;
Athirady Tamil News

வேரும் விழுதும்” மலருக்கு வாழ்த்து செய்தி வழங்குவதில் பெருமிதம் அடைகிறேன்.. -ஜெகநந்தினி (“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து)

0


வாழ்த்துச் செய்தி..

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் / சுவிற்சர்லாந்து நடத்தும் 21 வது ஆண்டுவிழாவில் வெளியிடப்படும் “வேரும் விழுதும்” மலருக்கு வாழ்த்து செய்தி வழங்குவதில் பெருமிதம் அடைகிறேன்.

புலம்பெயர் உறவுகள் ஒன்றுகூடி உருவாக்கிய இவ்வமைப்பின் ஊடாக ஊரின் அபிவிருத்திக்காக பல்வேறு அபிவிருத்திகளை செய்து வருகின்றார்கள்.

இச்செயல்பாடானது அவர்களின் ஒற்றுமையையும் பரந்த மனப்பான்மையினையும் எடுத்துக் காட்டுகின்றது.

ஒவ்வொரு வருடமும் பல்வேறு அபிவிருத்திகள், உதவிகள் என்பன செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் எமது யா /புங்குடுதீவு றோ.க. த .க பாடசாலைக்கு உணவுக்கூடம் ஒன்றினை அமைத்து தந்திருக்கின்றார்கள். இதற்காக முன்னின்று உதவிய அனைவருக்கும் எமது பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளை கூறி நிற்கின்றேன்.

அடுத்து இன்றைய வேரும் விழுதும் கலை நிகழ்வினை முன்னிட்டு பல்வேறு போட்டிகளை ஒழுங்குபடுத்தி சிறப்பாக நடத்தியமைக்காக எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் இன்றைய கலைமாலை நிகழ்வானது மிகவும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றேன்.

இங்கனம்
முத்துக்குமாரு ஜெகநந்தினி
முன்னாள் ஆசிரியை
யா / புங்குடுதீவு றோ .க.த. க பாடசாலை
ஆசிரியை
யா / வயாவிளான் மத்திய கல்லூரி

(“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து)

(*** சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால் 28.03.2018 அன்று நடத்தப்படட “வேரும் விழுதும் -2018” விழாமலரில் பிரசுரமாகியது இது… ** “வேரும் விழுதும் -2018” விழாமலரில் பிரசுரமாகிய அனைத்து விபரங்களும் தொடர்ச்சியாக இந்த இணையத்தில் பிரசுரமாகும்.)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + eleven =

*