;
Athirady Tamil News

“புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், “நினைவு தினத்தில்” உதவி வழங்கல்.. (படங்கள் & வீடியோ) -பகுதி-02

0

“புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், நினைவுதினத்தில் உதவி வழங்கல்.. (படங்கள் & வீடியோ) -பகுதி-02

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும் அவருடன் இணைந்து “விடுதலைக்கு விதையான” திரு.தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ), திரு முருகேசு குணரட்ணம் (வினோ) ஆகியோரின் பத்தொன்பதாவது நினைவுதினம் “புளொட்” மற்றும் அதன் அரசியல் பிரிவான “டிபிஎல்எப்” தோழர்கள், ஆதரவாளர்களினால் உலகெங்கும் நினைவு கூறப்படுகின்றது…

மேற்படி தோழர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களையும், மற்றும் “விடுதலைப் போராட்டத்தில் மரணித்த” புளொட் செயலதிபர் உட்பட மரணித்த புளொட் தோழர்கள், ஏனைய அனைத்து இயக்கத் தலைவர்கள் & அனைத்துப் போராளிகள், பொதுமக்கள் ஆகியோரின் நினைவாக, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) வெளிநாட்டுக் கிளைத் தோழர்கள் சிலரின் நிதிப் பங்களிப்பில், “அதிரடி” இணையத்துக்கு ஊடாக, இலங்கையில் “வாழ்வாதார உதவிகள்” மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக இன்றையதினம் மறைந்த தோழர் மாணிக்க தாசன் மற்றும் தோழர்கள் நினைவாக “அதிரடி” இணையதளத்தின் சார்பில், வெளிநாட்டு புளொட் தோழர்கள் சிலரின் நிதி அணுசரனையில், வவுனியா மன்னார் வீதி 7ஆம் ஒழுங்கை வேப்பங்குளத்தில் வசிக்கும் மிகவும் வறிய நிலையில் நாளாந்தம் நடந்து, சிறிய அளவில் கருவாடு வியாபாரம் செய்யும் மூன்று பிள்ளைகளின் விதவைத் தாயாரின் வேண்டுகோளுக்கமைய ஒரு தொகை பணம் கருவாட்டு வியாபாரத்துக்காக தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில். தமிழ் விருட்சத்தின் செயலாளர் மாணிக்கம் ஜெகன் அவர்களும் கலந்து கொண்டார்.

மேலும் உதவி பெற்றவர் கருத்து தெரிவிக்கையில்.. “எனக்கு விசேட தேவை உள்ள மகள் இருக்கிறார். உதவி செய்த *அதிரடி” நிறுவனத்திற்கும், “புலம்பெயர் தோழர்களுக்கும்” நன்றி தெரிவிப்பதோடு, வயோதிபம் காரணமாக என்னால் நடக்க முடியாமல் இருப்பதால் வீட்டிலே ஒரு சிறு கடை போட்டுத் தந்தால் பேருதவியாக இருக்கும்” என கேட்டுக் கொண்டார்.

தகவல் & வீடியோ உதவி.. திரு.மாணிக்கம் ஜெகன் -வவுனியா.

“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், “நினைவு தினத்தில்” உதவி வழங்கல்.. -பகுதி-01 (படங்கள் & வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*