;
Athirady Tamil News

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “கறந்தெளிக் கிணறு” & “சங்கிலிக் கிணறு” மீள்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

0

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “கறந்தெளிக் கிணறு” & “சங்கிலிக் கிணறு” மீள்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், அண்மையில் புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்ட, புங்குடுதீவு “பொன்னன் கிணறு”, புங்குடுதீவு “ஊரதீவுப் பொதுக் கிணறு”, புங்குடுதீவு “நுணுக்கல் கிணறு” ஆகியவற்றினைத் தொடர்ந்து, இன்றையதினம் புங்குடுதீவு 11, 12, 01 ம் வட்டார மக்களை உள்ளடக்கிய முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள “கரந்தெளி பொதுக்கிணறு” மற்றும் புங்குடுதீவு நான்காம், ஐந்தாம் வடடாரத்தை உள்ளடக்கிய “சங்கிலிக் கிணறு” ஆகியவற்றை, புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்படும் வேலைகளும், “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” ஆரம்பமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

“புங்குடுதீவு கறந்தெளிக் கிணறு”..

மேற்படி “கரந்தெளி பொதுக்கிணற்றை” மீளபுனரமைத்து புதிதாகக் கட்டித் தருமாறும், மூன்று வட்டார மக்களும் பாவிக்கக்கூடிய இக்கிணறானது இடிந்து போய்க் காணப்படுவதுடன், அந்த கிணற்றுப் பகுதி, மிகவும் புதர்கள் அடங்கி காட்டுப் பிரதேசம் போன்று காணப்படுவதாகவும், ஆகவே இதனை புனரமைத்து புதிதாகக் கட்டித் தந்தால் இப்பிரதேச மக்கள் நன்மை அடைவார்களென” சுமார் நாற்பது குடும்பத்தினர் எழுத்து மூலம் (இரு கடிதங்கள் எமக்கு நேரடியாகவும், அங்குள்ள எமது செயற்பாட்டாளர் திருமதி.த.சுலோசனாம்பிகை மூலமும்) முன்வைத்த கோரிக்கையை ஏற்று, இந்நடவடிக்கை இன்றையதினம் ஆரம்பமாகி உள்ளது.

இதேவேளை மேற்படி கிணற்றுவேலை மூன்று வருடங்களுக்கு முன்னரே சுவிஸ் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட போது, தனிப்பட்ட அமைப்பு ஒன்றினால் தாம் செய்யவுள்ளதாக தெரிவித்ததை அடுத்து நாம் இத்திட்டத்தை கைவிட்டு இருந்தோம், ஆயினும் அவர்களினால் மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில், அப்பிரதேசத்தை சேர்ந்த பலரும் எழுத்துமூலம் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து மேற்படி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் “புங்குடுதீவுக் கறந்தெளிக் கிணறானது” மிகவும் புதர்கள் அடங்கிய காட்டுப் பகுதி போல் உள்ளதினாலும், இக்கிணறு புதிதாக அமைக்கப்படும் “குடியிருப்புத் திட்டத்துக்கு” முன்பாகக் காணப்படுவதினாலும், முதலில் அப்பகுதி துப்பரவாக்கியே, கிணறை புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்க வேண்டுமெனும் நிலைப்பாட்டில், அக்கிணற்றின் பிரதேசம் இயந்திரம் மூலம் துப்பரவாக்கும் நிகழ்வு கடந்தவாரம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

“புங்குடுதீவு சங்கிலிக் கிணறு”..

மேலும் புங்குடுதீவு இறுப்பிட்டி வீதியில் புங்குடுதீவு நான்காம், ஐந்தாம் வட்டார மக்கள் பாவனைக்கு உகந்த “சங்கிலிக் கிணறு” எனும் இக்கிணறானது, இதுவோர் தனியாரின் காணியாகவும், கிணறாகவும் உள்ள போதிலும், அக்காணியின் உரிமையாளர்களான புங்குடுதீவு 10 ம் & 12 ம், வட்டாரத்தை சேர்ந்த திரு.திருமதி மாணிக்கவாசகர் பூலோகநாயகி அவர்கள், “பொதுமக்களின் தேவை கருதி எல்லை விட்டு தரப்பட்டு உள்ளதாகவும், ஆகவே இதனை மீள்புனரமைத்து, புதிதாகக் கட்டிப் பொதுமக்களுக்கு உதவுமாறு கோரி இருந்தனர். இவர்களின் சுவிஸில் உள்ள உறவுகளும் இந்த உறுதிமொழியை தந்துள்ளனர்.

இதேபோல் இக்கிணறை “சுவிஸ் ஒன்றியம்” மீள புதிதாக கட்டி தரும்படியும், அதனை செய்தால் இக்கிணற்றை அண்டி உள்ள குடும்பங்கள் பிரயோசனப்படும் எனவும் பிரதேசசபை உறுப்பினர் திரு.க.வசந்தகுமார் ஊடாக, அப்பிரதேச மக்கள் கேட்டு இருந்தனர்.

