பிரபல வர்த்தகர் திரு.செ.மகேந்திரன் மற்றும் தொழிலதிபர் திரு.சே.சந்திரலிங்கம் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக கல்வி அமைச்சின் ஓய்வு நிலை மேலதிக செயலாளர் திரு.உடுவை தில்லை நடராஜா, வைத்திய கலாநிதி திரு.த.சத்தியமூர்த்தி, வேலணை பிரதேச செயலாளர் திரு.எ.சோதிநாதன், நியூ ரங்கனஸ் ஹோம் பில்டர்ஸ் செயலாளர் தர்மினி பத்மநாதன், வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு.க.நாவலன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

வரவேற்புரையை திரு.எஸ்.கே சண்முகலிங்கம் வழங்கினார்.

நியூ ரங்கனாஸ் ஹோமோ பில்டர்ஸ் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுமண்டபம் திறப்புவிழா, நினைவுக்கல் திரைநீக்கம், ஆண்டுமலர் வெளியீடு, தையல் கணனி பயிற்சி நெறிகளில் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்குதல் என்பனவும் இடம்பெற்றன.

நன்றியுரையை அம்பலவாணர் கலைப்பெருமன்ற முகாமையாளர் திரு.கு.சந்திரா வழங்கினார்.

மேலும், மாலை அமர்வு பிற்பகல் 3 மணிக்கு பேராசிரியர் கா.குகபாலன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வின் பிரதம அதிதியாக யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் கலந்து சிறப்பித்தர்.

சிறப்பு விருந்தினர்களாக வைத்திய நிபுணர் ந.சரவணபவ, ஊர்காவற்றுறை பிரதேச செயலர் திருமதி.மஞசுளாதேவி சதீசன், மற்றும் கௌரவ விருந்தினர்களாக தீவகக் கல்வி பணிப்பாளர் திரு.ஆ.இளங்கோ, வேலணை பிரதேச சபை தவிசாளர் திரு.ந.கருணாகரமூர்த்தி, வடஇலங்கை சர்வோதயத் தலைவி செல்வி.பொ.யமுனாதேவி, சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய அதிபர் திருமதி.வனிதா அருட்ச்செல்வன், வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான திரு க.வசந்தகுமாரன், திருமதி யசோதா சாந்தகுமார், யாழ். கபிலா ஸூபலஸ் உரிமையாளர் திரு.சி.கபிலன், மற்றும் திரு.க.மகாலிங்கம் (ஜெர்மனி) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

நன்றியுரையை அம்பலவாணர் கலைப்பெருமன்ற உபசெயலாளர் திருமதி.சுலோசனாம்பிகை தனபாலன் வழங்கினார்.

அத்துடன் புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் குழுநடனம், வயலின் இசை, சமூக நாடகம், மெல்லிசை நிகழ்வு, மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

**தகவல் & படங்கள்… “அதிரடி”யின் விசேட நிருபர் மற்றும் ஐ.சிவசாந்தன் & புங்கையூரான்.

யாழ் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் பலரின் குருதியில் கலந்திருப்பது சிங்கள குருதி..!!

**** விழா நிகழ்வின் முழுமையான புகைப்படங்கள்… (கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்)
https://www.facebook.com/swiss.ranjan.1/media_set?set=a.982173138624000.1073741942.100004939680756&type=3


Post a Comment

*