;
Athirady Tamil News

சுவிஸில் காணமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கலந்து கொண்ட சந்திப்பில், “சுவிஸ் புலிகளிடையே மோதல்”; மக்கள் கடும் விசனம்..!

0

சுவிஸில் காணமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கலந்து கொண்ட சந்திப்பில், “சுவிஸ் புலிகளிடையே மோதல்”; மக்கள் கடும் விசனம்..!

கடந்த மாத இறுதியில் சுவிஸின் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்ற “கலந்துரையாடல்” சந்திப்பில், “சுவிஸ் புலிகள்” அமைப்பில் இருபிரிவுகளாக செயல்படும், “தமிழர் ஒருங்கிணைப்புக் குழு” மற்றும் “தமிழர் இயக்கம்” ஆகியவற்றின் உறுப்பினர்களிடையே மோதல் நிலை உருவாகியது தொடர்பாக “அதிரடி” இணையத்துக்கு எழுத்து மூலம் செய்தியொன்று கிடைக்கப் பெற்ற போதிலும், இதன் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டும், இந்த செய்தியை தவிர்க்கும் பொருட்டும் “அதிரடி” நிர்வாகத்தால், இந்த செய்தி தவிர்க்கப்பட்டு வந்தது.

ஆயினும் அதன் பின்னரும் இவர்களிடையான மோதல் தொடர்ந்து “புகைச்சலாக” வெளிவந்து கொண்டிருப்பதும், “தமிழர் இயக்கம்” அமைப்பை சார்ந்தோர், சுவிஸ் புலிகளின் முன்னாள் பொறுப்பாளரான திரு.குலம் என்பவரின் தலைமையில் “பாதிக்கப்பட்ட மக்களுக்கு” உதவும் பொருட்டு, பொது நடவடிக்கையில் ஈடுபட முனைவதை தடுக்கும் நோக்கில் செயல்பட உள்ளதை அறிந்தே, இந்த செய்தியை பகிரங்கத்தில் பிரசுரித்து உள்ளோம்.

மேற்படி செய்தியின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு, மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படும் ஜெனீவாவை சேர்ந்த சுவிஸ் புலி உறுப்பினரான திரு.ரஜீவன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது.. “இதுவோர் பொய்யான செய்தி எனவும், அதாவது அடித்தது அல்லது அடிக்கப் பாய்ந்தது என்பது பொய்யான செய்தி எனவும், சம்பந்தப்பட்ட இடத்தில் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது உண்மை எனவும், ரகுபதி அண்ணர் தலைமையில் செயல்படும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவே” உண்மையான சுவிஸ் புலிகள் அமைப்பு எனவும், சுவிஸில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கலந்து கொண்ட சந்திப்பை தாமே மேற்கொண்டதாகவும், ஆயினும் குரு தலைமையிலான சிலர் (தமிழர் இயக்கத்தை சேர்ந்தோர்) இடையில் புகுந்து குழப்புவதாகவும்” குறிப்பிட்டார்.

“சுவிஸில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள், குருவை சேர்ந்தவர்களுடனான தொடர்பில் இருப்பதினால், அவர்களுக்கு ஜெனீவாவில் தங்குமிட வசதி கொடுத்த்தோரை நீங்கள் அச்சுறுத்துவதாகவும்,.தங்குமிட வசதி கொடுக்கக் கூடாதென நீங்கள் சொல்வதாகவும் அறிகிறோம்” இது குறித்து என்ன தெரிவிக்கிறீர்களென? “அதிரடி” இணையம் வினவிய போது, “அதுவொரு பொய்யான செய்தி எனவும், நான் தான் அவர்களை எனது நண்பர்கள், உறவுகள் வீடுகளில் தங்க வைத்துள்ளேன், வேண்டுமாயின் அவர்களிடம் நீங்கள் நேரடியாகக் கேட்கலாம்” எனவும் குறிப்பிட்டார்.

அப்படியாயின் “அவர்களின், அல்லது அவர்கள் தங்கி உள்ள தொலைபேசி இலக்கங்களை தந்தால் நாம் நேரில் விசாரிக்கிறோம்” என “அதிரடி” இணையம் சார்பில் கேட்ட போதிலும், “தான் முதலில் தொடர்பு கொண்டு, கேட்டு விட்டு தருகிறேன்” என முதலில் கூறியதுடன், பின்னர் “அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை” எனத் தெரிவித்து தொலைபேசி இலக்கம் தரப்படவில்லை.

இதேவேளை இதுகுறித்து “தமிழர் இயக்கத்தை” சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரிடம், “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது.. “உங்களுக்கு கிடைத்த செய்தி உண்மை தான் எனவும், ரஜீவன் என்பவர் கால் முறிந்து, கால் முறிவுக்கு பயன்படுத்தும் தடியுடன் அன்றையதினம் காணப்பட்டதால், அத்தடியின் துணையுடன் எம்மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டது உண்மை எனவும், அவருக்கு துணையாக தீபராஜ் என்பவரும் பாய்ந்து வந்தார் எனவும், ஆயினும் அங்கிருந்த பொதுமக்களினால் தடுக்கப்பட்டனர் எனவும் குறிப்பிட்டார்.

