26 April 2018 0 Comments Report

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்)


“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்)

அன்புடன் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களே மற்றும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம்..

மேலும் நாம் ஏற்க்கனவே 2016 ம், 2017 ம் ஆண்டுக்கான “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” கணக்கறிக்கையை, இணையங்கள் மூலமும், விழாமலர்கள் மூலமும் “பகிரங்கத்தில்” அறிவித்து இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்..

எதிர்வரும் 06.05.2018 அன்று புதிய நிர்வாகசபை தெரிவுக்கான, “பொதுச்சபை” கூட உள்ளதினால், இவ்வருட தை மாதம் முதலாம் திகதியில் இருந்து இன்றைய திகதி வரையான கணக்கறிக்கையையும் பகிரங்கத்தில் அறிய தருகிறோம். இந்த கணக்கு வழக்கில் எதுவும் தவறுகள் அல்லது சரிபிழைகள் இருப்பின் “ஒன்றிய பொருளாளர்” என்ற ரீதியில் என்னுடன் நேரிலோ, தொலைபேசியிலோ “உடன்” அறிய தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எமது அன்பின் உறவுகளே.. 2018 ஆரம்ப ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை ஒன்றியத்தின் பொருளாளர் அருணாசலம் கைலாசநாதன் ஆகிய நான், ஒன்றிய தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன், ஒன்றிய செயலாளர் திரு. செல்லத்துரை சதானந்தன் அவர்களின் ஒப்புதலுடன் உங்களின் (மக்களின்) பார்வைக்காக முன்வைக்கின்றோம்.

இதில் ஏதாவது சரிபிழை, கேள்விகள் இருப்பின் நேரடியாக என்னுடனோ அல்லது ஒன்றிய தலைமையுடனோ கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

** உங்களின் உதவிகள், பங்களிப்புகளினாலேயே “ஊர் நோக்கிய” எமது சேவையை நாம் திறம்பட செய்வதுக்கு உந்துகோலாக உள்ளது என்பதை நாம் மனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி..

இவ்வருட ஆரம்பத்தில் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கையிருப்பில் இருந்த “நிதியான” 16.473 சுவிஸ் பிராங் 55 ராப்பன் தொகையில், இலங்கையில் உள்ள வங்கியில் இருபத்தைந்து இலட்சம் இலங்கை ரூபா வைப்பில் இடப்பட்டதுடன், கடந்த நான்கு மாதத்தில் நடைபெற்ற வரவு செலவின் பின்னர், மிகுதி (அறுநூற்றி எண்பத்தாறு) 686 சுவிஸ் பிராங் 55 ராப்பன் கையிருப்பில் உள்ளது என்பதையும், அனைவருக்கும் அறிய தருகிறோம்.

“மக்கள் சேவையே, மகேசன் சேவை”

இவ்வண்ணம்
அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை),
பொருளாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து

26.04.2018.

***************************

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் “புதிய நிர்வாகத்துக்கான” பொதுச்சபை கூடுதல்…!! (அறிவித்தல்)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபை தெரிவுக்கான, பொதுச்சபை ஒன்றுகூடுதல், அதாவது சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களின் ஒன்றுகூடல் எதிர்வரும் 06.05.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு பேர்ண் மாநிலத்தின் புர்கடோர்ப் மாவட்டத்தில் KInderGarten (பின்புறம் உள்ள மண்டபம்) Stöckernfeldstrasse 2, 3414 Oberburg நடைபெற உள்ளது என்பதை அனைவருக்கும் அறிய தருகிறோம்.

மேற்படி ஒன்றுகூடலில் அடுத்த நிர்வாகத்துக்கான தெரிவுகள் நடைபெற உள்ளது என்பதுடன், தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகள், வரவு செலவுக் கணக்குகள் யாவும் பகிரங்கத்தில் அறிய தரப்படும்.

**தற்போதைய நிர்வாகம் குறித்தோ, புங்குடுதீவில் தங்களின் “பொது தேவைகள்” குறித்தோ எதுவும் தெரிவிக்க வேண்டுமாயின் இப்போதே (முன்கூட்டியே) எழுத்து மூலம் அறிய தருமாறு கேட்டுக் கொள்கிறோம். (நேரத்தைக் கருத்தில் கொண்டு, அன்றையதினம் இதுகுறித்த விவாதத்தில் ஈடுபடாமல், முன்கூட்டியே எழுத்து மூலம் அறிய தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

**மேலும் மேற்படி ஒன்றுகூடலில் சுவிஸில் உள்ள புங்குடுதீவை சேர்ந்த எவரும் கலந்து கொள்ள முடியும் என்பதுடன், நிர்வாகத்தில் தெரிவு செய்யப்படுபவர்களோ, அன்றில் நிர்வாக தெரிவில் கலந்து கொள்பவர்களோ நிச்சயமாக ஒன்றிய உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதையும் அனைவருக்கும் அறிய தருகிறோம்.**.

அதாவது முன்னைய (பழைய) ஒன்றிய உறுப்பினர்களாயின் கடந்த வருட சந்தா (2017) நிச்சயமாக செலுத்தி இருக்க வேண்டும்.. புதிதாக இணைந்து பங்காற்ற விரும்புபவர்களும் நிர்வாகத்திலோ, நிர்வாகத் தெரிவிலோ பங்காற்ற முடியும். ஆயினும் அவர்கள் அதுக்கு அடுத்த மூன்று மாதத்துக்குள் இவ்வருட (2018) சந்தாவை செலுத்துவோம் என எழுத்து மூலம் உத்தரவாதம் தர வேண்டும். (கடந்தமுறை தவறுகளை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது)

நிர்வாகத்தில் தெரிவாபவர்கள் பெயருக்காக இதில் இருக்க முடியாது, தமது “ஊர் நோக்கிய” செயற்பாட்டில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்து முழுநேரமாக செயற்பாட்டாளர்களாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு பங்களிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

*** மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கும்…
ஒன்றியத் தலைவர் திரு.ரஞ்சன் -077.9485214, ஒன்றிய செயலாளர் திரு.சதா -078.8518748, ஒன்றிய பொருளாளர் திரு.குழந்தை -079.9373289, ஒன்றிய கல்விப் பொறுப்பாளர் திரு.இலட்சுமணன் .079.5063194, ஒன்றிய உபதலைவர் திரு.சஞ்ஜய் -078.6539292, ஆகிய இலக்கங்களுடன் “உடன்” தொடர்பு கொள்ளவும்.


Post a Comment

*