;
Athirady Tamil News

தமிழ் விடுதலைப் போராட்டத்தின், ஆரம்பகால உறுப்பினர் கமலபாஸ்கரன் லண்டனில் காலமானார்… (அறிவித்தல்)

0

தமிழ் விடுதலைப் போராட்டத்தின், ஆரம்பகால உறுப்பினர் கமலபாஸ்கரன் லண்டனில் காலமானார்… (அறிவித்தல்)

தோழர்.சின்னையா.கமலபாஸ்கரன் இன்று லண்டனில் காலமாகி விட்டார் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். “புதிய தமிழ் புலிகள்” எனும் ஆரம்ப அமைப்பில் இருந்து, விடுதலைப்புலிகள் எனும் அமைப்பில் செயல்பட்டு, 1980 இல் புளொட், புலிகள் என பிரிந்த போது புளொட் அமைப்புக்காக லண்டனில் இருந்து செயல்பட்ட ஆரம்பகால சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவர் தோழர் கமலபாஸ்கரன்..

அமரர் தோழர். சின்னையா கமலபாஸ்கரன், திருகோணமலையை பிறப்பிடமாகவும் பிரித்தானியா லண்டனை வாழ்விடமாகவும் கொண்டவர் என்பதுடன் இரேனா எனும் திருமதி ஈஸ்வரியின் அன்புக்கணவரும், ஷ்டீபன், இந்திராணி ஆகியோரின் அன்புத் தந்தையும், ஆவார்.

இவரது சகோதரர்களில் ஒருவரே இலங்கையின் முதலாவது தமிழ் சட்டமா அதிபரான காலம் சென்ற சின்னையா கமலசபேசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியத்தின் மீதும் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கான விடுதலைப் போராட்டத்திலும் தீவிர பற்றுக்கொண்ட கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் தோழர் கமலபாஸ்கரனின் மறைவு குறித்து அனைவருக்கும் அறியத் தருவதுடன், அன்னாரின் குடும்பத்துக்கும் எமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
(மேலதிக விபரம் பின்னர் அறியத் தரப்படும்)

-தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)-
-ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்ப்)-

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*