;
Athirady Tamil News

வடமாகாண ஆளுனருடன், “மக்களின் எதிர்கால வாழ்வை வளப்படுத்த” சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடனான சந்திப்பு..! (அறிவித்தல்)

0

வடமாகாண ஆளுனருடன் “மக்களின் எதிர்கால வாழ்வை வளப்படுத்த” சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடனான சந்திப்பு..! (அறிவித்தல்)

வட மாகாணத்தில் உள்ள மக்களின் வாழ்வாதார, பொருளாதாரத்தை வளப்படுத்தும் முகமாக, “விவசாயம், மீன்பிடி, இறால் பண்ணை, விடுதி, வர்த்தக நிலையங்கள் அமைத்தல், கைத்தொழில்” போன்றவற்றை வட மாகாணத்தில் ஏற்படுத்தி, அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், இதற்கென முதலீடு செய்ய விரும்புபவர்களுடனான கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்துவதுக்காக, ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்யும் வட மாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் குரே, வடமாகாண ஆளுநரின் செயலாளரான திரு.இலட்சுமணன் இளங்கோ, டான் டிவி நிர்வாகி திரு.குகநாதன் மற்றும் வடமாகாண ஆளுநரின் அதிகாரிகள் குழுவுடனான சந்திப்பு ஒன்றை எதிர்வரும் 11.10.2018 அன்று வியாழக்கிழமை மாலை 05.30 க்கு (17.30) பேர்ண் மாநிலத்தில் Bümpliz str – 21, 3027 BERN எனும் முகவரியில் ஏற்பாடு செய்து உள்ளோம்.

“அரசியலை தவிர்த்து” மக்களுக்கு சேவையாற்ற முன்வரும் அனைத்து வடகிழக்கு மக்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பாக வர்த்தகப் பெருமக்களும், முதலீட்டாளர்களும் கலந்து கொள்வதுடன், இதுவரை காலமும் நீங்கள் வடமாகாணத்தில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த இருந்த நெருக்கடிகளை தவிர்த்து, அதுக்குரிய அனுமதிகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள ஏதுவாக, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடம்:- பேர்ண் மாநிலத்தில் Bümpliz str – 21, 3027 BERN
காலம் & நேரம்:- 11.10.2018 வியாழக்கிழமை மாலை 05.30 க்கு (17.30)

மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கும்….
077.9485214, 079.9373289

“மக்களின் வாழ்வை வளப்படுத்த ஒன்றுபடுவோம்,
ஒன்றுபட்டு மக்களின் வாழ்வை வளப்படுத்துவோம்”

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − seven =

*