அதேபோல் உலக மைய தலைவரான அண்ணாதம்பி எனும் திரு.பிள்ளைநாயகம் சதீஷ் அவர்களும் அப்பிரதேச மக்களின் “பொதுநன்மை” கருதி இக்கோரிக்கையை வைத்ததுடன், காணிக்கு சொந்தமானவர்களுடன் கதைத்து, “பொதுக்கிணறாக” பொதுமக்கள் பாவித்து வந்த அக்கிணறை, தொடர்ந்தும் “பொதுமக்களின் பாவனைக்காக” பாவிப்பதுக்கான உத்தரவாதத்தையும் பெற்றுத் தந்து இருந்தார்.

மேற்படிக் கிணற்று வேலைகள் குறித்து, கடந்தவாரம் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” நிர்வாக சபையானது, தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில் ஒன்றுகூடி, “மழை காலத்துக்கு முன்பாக, முடிந்தவரை கிணறுகளை புனரமைத்து புதிதாகக் கட்டி கொடுப்பதென” எடுத்த தீர்மானத்துக்கு அமைய இவ்வேலைகள் இன்றையதினம் ஆரம்பமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வுகளில், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், சமாதான நீதிவானும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான திருமதி.த.சுலோசனாம்பிகை, புங்குடுதீவில் இப்பிரதேசத்து மக்களினால் வேலணை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட, பிரதேச சபை உறுப்பினரான திரு.வசந்தகுமார், மற்றும் அப்பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

(புங்குடுதீவில் உள்ள கறந்தெளிக் கிணறு, மற்றும் சங்கிலிக் கிணறுகளின் தற்போதைய நிலை குறித்த படங்களும் வீடியோக்களும் கீழே இணைக்கப்பட்டு உள்ளது)

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
20.09.2018

*** “சுவிஸ் ஒன்றியத்தின்” கலந்துரையாடல் கூட்டம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை 23.09.2018 மாலை ஐந்து மணியளவில் செயலாளரின் (திருமதி.செல்வி சுதாகரன்) வாசல்ஸ்தலத்தில் நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறிய தருகிறோம்.

(மேற்படிக் கலந்துரையாடலில் தற்போது புனரமைத்து கட்டிக் கொடுக்கப்படும் கிணற்று வேலைகளின் நிலைப்பாடுகள், எதிர்கால செயல்பாடுகள், நிர்வாகத்தில் & செயற்குழுவில் உள்ளோரின் சரீர பங்களிப்பு & தொடர்பில் இல்லாமை குறித்து உரையாட உள்ளதினால், அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி..)

**புங்குடுதீவு கரந்தேலியில் உள்ள பொதுக்கிணறுகளில் ஒன்று கட்டுதல் – சுவிஸ் ஒன்றியம் (2016)

** புங்குடுதீவு “கரந்தெளிக் கிணற்றின்” அகோர நிலை.. 25.08.2018

**புங்குடுதீவு கறந்தெளி கிணறின் மற்றும் சுற்றுப் பிரதேச புனரமைப்பு -28.08.2018

**புங்குடுதீவு “கரந்தெளிக் கிணற்றின்” புனரமைப்பு -20.09.2018

**** புங்குடுதீவு “சங்கிலிக் கிணற்றின்” புனரமைப்பு -20.09.2018

*** “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” புதிய நிர்வாகசபை இவ்வருடம் பொறுப்பேற்ற பின்னர், “நீர் பிரச்சினைக்கு” முன்னுரிமை கொடுத்து, எம்மால் முன்னெடுக்கப்பட்ட, “பொதுமக்களின் பாவனைக்கான, பொதுக்கிணறுகள் புனரமைத்து, புதிதாகக் கட்டிக் கொடுக்கப்படும்” தீர்மானத்துக்கு அமைய, இதுவரை எம்மால் செய்து முடிக்கப்பட்டு உள்ள கிணறுகள் தொடர்பான வீடியோக்கள் இவை…

**புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..!

**புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு..!

**புங்குடுதீவு மடத்துவெளிக் கிணற்றின் ஆரம்ப நிலை..!

**புங்குடுதீவு மடத்துவெளிப் பொதுக்கிணறு மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு..! (001)

**புங்குடுதீவு மடத்துவெளிப் பொதுக்கிணறு மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு..! (002)

**புங்குடுதீவு நுணுக்கல் பொதுக்கிணறு ஆரம்பநிலை..

**புங்குடுதீவு “நுணுக்கல் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு.. (பகுதி-001)

**புங்குடுதீவு “நுணுக்கல் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு.. (பகுதி-002)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − two =

*