;
Athirady Tamil News

லண்டன் மாநகரில், “புளொட்” அமைப்பின் “கறுப்பு ஜூலையில் வீரமக்கள் தினம்”.. (அறிவித்தல்) -வீடியோ & படங்கள்-

0

லண்டன் மாநகரில், “புளொட்” அமைப்பின் “கறுப்பு ஜூலையில் வீரமக்கள் தினம்”.. (அறிவித்தல்) -வீடியோ & படங்கள்-
———————————————
தமிழ் மக்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையிலும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியில் “வீரமக்கள் தினமாக” அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த 29வது நினைவு கூரல்,ஐக்கிய இராச்சியத்தில், கிழக்கு இலண்டனில் 21/07/2018 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு, Trinity Center, East Avenue, London, E12 6SG எனும் முகவரியில் நடை பெறும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) ஐக்கிய இராச்சியக் கிளை அறிவித்துள்ளது .

இதே வேளை இலண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் “வீரமக்கள் தின” சுவரொட்டிகள், “புளொட்” தோழர்களால் பரவலாக ஒட்டப்பட்டு காணப்படுகின்றன.

“கறுப்பு ஜூலையில் 29ஆவது வீரமக்கள்தினம்"

“கறுப்பு ஜூலையில் 29ஆவது வீரமக்கள்தினம்"21/07/2018 Saturday 6.00PM AT Trinity Center East Avenue, London, E12 6SGதேசிய இன விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழக கண்மணிகள் அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களிற்கான இந்த அஞ்சலி நிகழ்வில், அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென தோழமையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.அத்துடன் தங்கள் உறவினர்கள்,நண்பர்களோடும் இத்தகவலைப் பகிர்ந்து கொள்ளுமாறும் வேண்டுகின்றோம். உரிமையும் நீதியும் எம் இனத்தின் தேவை! அர்பணிப்பும், நேர்மையான ஐக்கியமுமே அதற்கான பாதை!!தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி -ஐக்கிய இராச்சியம்PLOTE / DPLF-UK (dplfuk@yahoo.com )

Gepostet von DPLF Great Britain am Dienstag, 17. Juli 2018

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − thirteen =

*