******************************************

*** “அதிரடி” இணையத்துக்கு எழுத்து மூலம் கிடைத்த செய்தி கீழே பிரசுரிக்கப்பட்டு உள்ளது…. ***

சுவிஸில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கலந்து கொண்ட சந்திப்பில் சுவிஸ் புலிகளின் அமைப்பான, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ரவுடித்தனம் – தமிழ் மக்கள் கடும் விசனம்...

கடந்த 29.06.2018 அன்று தமிழர் தாயகத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடனான சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர். ஐ, நா மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு சர்வதேச சமூகத்தாருக்கு தமது பிரச்சனைகளை எடுத்து விளக்க ஜேனீவா வந்த அவர்கள் சுவிஸில் வசிக்கும் தமிழ் மக்களை சந்திப்பதற்கு இக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். இக்கூட்டதை ஒழுங்குபடுத்துவதற்கு பல அமைப்புகள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் அவர்களுக்கு உதவியதாக தெரிய வருகிறது.

இக்கூட்டம் மாலை ஏழு மணியளவில், Zieglerstrasse 20, 3007 Bern எனும் முகவரியில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் பெரும்பான்மையாக தம்மைத் தாமே “தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை” எனக் கூறிக் கொள்ளும் வி.ரகுபதி தலமையிலான “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரும்” கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தை நடாத்திய உறவுகள் தமது தேவைகளையும், பிரச்சனைகளையும் குறிப்பாக புலம்பெயர் தமிழர்களிடமுள்ள தமது எதிர்பார்ப்புக்களையும் கலந்து கொண்டவர்களிடம், கலந்துரையாடிக் கொண்டிருக்கையில், இடை நடுவில் அமர்த்தப்பட்டிருந்த, STCC என்றழைக்கப்படும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அடிதடிக்கும்பல் கூட்டத்தை குழப்பும் வண்ணம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

“நடந்து கொண்டிருக்கும் கூட்டம் தமது கட்டுப்பாட்டில் நடைபெறுவதாகவும், தாமே சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், தமக்கெதிராக பல அமைப்புக்கள் சுவிஸில் உருவாகி செயற்படுவதாகவும், வெகுவிரைவாக அவர்களை தாம் அடித்து அடிபணிய வைப்போம்” என்று சிவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஜெனீவா மாநிலத் தளபதியும், அவ்வமைப்பின் களகமடக்கும் பிரிவான தமிழ் காவற்துறையின் கட்டளைத் தளபதியுமான றயீவன் அவர்கள் சூழுரைத்தார்.

அதைத் தொடர்ந்து சூரிச் மானில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கையாளும், TYO எனும் இளையோர் அமைபின் உறுப்பினருமான தீபன் என்றழைக்கப்படும் தீபறாச் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய அமைப்புக்களையும், தனி மனிதர்களையும் தரக்குறைவாக விமர்சித்ததுடன் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தவும் முயற்சித்தார்.

இக்கூட்டத்தில் ஊடகங்கள் திட்டமிட்டு அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், புகைப்படமெடுக்க முயன்ற பெண்ணொருவருக்கு வி.ரகுபதி அவர்களின், ஜெனீவா பிரதிநிதி றயீவன் தகாத வார்த்தைகளால் திட்டி தடுத்து நிறுத்தினார்.

கூட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கத்தையும் திசைதிருப்பிய “சுவிஸ் புலிகள்” எனும் இக்குழு, இறுதியாக கடும் வார்த்தைகளால் கலந்து கொண்ட ஏனைய அமைப்புக்களை எச்சரித்ததுடன், தாக்குதல் நடத்த முயன்ற போது பொதுமக்கள் தடுத்து நிறுத்தி, சுவிஸ் புலிகளுக்கு கடுமையாக எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக “தமிழர் இயக்கம்” என்றழைக்கப்படும் அமைப்பின் பொஸ்கொ மற்றும் காண்டீபன் என்றழைக்கப்படுபவர்கள் மீது தீபறாசும், றயீவனும் ரவுடிகள் போல் இரும்புக்கம்பி கொண்டு தாக்க முழற்சித்திருப்பதோடு, அதே அமைப்பின் பொறுப்பாளியான குருபரன் என்பவரை “கொலை செய்து, போட்டோவை வீட்டில் கொடுப்பேன்” என்று ரஜீவன் அச்சுறுத்தியதாக, கலந்து கொண்ட பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

ஏன் தமிழர் இயக்க உறுப்பினர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது? என்ற கேள்விகளோடு கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சிலரிடம் தொடர்பு கொண்டு வினாவிய போது, “தமிழர் இயக்கம் தாயகத்தில் இருந்து வந்த உறவுகளுக்கான விசா நடைமுறைகளையும், ஐ.நா மனித உரிமைகள் சபை வரை சென்று பேசுவதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டனர் என்றும் தெரிய வந்துள்ளது. இவ் வேலைத்திட்டங்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் இடம்பெறவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே இத் தாக்குதலின் வெளிப்பாடு” என்று பொதுமக்கள் கருத்து தெருவித்திருந்ததுடன், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கிற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர்.

செய்தி மூலம்.. -கனியன் பூங்குன்றன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*