;
Athirady Tamil News

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ)

0

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு இறுப்பிட்டி வீதிக்கும், குறிகட்டுவான் வீதிக்கும் நடுவில் உள்ள நான்காம் வட்டாரமான நுணுக்கல் பிரதேசத்தில் காந்தி சனசமூக நிலையம், புங்குடுதீவு மேற்கு கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் நுனுக்கல் வைரவர் கோயில் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இக்கிணறானது இடம்பெயர்வுக்கு முதல் பொதுமக்களின் பாவனைக்கு பாவிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் இக்கிணறானது குப்பை கூளங்களால் மூடப்பட்டு விட்டதாகவும்..,

இதுவோர் தனியாரின் காணியாகவும், கிணறாகவும் உள்ள போதிலும், அக்காணியின் உரிமையாளர்கள், பொதுமக்களின் தேவை கருதி எல்லை விட்டு தரப்பட்டு உள்ளதாகவும், இக்கிணறை “சுவிஸ் ஒன்றியம்” மீள புதிதாக கட்டி தரும்படியும், அதனை செய்தால் இக்கிணற்றை அண்டி உள்ள சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிரயோசனப்படும் எனவும் பிரதேச சபை உறுப்பினர் திரு.வசந்தகுமார் ஊடாக, அப்பிரதேச மக்கள் கேட்டு இருந்தனர்.

இதனை அடுத்து சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் நான்காம் வட்டார நுணுக்கல் பிரதேசத்தில் உள்ள “பொதுக்கிணறு” மீள்புனரமைக்கும் வேலை, கடந்த 25.08.2018 ஆரம்பமாகியது நீங்கள் அறிந்ததே.

கடந்த 25.08.2018 அன்று ஆரம்பமாகிய, புங்குடுதீவு “நுணுக்கல் பொதுக்கிணறு” மீள்புனரமைத்து புதிதாக கிணற்றைக் கட்டிக் கொடுக்கும் வேலைத்திட்டம் மிகவிரைவில் முடிவுறுவதுக்காக அயராது பாடுபடும் புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், சமாதான நீதவானும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான “சமூக சேவகி” திருமதி.த.சுலோசனாம்பிகை ஆகியோருடன் திரு.வனோஜன் தலைமையிலான, அவர்களின் கட்டிட தொழிலாளர்கள் குழுவினருக்கும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில் நன்றிகள் பல.

அதேபோல் மேற்படி கிணற்றுவேலை ஆரம்பமாகிய நாள்முதல் தினமும் பலதடவைகள் அங்குள்ளவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, மேற்படி வேலைகள் துரிதகதியில் முடிவுற, அயராது செயல்பட்டுக் கொண்டிருக்கும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுக்கும் சுவிஸ் ஒன்றியத்தின் “நிர்வாக சபை” சார்பில் நன்றிகள் .

மேலும் மேற்படிக் கிணறு பல வருடங்களாக பாவிக்கப்படாமல், குப்பைக்குழியாக காணப்படுவதினால் நீரூற்று வருமா? எனும் சந்தேகத்தையும் தாண்டி, வேலைகளை ஆரம்பித்த முதல் இருநாளும் பெருமளவான நீரூற்று வெள்ளம் போல் வந்து, சிரமத்தையும் எதிர்நோக்கி உள்ள போதிலும், இவ்வேலைத் திட்டத்தை மிகவிரைவில் வெற்றிகரமாக முடிப்பதுக்கு திடசங்கற்பம் பூண்டு செயற்பட்டு வருகிறோம். தொடர்ச்ச்சியாக நடைபெற்ற மீள்புனரமைப்பு வேலை காரணமாக கிணற்றின் மீள்புனரமைப்பு வேலை முடிவுறும் தருவாயில் உள்ளது. தற்போதும் தொடர்ச்சியாக மீள்புனரமைப்பு வேலை நடைபெற்று வருகிறது.

இதேவேளை புங்குடுதீவு கறந்தெளி கிணற்று வேலைகளும் அக்கிணற்று சுற்றுப் பிரதேசம் துப்பரவாக்கும் வேலைகளும் ஆரம்பமாகி நடைபெற்று வரும் சூழ்நிலையிலும், அக்கிணற்று காணிக்கு தனியார் அமைப்பொன்று உரிமை கோரும் சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கப்படும் காரணத்தினால், அக்கிணற்றின் வேலை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாமல், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

அக்கிணறானது பல (சுமார் இருபத்தைந்து) வருடங்களுக்கு மேலாக எவரும் உரிமை கோராத போதிலும், தொடர்ச்சியாக பொதுமக்கள் பாவித்து வந்ததினாலும், அக்கிணற்றின் தண்ணீர் பாவிக்கும் வகையிலும் உள்ளதினால், அதனை திருத்தி புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டோம். ஆயினும் எதிர்காலத்திலும் இதுவோர் மக்கள் பாவனைக்கு “பொதுக்கிணறாக” பயன்படுத்தும் அனுமதி அந்த நிறுவனத்தால் தரப்படும் பட்ஷத்திலேயே, அக்கிணறு புதிதாக கட்டிக் கொடுக்கப்படும் என்பதை அனைவருக்கும் அறிய தருகிறோம்.

(இதில் புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேசக் கிணறு” புனரமைக்கப்படும் வீடியோவும், புகைப்படங்களும் இணைக்கப்பட்டு உள்ளதுடன், புங்குடுதீவு “கறந்தெளிப் பிரதேச கிணறு” துப்பரவாக்கப்பட்டதுடன், அக்கிணற்றின் சுற்றுச்சூழல் காட்டுப் பிரதேசம் போன்று காணப்பட்டதினால், அதனை முழுமையாக துப்பரவாக்கிய வீடியோக்களும் இணைக்கப்பட்டு உள்ளது)

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
07.09.2018

புங்குடுதீவு நுனுக்கல் கிணற்றின் புனரமைப்பு (பகுதி-001) -28.08.2018

புங்குடுதீவு நுனுக்கல் கிணற்றின் புனரமைப்பு (பகுதி-002) -07.09.2018

புங்குடுதீவு கறந்தெளி கிணற்றின் புனரமைப்பு (பகுதி-001) -28.08.2018

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட, புங்குடுதீவு கரந்தெளி, நுணுக்கல் கிணறுகளின் புனரமைப்பு.. (படங்கள் &வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + six =

*