;
Athirady Tamil News

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப அரை ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்)

0

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப அரை ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்)

அன்புடன் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களே மற்றும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம்..

மேலும் நாம் ஏற்க்கனவே 2016 ம், 2017 ம் ஆண்டுக்கான “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” கணக்கறிக்கையை, இணையங்கள் மூலமும், விழாமலர்கள் மூலமும் “பகிரங்கத்தில்” அறிவித்து இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்..

இவ்வருட தை மாதம் முதலாம் திகதியில் இருந்து, ஆறாம் மாதம் முடிவு வரையான (ஆறு மாத) இன்றைய திகதி வரையான கணக்கறிக்கையையும் பகிரங்கத்தில் அறிய தருகிறோம். இந்த கணக்கு வழக்கில் எதுவும் தவறுகள் அல்லது சரிபிழைகள் இருப்பின் “ஒன்றிய பொருளாளர்” என்ற ரீதியில் என்னுடன் நேரிலோ, தொலைபேசியிலோ “உடன்” அறிய தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எமது அன்பின் உறவுகளே.. 2018 ஆரம்ப ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை ஒன்றியத்தின் பொருளாளர் அருணாசலம் கைலாசநாதன் ஆகிய நான், ஒன்றிய தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன், ஒன்றிய செயலாளர் திருமதி.செல்வி சுதாகரன், ஒன்றிய கணக்காய்வாளர் திரு.சின்னத்துரை இலக்சுமணன் அவர்களின் ஒப்புதலுடன் உங்களின் (மக்களின்) பார்வைக்காக முன்வைக்கின்றோம்.

இதில் ஏதாவது சரிபிழை, கேள்விகள் இருப்பின் நேரடியாக என்னுடனோ அல்லது ஒன்றிய தலைமையுடனோ கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

** உங்களின் உதவிகள், பங்களிப்புகளினாலேயே “ஊர் நோக்கிய” எமது சேவையை நாம் திறம்பட செய்வதுக்கு உந்துகோலாக உள்ளது என்பதை நாம் மனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி..

ஆகவே இதுவரை “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தில்” உறுப்பினர்களாக இணையாதவர்கள், தம்மையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வதுடன், இதுவரை இவ்வருடத்துக்கு (2018) உரிய சந்தாப்பணம் செலுத்தாதவர்கள், அதனை உடன் செலுத்தி “ஊர் நோக்கிய, மக்கள் சேவையில்” கைகோர்த்து செயல்படுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி..

“மக்கள் சேவையே, மண்ணின் சேவை”

இவ்வண்ணம்
அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை),
பொருளாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து
30.06.2018.

Home Page

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

Leave A Reply

Your email address will not be published.

fourteen + five =

*