;
Athirady Tamil News

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “கறந்தெளிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

0

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால் புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “கறந்தெளிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், அண்மையில் புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்ட, புங்குடுதீவு “பொன்னன் கிணறு”, புங்குடுதீவு “ஊரதீவுப் பொதுக் கிணறு”, புங்குடுதீவு “நுணுக்கல் கிணறு” ஆகியவற்றினைத் தொடர்ந்து, மூன்று வாரத்துக்கு முன்னர், புங்குடுதீவு 11, 12, 01 ம் வட்டார மக்களை உள்ளடக்கிய முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள “கரந்தெளி பொதுக்கிணறு” புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்படும் வேலைகளும், “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” மூன்று வாரத்துக்கு முன்னர் ஆரம்பமாகி இருந்தது நீங்கள் அறிந்ததே.

“புங்குடுதீவு கறந்தெளிக் கிணறு”..

மேற்படி “கரந்தெளி பொதுக்கிணற்றை” மீளபுனரமைத்து புதிதாகக் கட்டித் தருமாறும், மூன்று வட்டார மக்களும் பாவிக்கக்கூடிய இக்கிணறானது இடிந்து போய்க் காணப்படுவதுடன், அந்த கிணற்றுப் பகுதி, மிகவும் புதர்கள் அடங்கி காட்டுப் பிரதேசம் போன்று காணப்படுவதாகவும், ஆகவே இதனை புனரமைத்து புதிதாகக் கட்டித் தந்தால் இப்பிரதேச மக்கள் நன்மை அடைவார்களென” சுமார் நாற்பது குடும்பத்தினர் எழுத்து மூலம் (இரு கடிதங்கள் எமக்கு நேரடியாகவும், அங்குள்ள எமது செயற்பாட்டாளர் திருமதி.த.சுலோசனாம்பிகை மூலமும்) முன்வைத்த கோரிக்கையை ஏற்று, இந்நடவடிக்கை ஆரம்பமாகி இருந்தது..

இதேவேளை மேற்படி கிணற்றுவேலை மூன்று வருடங்களுக்கு முன்னரே சுவிஸ் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட போது, தனிப்பட்ட அமைப்பு ஒன்றினால் தாம் செய்யவுள்ளதாக தெரிவித்ததை அடுத்து நாம் இத்திட்டத்தை கைவிட்டு இருந்தோம், ஆயினும் அவர்களினால் மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில், அப்பிரதேசத்தை சேர்ந்த பலரும் எழுத்துமூலம் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து மேற்படி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

அதேபோல் “புங்குடுதீவுக் கறந்தெளிக் கிணறானது” மிகவும் புதர்கள் அடங்கிய காட்டுப் பகுதி போல் உள்ளதினாலும், இக்கிணறு புதிதாக அமைக்கப்படும் “குடியிருப்புத் திட்டத்துக்கு” முன்பாகக் காணப்படுவதினாலும், முதலில் அப்பகுதி துப்பரவாக்கியே, கிணறை புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்க வேண்டுமெனும் நிலைப்பாட்டில், அக்கிணற்றின் பிரதேசம் இயந்திரம் மூலம் துப்பரவாக்கும் நிகழ்வு நடைபெற்று, காட்டுப் பிரதேசமாக இருந்த பிரதேசம், தற்போது விளையாட்டு மைதானம் போல் காணப்படுவதும் குறிப்பிடத் தக்கது.

மேற்படிக் கிணற்று வேலைகள் குறித்து, ஒருமாதத்துக்கு முன்னர் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” நிர்வாக சபையானது, தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில் ஒன்றுகூடி, “மழை காலத்துக்கு முன்பாக, முடிந்தவரை கிணறுகளை புனரமைத்து புதிதாகக் கட்டி கொடுப்பதென” எடுத்த தீர்மானத்துக்கு அமைய இவ்வேலைகள் மூன்று வாரத்துக்கு முன்னர் ஆரம்பமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று வாரமாக நடைபெற்ற, “கரந்தெளி பொதுக்கிணறு” புனரமைத்து, புதிதாகக் கட்டிக் கொடுக்கப்படும் வேலைகள் நேற்றையதினம் (30.09.2018) நிறைவு பெற்று, பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், சமாதான நீதிவானும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான திருமதி.த.சுலோசனாம்பிகை, புங்குடுதீவில் இப்பிரதேசத்து மக்களினால் வேலணை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட, பிரதேச சபை உறுப்பினரான திரு.வசந்தகுமார், மற்றும் அப்பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இதேவேளை எமது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” நிர்வாகசபையின் வேண்டுகோளை ஏற்று, புங்குடுதீவு “கறந்தெளி பொதுக்கிணறு” மீள்புனரமைத்து புதிதாக கிணற்றைக் கட்டிக் கொடுக்கும் வேலைத்திட்டம் முடிவுறும் வரை, மேற்படி கிணற்றுவேலை ஆரம்பமாகிய நாள்முதல், தினமும் பலதடவைகள் அங்குள்ளவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, மேற்படி வேலைகள் துரிதகதியில் முடிவுற, அயராது செயல்பட்ட “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுக்கும், ஒன்றிய உறுப்பினர்களான “சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களுக்கும்”, சுவிஸ் ஒன்றியத்தின் “நிர்வாக சபை” சார்பில் நன்றிகள் .

** ஒன்றியத்தின் நிதி நிலைமை..

புங்குடுதீவு பகுதிகளில் தொடர்ச்ச்சியாக “பொதுக் கிணறுகளை” புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்படும் நடவடிக்கை “சுவிஸ் ஒன்றியத்தால்” மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், ஒன்றியத்தில் நிதி இல்லாத சூழ்நிலை குறித்தும் அறிவித்து இருந்தோம். இதுக்கு உடனடியாக “ஒன்றிய உறுப்பினர்களை” இவ்வருட சந்தாவை கட்டுமாறு கேட்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
(ஆகவே அன்பான சுவிஸ் புங்குடுதீவு உறவுகளே உங்களின் இவ்வருட சந்தாவை உடன் செலுத்தி எமது “ஊர் நோக்கிய” செயற்பாட்டுக்கு கை கொடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.)

(புங்குடுதீவில் உள்ள கறந்தெளிக் கிணறு, தற்போதைய நிலை குறித்த படங்களும் வீடியோக்களும் கீழே இணைக்கப்பட்டு உள்ளது)

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
01.10.2018

படங்கள் & வீடியோ.. திரு.ஐ.சிவசாந்தன் (யாழ்ப்பாணம்)

புங்குடுதீவு “கரந்தெளிக் கிணற்றின்” அகோர நிலை.. 05.08.2018

புங்குடுதீவு கறந்தெளி கிணற்றின் புனரமைப்பு (பகுதி-001) -28.08.2018

புங்குடுதீவு “கரந்தெளிக் கிணற்றின்” புனரமைப்பு -20.09.2018

புங்குடுதீவு கறந்தெளிக் கிணறு புனரமைப்பு -25.09.2018

புங்குடுதீவு கறந்தெளிக் கிணறு, பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு -30.09.2018

புங்குடுதீவில் “ஊரதீவு கிணறு, பொன்னன் கிணறு, நுனுக்கல் கிணறு” சுவிஸ் ஒன்றியத்தால் புனரமைத்த பின்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + eighteen =

*