;
Athirady Tamil News

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு…! (படங்கள் & வீடியோ)

0

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைத்து பொதுமக்களிடம் கையளிப்பு…! (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு இறுப்பிட்டி வீதிக்கும், குறிகட்டுவான் வீதிக்கும் நடுவில் உள்ள நான்காம் வட்டாரமான நுணுக்கல் பிரதேசத்தில் காந்தி சனசமூக நிலையம், புங்குடுதீவு மேற்கு கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் நுனுக்கல் வைரவர் கோயில் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இக்கிணறானது இடம்பெயர்வுக்கு முதல் பொதுமக்களின் பாவனைக்கு பாவிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் இக்கிணறானது குப்பை கூளங்களால் மூடப்பட்டு விட்டதாகவும்..,

இதுவோர் தனியாரின் காணியாகவும், கிணறாகவும் உள்ள போதிலும், அக்காணியின் உரிமையாளர்கள், பொதுமக்களின் தேவை கருதி எல்லை விட்டு தரப்பட்டு உள்ளதாகவும், இக்கிணறை “சுவிஸ் ஒன்றியம்” மீள புதிதாக கட்டி தரும்படியும், அதனை செய்தால் இக்கிணற்றை அண்டி உள்ள சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிரயோசனப்படும் எனவும் பிரதேச சபை உறுப்பினர் திரு.வசந்தகுமார் ஊடாக, அப்பிரதேச மக்கள் கேட்டு இருந்தனர்.

இதனை அடுத்து சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் நான்காம் வட்டார நுணுக்கல் பிரதேசத்தில் உள்ள “பொதுக்கிணறு” மீள்புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கும் வேலை, கடந்த 25.08.2018 ஆரம்பமாகியது நீங்கள் அறிந்ததே.

கடந்த 25.08.2018 அன்று ஆரம்பமாகிய, புங்குடுதீவு “நுணுக்கல் பொதுக்கிணறு” மீள்புனரமைத்து புதிதாக கிணற்றைக் கட்டிக் கொடுக்கும் வேலைத்திட்டம் முடிவுற்று, இன்றையதினம் “பொதுமக்களிடம் கையளிக்கும் வைபவம்” சிறப்பாக நடைபெற்றது.

புங்குடுதீவு இறுப்பிட்டி பெரியபுலம் பிள்ளையார் கோவில் மற்றும் இறுப்பிட்டி பிட்டியம்பதி காளி கோவில் ஆகியவற்றின் மதகுருவான திரு.கருணாகர சர்மா அவர்களின் இறையாசியுடன், இன்றையதினம் “பொதுமக்களிடம் கையளிக்கும் வைபவம்” சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், சமாதான நீதவானும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான “சமூக சேவகி” திருமதி.த.சுலோசனாம்பிகை, அப்பிரதேச மக்களினால், வேலணை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர் திரு.வசந்தகுமார், நுணுக்கல் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு.ஸ்ரீ, புங்குடுதீவு மேற்கு கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் திரு.ராசா, ஆகியோருடன் “கட்டிடக் கலைஞர்” திரு.வனோஜன் தலைமையிலான, அவர்களின் கட்டிட தொழிலாளர்கள், மற்றும் அப்பிரதேச பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

மேற்படி நிகழ்வில் உரையாற்றிய, சமாதான நீதவானும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், “இதுபோன்ற நல்ல விடயங்களை நிறைவேற்றித் தருவதுக்கு “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” தயாராகவே உள்ளது என்பதை மனதில் கொள்ளும் அதேவேளை, இதனை பயனுள்ள முறையில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும்” தெரிவித்தார்.

அத்துடன் மேற்படி நிகழ்வில் உரையாற்றிய, புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான “சமூக சேவகி” திருமதி.த.சுலோசனாம்பிகை அவர்கள், “மேற்படிக் கிணறை சிறந்த முறையில் பராமரித்து, பயன்படுத்த வேண்டியவர்கள் இப்பிரதேச மக்களே என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டுமெனக்” கேட்டுக் கொண்டார்.

இதேவேளை இந்நிகழ்வில் உரையாற்றிய, பிரதேச சபை உறுப்பினர் திரு.வசந்தகுமார் அவர்கள் “இப்பிரதேச மக்களின் வேண்டுகோளை ஏற்று, “நுணுக்கல் கிணற்றை” மீள்புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுத்து தந்தத்துக்கு “சுவிஸ் ஒன்றியத்துக்கு”, இப்பிரதேச மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இதேவேளை பொதுமக்களின் பாவனைக்காக, தமது காணியை விட்டுத் தந்த திரு.திருமதி ரூபி குடும்பத்துக்கும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில் எமது நன்றிகள் ..

அத்துடன் எமது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” நிர்வாகசபையின் வேண்டுகோளை ஏற்று, புங்குடுதீவு “நுணுக்கல் பொதுக்கிணறு” மீள்புனரமைத்து புதிதாக கிணற்றைக் கட்டிக் கொடுக்கும் வேலைத்திட்டம் முடிவுறும் வரை, மேற்படி கிணற்றுவேலை ஆரம்பமாகிய நாள்முதல் தினமும் பலதடவைகள் அங்குள்ளவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, மேற்படி வேலைகள் துரிதகதியில் முடிவுற, அயராது செயல்பட்ட “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுக்கும், ஒன்றிய உறுப்பினர்களான சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களுக்கும், சுவிஸ் ஒன்றியத்தின் “நிர்வாக சபை” சார்பில் நன்றிகள் .

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
12.09.2018

 

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட, புங்குடுதீவு கரந்தெளி, நுணுக்கல் கிணறுகளின் புனரமைப்பு.. (படங்கள் &வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*